Type Here to Get Search Results !

4th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திற்கு உறுப்பினராக ஐகோர்ட் நீதிபதி வேணுகோபால் நியமனம்
  • தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் டெல்லியில் உள்ளது. 
  • அவருடன் அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ் டாயல் கரே உள்ளிட்ட 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பெல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற இயக்குநர் சொக்கலிங்கம் உள்ளிட்ட 18 பேர் தொழில்நுட்ப உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
ஐபில் வரலாற்றில் புதிய சாதனை படைத்த 17 வயது சிறுவன் ரியான் பராக்
  • ரியான் பராக் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான (53வது) போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த வயதில் ( 17 வயது 175 நாட்கள்) அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
  • இதற்கு முன்னதாக, ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் 18 வயது 169 நாட்களில் அடித்த அரைசதம் மிகக்குறைந்த வயதில் அடித்ததாக இருந்தது. அந்த சாதனையை பிரித்திவி ஷா அதே 18 வயது 169 நாட்களில் அடித்து சமன் செய்தார்.
  • ரிஷப் பண்ட் 18 வயது 212 நாட்களில் ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்தார். அதேபோல், ஷுப்மன் கில் 18 வயது 237 நாட்களில் அரைசதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஈரானின் யுரேனிய ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை
  • செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவித்தாலும், அந்த ஒப்பந்தம் ரத்தாகாமல் இருப்பதற்காக வழங்கியுள்ள சலுகைகள் தொடர்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.
  • எனினும், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகாமல் பாதுகாப்பதற்காக, அந்த ஒப்பந்தத்தின் பெரும்பான்மையான அம்சங்கள் தொடர்வதற்கு வழங்கியிருந்த அனுமதியை அமெரிக்கா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
  • தனது அணு சக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்காக இல்லை என ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை மெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் மேற்கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel