Type Here to Get Search Results !

16th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF


எஃப்-16 ரக பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் படைப்பிரிவுக்கு சிறப்பு பேட்ஜ்
  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி சாதனை படைத்தார்.
  • இந்த நிலையில், விங் கமாண்டர் அபிநந்தனின் படைப்பிரிவினருக்கு சிறப்பு பேட்ஜ்களை வழங்கி விமானப்படை கவுரவித்துள்ளது.
  • இந்த விமானப்படை விங் கமாண்டரான தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் வர்தமான், பாலகோட் தாக்குதலின்போது, தனது சுகாய் 30எம்கேஐ விமானத்தில் அம்ராம் ஏவுகணை ( AMRAAM missile) மூலம், அமெரிக்கா தயாரித்த, பிரபலமான 'எஃப்-16' ரக போர் விமானத்தை தாக்கி அழித்தார்.
  • எஃப் - 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க போர் விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹிட் மார்டின் தயாரித்து வழங்கியது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த போர் விமானத்தை எளிதில் வீழ்த்த முடியாது.
  • ஆனால், பிப்., 27ம் தேதி பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்திய போது அமெரிக்க ஒப்பந்தத்தை மீறி பாக்., எஃப் 16 ரக விமானத்தை பயன்படுத்தியது. அதை அபிநந்தன் அநாயசமாக தாக்கி அழித்தார். இது பாகிஸ்தான் மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • அதைத்தொடர்ந்து தனது விமானமும் சேதடைந்ததால், பாகிஸ்தானுக்குள் தரையிறங்கிய அபிநந்தன், அங்கு கைது செய்யப்பட்டு 2 நாளில் விடுவிக்கப்பட்டார்.
  • இதையடுத்து கடந்த 2 மாதங்களாக ஓய்வெடுத்து வந்த அபிநந்தன், சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள சூரத்கர் விமானப் படை தளத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
  • அவரை கவுரப்படுத்தும் வகையில், அவரது படைப்பிரிவுக்கு 'ராஜாளிகளை வீழ்த்துபவன்' என்ற பொளுடள் கொண்ட 'பால்கன் ஸ்லேயர்' என்ற சிறப்பு பேட்ஜ்களை இந்திய விமானப்படை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
  • அந்த பேட்ஜில் சிவப்பு நிற எஃப் 16 ரக விமானம் மீது, குறிவைக்கப்பட்டிருப்பது போன்ற அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. அபிநந்தனின் வீர தீர செயலுக்காக, அவரது படைக்கு இந்த சிறப்பு 'பேட்ஜ்' வழங்கியதாக இந்திய விமானப்படை விளக்கம் அளித்துள்ளது.
ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு: மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை
  • ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
  • தூத்துக்குடியைச் சேர்ந்த கே.செல்லம் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதுதவிர காற்றாலை அமைக்கவும், ரயில் பாதை அமைக்கவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 
  • ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய்கள் மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய ரூ.700 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
வரலாற்றில் முதல்முறை வங்கத்தில் அமலுக்கு வந்த 324 சட்டம் தேர்தல் ஆணையம் அதிரடி
  • இந்திய வரலாற்றில் முதல்முறையாக மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் 324வது சட்டப்பிரிவை அமல்படுத்தி இருக்கிறது.
  • மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இந்த தேர்தல் பிரச்சார தடை இன்றோடு அமலுக்கு வருகிறது. இன்று இரவு 10 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் தடைக்கு வருகிறது.
  • பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று முதல்நாள் மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார். நேற்று கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே இந்த பேரணி செல்லும் போது பெரிய கலவரம் ஏற்பட்டது.
  • இந்த நிலையில்தான் அங்கு பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த தொடர் கலவரங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் 324வது சட்டப்பிரிவை அமல்படுத்தி இருக்கிறது.
  • இந்த சட்டம் இந்திய வரலாற்றில் முதல்முறை இப்போதுதான் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு முன் இதுபோன்ற சட்டப்பிரிவு எப்போதும் தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படவில்லை. இந்த சட்டப்பிரிவு தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு அதீத அதிகாரத்தை அளிக்கும்.



லோக்பால் அமைப்பிற்கான ப்ரத்தியேக இணையதளம் துவங்கப்பட்டது
  • அரசியல்வாதிகள், MLA-கள், உயர் அதிகாரிகள், MP-க்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் செய்தல் ஆகியவற்றை விசாரிக்க லோக் ஆயுக்தா, லோக்பால் சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின், லோக்பால் அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.சி.கோஷ் உள்ளிட்ட 8 உறுப்பினர்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மார்ச் மாதம் நியமித்தார்.
  • இந்நிலையில் லோக்பால் அமைப்பிற்கான ப்ரத்தியேள இணையதளம் இன்று துவக்கப்பட்டது. இதற்கான விழாவில் லோக்பால் அமைப்பின் தலைவர் பினாகி சந்திரகோஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'விஷன் 2021' கொள்கை வெளியீடு; மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்
  • ரிசர்வ் வங்கி, பாதுகாப்பான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, 'விஷன் 2021' என்ற தொலைநோக்கு கொள்கையை வெளியிட்டுள்ளது.
  • மின்னணு தொழில்நுட்பத்தில், கணினி, மொபைல் போன் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. மிகச் சுலபமாகவும், அதேசமயம் விரைவாகவும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிவதால், ஏராளமானோர், மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு மாறி வருகின்றனர்.கடந்த, 2018 டிசம்பர் நிலவரப்படி, 2,069 கோடிக்கும் அதிகமான, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. 
  • இதை, 2021 டிசம்பரில், நான்கு மடங்காக அதிகரித்து, 8,707 கோடியாக உயர்த்த, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'விஷன் 2019- - 21' என்றமின்னணு பணப் பரிவர்த்தனை கொள்கையை, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அவசர நிலை: டிரம்ப் அறிவிப்பு: தடைப் பட்டியலில் சீனாவின் ஹுவாவே நிறுவனம்
  • அமெரிக்க தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான அவசர நிலையை அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
  • இதன் மூலம், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தகவல் தொடர்பு சாதனங்களை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
  • இந்த அவசர நிலை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்க்கவிருப்பதாக வர்த்தகத் துறையின் தொழில் மற்றும் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.



பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக வாஷிம் ஜாபர் நியமனம்
  • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபர் பங்களாதோஷ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 41 வயதான வாஷிம் ஜாபர், இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
  • தொடக்க ஆட்டக்காரரான வாஷிம் ஜாபர் 40 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் திறமையை பார்த்து, பங்களாதேஷ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
  • ஓராண்டில் 6 மாதங்கள் அவர் பங்களாதேஷில் தங்கியிருந்து வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்.
ஜெர்மனியில் 5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி
  • ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், பறக்கும் காரை 2025-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. 
  • லில்லியம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் 'ரிமோர்ட் கண்ட்ரோல்' மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஓவியர் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடிக்கு ஏலம்
  • பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். அந்நாட்டின் நார்மண்டி பிராந்தியத்தில் வசித்து வந்த இவர் கடந்த 1890-ம் ஆண்டு, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல் போரை ஓவியமாக தீட்டினார்.
  • கிளாட் மொனெட் வரைந்த ஓவியங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த ஓவியம் வெவ்வேறு நாடுகளில் ஏலத்தில் விடப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது.
  • இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனம் கிளாட் மொனெட்டின் வைக்கோல் ஓவியத்தை அண்மையில் ஏலத்தில் விட்டது. ஏலம் தொடங்கிய 8 நிமிடங்களில் இந்த ஓவியம், 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.778 கோடி) ஏலம் போனது. கிளாட் மொனெட்டின் ஓவியங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜாக்ஸ் அணி சாம்பியன்
  • நெதர்லாந்தில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற 'எரிடிவைசி' தொடர் நடந்தது. இதன் கடைசி சுற்று லீக் போட்டியில் அஜாக்ஸ், டி கிராப்சாப் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய அஜாக்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
  • லீக் சுற்றின் முடிவில் 34 போட்டிகளில், 28 வெற்றி, 2 'டிரா', 4 தோல்வி என, 86 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அஜாக்ஸ் அணி, 34வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை பி.எஸ்.வி. எய்ன்தோவன் அணி (83 புள்ளி) பிடித்தது.
  • சமீபத்தில் அஜாக்ஸ் அணி, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதியில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியிடம் வீழ்ந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel