Type Here to Get Search Results !

3rd MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PD

கோவையில் உலக பனைப் பொருளாதார மாநாடு தொடக்கம்
  • கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரி, சுதேசி இயக்கம் ஆகியவை சார்பில், பேரூராதீன வளாகம் முத்தமிழ் அரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். 
  • பேரமைப்புக் கொடியை சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணிய பெரியண்ண வேணாவுடையார் ஏற்றிவைத்தார். 
  • பனை மரங்கள் சங்க காலத்தோடு தொடர்புடையவை. பனை மரத்தில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். 
750-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் ஸ்ரீவேதாந்த தேசிகரின் சிறப்பு தபால்தலை வெளியீடு: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழஞ்சலி
  • வைஷ்ணவர்களின் குருவாக இருந்த வேதாந்த தேசிகர் 1268-ல் பிறந்து 1369-ம் ஆண்டுவரை வாழ்ந்தவர். ஸ்ரீராமானுஜர் காலத்தில் சிறந்த கவியாக இருந்த இவர் திருமலை ஸ்ரீவேங்கடவன் கோயில் மணியின் அம்சமாகப் பிறந்தவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். 
  • சிறந்த ஆன்மீகவாதியாக விளங்கிய வேதாந்த தேசிகரின் 750-வதுபிறந்த நாள் நாடு முழுவதிலும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மத்தியஅரசின் சார்பில் அவரது படத்துடன்கூடிய நினைவு தபால்தலை நேற்றுமுன்தினம் டெல்லியில் வெளியிடப்பட்டது. 
  • இதை தனது அரசு மாளிகையில் உள்ள அரங்கில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். அப்போது அவர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தன் வாழ்வில் செய்த சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டினார்.
போலி சான்றிதழ் சமர்பித்த வழக்கு: எம்.எல்.ஏ., தகுதி நீக்கம்
  • குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை, எம்.எல்.ஏ., புபேந்திர யாதவ். இவர், சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது, போலியான ஜாதிச் சான்றிதழை சமர்ப்பித்தாக புகார் எழுந்தது. 
  • விசாரணையில், இந்த குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்ததை அடுத்து, அவரை, எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, உத்தரவிட்டார். இதற்கு, கவர்னர், ஓ.பி.கோலி, நேற்று ஒப்புதல் அளித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா காமோவ் ரக ஹெலிகாப்டர்களை வாங்க திட்டம்
  • ரஷ்யாவிடம் இருந்து இந்தியா காமோவ் ரக ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டுள்ளது. காமோவ் ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஏற்கெனவே 12 உள்ளன. கடற்பரப்பில், விமானம் தாங்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பளிக்கின்றன. 
  • ஆனால் தற்போது போர் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 10 காமோவ் ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்புத்துறையை கடற்படை வலியுறுத்தியுள்ளது. 
  • 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் 10 காமோவ் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான வேலைகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • இந்திய ராணுவத்திடம் சேட்டக், சீட்டா ராக ஹெலிகாப்டர்கள் அதிகம் உள்ளன.இவற்றுக்கு மாற்றாக விமானப்படை, தரைப்படையில் ரஷ்யாவின் 200 காமோவ் கேஏ-226டி ரக ஹெலிகாப்டர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. 
  • இரட்டை இன்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் மலைப் பகுதிகளில் சிறப்பாக இயங்கும் திறன் வாய்ந்தது. இந்த ரக ஹெலிகாப்டர்களை, 'ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ்' (ஆர்எச்) நிறுவனம் தயாரிக்கிறது.
  • ரஷ்யாவுக்கு கடந்த 2015ம் ஆண்டு சென்ற பிரதமர் மோடி, 60 காமோவ் ஹெலிகாப்டர்கள் அந்த நாட்டிடம் இருந்து வாங்கவும், 140 ஹெலிகாப்டர்களை எச்.ஏ.எல் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூரு அருகேயுள்ள தும்கூரில் உள்ள ஆலையில் ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் தயாரித்து கொடுக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.



அலி அலியேவ் மல்யுத்த தொடர் : இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம்
  • ரஷியாவில் நடந்து வரும் கஸ்பிஸ்க் நகரில் அலி அலியேவ் (Ali Aliyev) மல்யுத்த தொடரில், ஆடவர் 65 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில், முதல் நிலை வீரரும் இந்திய வீரருமான பஜ்ரங் பூனியா, ரஷியாவின் விக்டர் ரசாதீன் உடன் மோதினார். 
  • தொடக்கத்தில் 0-5 என்ற கணக்கில் பின் தங்கிய நிலையில், எழுச்சிபெற்ற பஜ்ரங் பூனியா 13-8 என்ற கணக்கில் விக்டரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வாலிபால் அணியின் பயிற்சியாளராக டிரேகன் மிஹைலோவிக் நியமனம்
  • இந்திய தேசிய வாலிபால் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக செர்பியாவின் டிரேகன் மிஹைலோவிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் அணியின் உடலியக்கவியல் பயிற்சியாளராக பிரேம்ஸ்லாவ் கயோஸ்கி, உடலியக்கவியல் நிபுணராக வளாடிமிர் ரடோசெவிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • 25 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த டிரேகன் செர்பிய அணியின் உதவி பயிற்சியாளராகவும், பல்வேறு முன்னணி கிளப்புகளிலும் பணிபுரிந்து உலக, ஒலிம்பிக், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புகளில் பதக்கம் பெற்றுத் தந்தார்.
கோல்ஃப் வீரரான டைகர் உட்சுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
  • பிரபல கோல்ஃப் வீரரான டைகர் உட்சுக்கு அமெரிக்காவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான அதிபரின் சுதந்திர பதக்கம் விருது வழங்கப்பட உள்ளது. அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் நடைபெறும் விழாவில் இந்த விருதை அதிபர் டிரம்ப் வழங்குகிறார்.
  • காயங்கள், பல்வேறு பிரச்னைகளால் டைகர் உட்ஸின் கோல்ஃப் வாழ்க்கை நிறைவடைந்து விடும் எனக் கருதப்பட்ட நிலையில் அண்மையில் தனது மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel