Type Here to Get Search Results !

2nd MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

பெரம்பலூர் அருகே 400 ஆண்டு பழமையான கல்செக்கு கண்டுபிடிப்பு
  • பெரம்பலூர் அருகே சுமார் 400ஆண்டு பழமையான கல்செக்கு. பெரம்பலூர் மாவட்டத்தில் செஞ்சேரி, சத்திரமனை, வேலூர் ஆகிய கிராமங்க ளில் அப்பகுதிகளில் உள்ள சிவாலயங்க ளுக்கு திருவிளக்கு பூஜைகளுக்கு எண்ணெய் வழங்க உபயமாக வசதி படைத்த நபர்களால் அக்காலத்தில் அந்தந்த ஊர்களின் பயன்பாட்டிற்காக கல்செக்கு செய்து கொடுத்திருப்பது தெரிய வருகிறது. 
  • இதில் மற்ற ஊர்களில் 20ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் காணப்பட்டாலும் பாளையத்தில் மட்டும் 393ஆண்டுகள் பழமை வாய்ந்த 17ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப் பட்டுள்ளது.
  • இதன்படி பாளையம் கல்செக்கிலுள்ள கல்வெட்டை ஆராய்ந்தால் அதில், சோம ஸ்ரீ சாலிவாகன சகாப்தம், கிபி 1626 தை மாதம் 14ம் தேதி வெள்ளிக்கி ழமை குரும்புலியூர் பஞ்சநதீஸ்வரர் தர்ம சம்ரத னி அம்மன் நித்திய அபிஷேக த்திற்காக, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வீரம ரெட்டியார் குமாரர் சுப்பி ரெட்டியார் என்பவரே இந்தா கல் செக்கினைச் செய்துகொடுத்திருக்கிறார். 
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்-2 ஜூலை 2வது வாரத்தில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்
  • நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 2வது வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. 
  • இந்தியா முதன்முறையாக சந்திராயன்-1 விண்கலத்தை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணில் அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. 
  • இது நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்களை எடுத்து ஆய்வு செய்து வந்தது. இதையடுத்து இந்த விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள்காலத்தை நிறைவு செய்தது. இதையடுத்து, இந்தியா மீண்டும் நிலவுக்கு சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. இது விண்வெளி ஆய்வின் மிக முக்கியமான திட்டம் என்பதால் இஸ்ரோ இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 



பிரிட்டீஷார் அல்லாத முதல் எம்.சி.சி. 'பிரெசிடென்ட்' : நியமனம் குறித்து குமார் சங்கக்காரா பெருமிதம்
  • முன்னாள் இலங்கை அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரா பெருமைக்குரிய எம்.சி.சி என்று அழைக்கப்படும் மெர்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக (பிரெசிடென்ட்) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இவர் ஓராண்டுக்கு இந்த மதிப்புக்குரிய பதவியில் நீடிப்பார்.
டெங்கு நோய் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய அமெரிக்கா
  • உலகின் முதல்முறையாக டெங்கு நோய்க்கான தடுப்பூசியை பிரான்ஸ் தயாரித்துள்ளது. இதன் பயன்பாட்டுக்கு இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் வழகியுள்ளன. இந்தியா உள்பட வளரும் நாடுகளை அச்சுறுத்தும் நோயாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
  • இந்நிலையில், டெங்கு நோய் தடுப்பூசிக்கு அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை கூறுகையில், 9 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, இந்த தடுப்பூசி மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.



இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமாருக்கு செவாலியர் விருது: பிரான்ஸ் அரசு கெளரவம்
  • இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமாருக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
  • விண்வெளித் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியதில் சிறப்பாக பங்காற்றியதற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் வைரத்தொழிலை தேசிய மயமாக்குவதாக அறிவிப்பு
  • ஜிம்பாப்வே நாட்டில் வைரத்தொழில் தேசிய மயமாக்கப்படும் என ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே அறிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டு சுரங்க நிறுவனங்கள் வருவாயில் பில்லியன் கணக்கான டாலர்களை திருடிவிட்டதாக முகாபே குற்றம் சாட்டியுள்ளார்.
  • வெளிநாட்டு சுரங்க நிறுவனங்களை நம்ப முடியாது என்பதால் அரசு சார்ந்த துறையின் நாட்டின் வைர சுரங்கங்களை கொண்டுவந்து லாபம் ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பிற நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தங்க மங்கை கோமதிக்கு அஞ்சல்தலை வெளியீடு!! மை ஸ்டாம்ப் திட்டம் மூலம் கிடைத்த பெருமை
  • ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற தங்க மங்கை கோமதிக்கு அஞ்சல்தலை அச்சிட்டு திருச்சியில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
  • திருச்சி தலைமை தபால் அலுவலக அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் 'கோடை பெக்ஸ்-2019' என்ற பெயரில் கோடைகால அஞ்சல்தலை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடித்தந்த தங்க மங்கை கோமதியை பாராட்டி அவரை, ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் விஜயகுமார் மற்றும் ரகுபதி, லால்குடி விஜயகுமார், இந்திய அஞ்சல் துறை 'மை ஸ்டாம்ப்' திட்டத்தில் அஞ்சல்தலை அச்சிட்டு காட்சிப்படுத்தினார்கள்.
  • 'மை ஸ்டாம்ப்' திட்டத்தில் முதல் முறையாக தடகள வீராங்கனை கோமதிக்கு அஞ்சல் தலை அச்சிட்டு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel