Type Here to Get Search Results !

இந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA

  • பொருளாதாரத்தின் செயல்பாட்டை நிர்ணயிப்பதில் பணவீக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியா கலப்பு பொருளாதாரத்தை உடைய நாடு. முதலாளித்துவம், சமவுடமை இரண்டும் இதில் உண்டு. 
  • அண்மைய பணவீக்க எழுச்சிக்கு, பல அரசியல், பொருளாதார நெருக்கடிகள் இருப்பதாக முன்னாள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தலைமையிலான குழு கண்டறிந்தது.
  • இதுவரை ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களைக் கொண்டு, பணவீக்க அளவீட்டு முறை தவறானதா என்று பல பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 
  • இந்தியாவில் பணவீக்கத்தை கண்டுபிடிப்பதற்கு மொத்த விலைக் குறியீட்டு எண் என்ற முறையை பயன்படுத்துகிறார்கள். பல வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் என்ற முறையினால் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.
அளவீடு
  • பணவீக்கத்தை அளவிடுவதற்கான இந்திய முறை நவீனமான முறை இல்லை என்று கூறப்படுகிறது.
  • இந்திய விளக்கப்படங்கள் மற்றும் கட்டமைப்புகள், இரண்டாவது அடிப்படையில் பணவீக்கத்தை அளவிட இந்தியாவை அனுமதிக்கவில்லை.
நுகர்வோர் விலைக் குறியீடு
  • நுகர்வோர் விலைக் குறியீட்டெண் பணவீக்கத்தை அளவிடுவதற்கு ஒரு மேம்பட்ட கருவி என்றாலும், தற்போதைய மொத்த விற்பனை விலை குறியீட்டிலிருந்து இந்தியா மாறுவதற்கு பல சிக்கல்கள் உள்ளன. 
  • நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள் அறிக்கை இடுவதற்கு நிறைய நேரம் ஆவதால் நுகர்வோர் விலை குறியீட்டை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு சாத்தியம் அல்ல. 
  • நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஒரு மாத அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதும் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் ஒரு வாராந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதும் விவாதத்திற்குரிய புள்ளி ஆகும். 
  • இருப்பினும் நுகர்வோர் குறியீடு மொத்த விற்பனையாளர்களை விட பதிவு செய்யப்பட வேண்டுமென்றால் இந்த முறையை பின்பற்றப்படவேண்டும்.
சிக்கல்கள்
  • வளரும் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல. குறிப்பாக மத்திய வங்கியின் பணவியல் கொள்கை, பணவீக்கம் மற்றும் விலை நிலைத்தன்மை என கூறலாம். பொருட்களின் விலையை ஒரு நிலையாக கட்டுப்படுத்தவே மத்திய வங்கி இயங்குகிறது. 
  • விலை நிலைத்தன்மை, சேமிப்பு அணிதிரட்டல் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்காக ஒரு நல்ல சூழலை உருவாக்கும். 
  • உற்பத்திக்கும் பணவீக்கத்திற்கும் ஒரு நீண்ட கால வர்த்தக பரிமாற்றம் உண்டு என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் சுட்டிக்காட்டுகிறார். குறுகிய கால வர்த்தக பரிமாற்றம், எதிர்காலத்தில் விலை நிலையை நிச்சயமற்றதாக மட்டுமே ஆக்கும் என்று அவர் கூறுகிறார்.
உகப்பு பணவீக்க விகிதம்
  • பணவியல் கொள்கையை தீர்மானிப்பதில் இது அடிப்படையாக அமைகிறது. சிறந்த பணவீக்கத்திற்கு இரண்டு விவாதத்திற்குரிய விகிதங்கள் உள்ளன. 
  • தொழில்துறை பொருளாதாரத்தில் இருக்கும் பணவீக்கம் 1-3 அல்லது 6-7 சதவீதம் ஆகியவைதான் அந்த இரண்டு விகிதங்கள். விரிவான பணவீக்க விகிதத்தை அடவிடும் போது சில பிரச்சினைகள் ஏற்படும்.பணவீக்க விகிதம், பொதுவாக, உண்மையான விகிதத்தை விட அதிகமாக அளவிடப்படுகிறது. 
  • இரண்டாவதாக, ஒரு பொருளின் தர முன்னேற்றங்கள் அதன் விலை குறியீட்டை பாதிக்கும். இதை பணவீக்க கணக்குகளுக்குள் சேர்பதற்கு சிக்கல் ஏற்படுகிறது. 
  • குறைந்த விலை பொருளை நுகர்வோர் விரும்பி அதிகமாக வாங்குவதால், பணவீக்க கணக்கில் அப்பொருளுக்கு அதிக எடை உண்டு. இதைக் கொண்டு கணக்கிடுவதற்கு அதிகமான நேரம் ஆகிறது.



பண விநியோகமும் பணவீக்கமும்
  • பொருளாதாரத்தில் மத்திய வங்கிகள் அதிகமாக பணத்தை விநியோகத்தில் விடுவது அளவு தளர்த்துவது என கூறப்படும். இது பணவீக்க இலக்கை அதிகப்படுத்த அல்லது மிதமாக்க உதவுகிறது. குறைந்த விகிதம் பணவீகத்திற்கும் அதிக வளர்ச்சி பண விநியோகத்திற்கும் இடையே ஒரு புதிர் உள்ளது. 
  • தற்போதிய பணவீக்கம் குறைவாக இருந்தால், அதிக மதிப்புள்ள பணத்தை விநியோகத்தில் விடுவது நல்லது. மேலும், குறைந்த உற்பத்தி இருந்தால், ஒரு இறுக்கமான பணவியல் கொள்கை மிக கடுமையான முறையில் உற்பத்தியை பாதிக்கும். அளிப்பு அதிர்வுகள் பணவியல் கொள்கையில் ஒரு மேலாதிக்க பங்கை கொண்டுள்ளன. 
  • 1998-99 ல் கோதுமை, கரும்பு மற்றும் பருப்பு வகைகள் அளவுக்கு அதிகமான அறுவடை செய்யப்பட்டன. இது விரைவான விநியோகத்திற்கு வழிவகுத்தது. இதனால் இவைகளின் விலைகள் அதன் முந்தைய ஆண்டை விட அதிகமாக இருந்தது. 
  • 1991 ல் வணிக விடுதலையினால் இறக்குமதி போட்டி அதிகரித்தது. மலிவான விவசாய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கும் பொருட்கள் மற்றும் துணி தொழில் இவை இரண்டிலும் உற்பத்தி போட்டி குறைந்துள்ளது. இந்த செலவு சேமிப்பு தொழில்நுட்பங்கள் குறைந்த பணவீக்க விகிதத்தில் இருக்க உதவின.
உலகளாவிய வர்த்தகம்
  • இந்திய ரிசர்வ் வங்கி உலக வர்த்தக பொருட்கள் மற்றும் சேவைகளினால் டாலருக்கு எதிராக ரூபாயை பலவீனப்படுத்தும் முயற்சியின் விளைவாக இந்தியாவில் பணவீக்கம் ஏற்படுகிறது. 
  • உள்நாட்டு பணவீக்கத்தை விட இதுதான் பணவீக்க நெருக்கடிக்கு காரணமாக இருந்தது என கருதப்படுகிறது. அமெரிக்க டாலர் திடீரென 30% உயர்ந்த போது, ரிசர்வ் வங்கி டாலரை ஒரு பெரிய அளவில் பொருளாதாரத்தில் உட்செளுத்தியது. 
  • இதனால் வர்த்தகம் சாரா பொருட்களின் பணவீக்கம் உயர்ந்தது. ரிசர்வ் வங்கி பலவீனமான டாலர் மாற்று விகிதத்திற்கு, ஏற்றுமதியை மானியமாக கொடுப்பது தெளிவாக தெரியவருகிறது. இவை அனைத்தும் நாட்டின் மத்திய வங்கியின் ஆபத்தான பணவீக்க கொள்கைகளைகளை காட்டுகிறது.



காரணிகள்
  • ஒரு நாட்டின் பணவீக்க பாதிப்பை கண்டறியவும் அந்நாட்டின் கொள்கைகளை பகுப்பாய்வு செய்யவும் உதவுவதற்கு பல காரணிகள் உள்ளன. பணவீக்கத்தால் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து பிலிப்ஸ் வளைவு சித்தரிக்கிறது.
தேவை காரணிகள்
  • பொருளாதாரத்தில் மொத்த தேவை மொத்த விநியோகத்தை விட மிஞ்சினால் இது ஏற்படும். மேலும், அதிக பணம் சில பொருட்களை துரத்தும் போது ஏற்படும் நிலைமை என்வும் இதை விவரிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் ஒரு பொருளை செய்ய 550 அலகுகள் உற்பத்தி செய்ய மட்டுமே திறன் கொண்டது. 
  • ஆனால் அந்நாட்டின் உண்மையான தேவை 700 அலகுகளாக உள்ளது. எனவே, பற்றாக்குறை காரணமாக அந்த பொருளின் விலை உயர்கிறது. வறட்சி மற்றும் வெள்ளம் அல்லது போதுமான தானிய சேமிப்பு முறைகள் இல்லாததால் தானியங்களின் உற்பத்தி குறையும். இதனால் விலை உயர்கிறது. இந்த சூழ்நிலை இந்தியாவில் வழக்கமாக காணப்படுகிறது.
விநியோக காரணிகள்
  • வழங்கல் பகுதியில் இருக்கும் பணவீக்கம் இந்தியாவில் பணவீக்க உயர்விற்கு ஒரு முக்கிய அங்கம் ஆகும். விவசாய பற்றாக்குறை அல்லது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது பொருட்கள் சேதம் அடைவதனால் அப்பொருளின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது அதிக பணவீக்க அழுத்தங்களை ஏற்படுத்தும். 
  • இதேபோல், அதிக விலை தொழிலாளர்களினால் ஒரு பொருளின் தயாரிப்பு செலவு அதிகரிக்கிறது. இதனால் அப்பொருளின் இறுதி விலை அதிகரிக்கிறது. மேலும், உலக அளவில் ஏற்படும் விலைவாசி உயர்வு, விநியோக பக்கத்திலிருந்து பணவீக்கத்தை பாதிக்கிறது.
உள்நாட்டு காரணிகள்
  • இந்தியா போன்ற வளர்ச்சி குறைந்த பொருளாதாரங்களுக்கு பொதுவாக குறைந்த வளர்ச்சியடைந்த நிதி சந்தை இருக்கும். இது வட்டி விகிதங்களுக்கும் தேவைகளுக்கும் இடையே ஒரு பலவீனமான பிணைப்பை உருவாக்குகிறது. 
  • இதனால் ஒரு உண்மையான பண இடைவெளி ஏற்படுகிறது. இது, விலை உயர்வையும் பணவீக்கத்தையும் நிர்ணயிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என உறுதியாக கூறலாம். வெளியீடு மற்றும் உண்மையான பணம் இடைவெளி இவை இரண்டிற்கும் இந்தியாவில் ஒரு இடைவெளி உள்ளது. 
  • மிக வேகமாக பணம் மக்களிடையே போய் சேர்கிறது. ஆனால் பொருட்களுக்கு அதிக நேரம் ஆகிறது. பணவீக்கம் இதனாலும் அதிகரிக்கிறது. பதுக்கி வைப்பதும் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்சணை. தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விளைபொருட்கள் மற்றும் அவற்றின் விலை உயர்வுக்கு பல நிலைப்பாடுகள் உள்ளன.
புற காரணிகள்
  • இந்தியாவில் எழும் பணவீக்க அழுத்தங்களுக்கு நாணய மாற்று வீதம் நிர்ணயம் ஒரு முக்கியமான அங்கமாகும். இந்தியாவில் இருக்கும் தாராளவாத பொருளாதார கண்ணோட்டம் உள்நாட்டுச் சந்தைகளை பாதிக்கிறது. 
  • அமெரிக்காவிலிருந்து பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால், அமெரிக்காவில் பொருட்களின் விலை அதிகரித்தால் இந்தியாவிலும் விலை உயர்கிறது. எனவே, உரிய மாற்று விகிதம் மற்றும் இறக்குமதி பணவீக்கம், ஒரு பொருளாதாரத்தின் போட்டித்தன்மையையும் சவால்களையும் சித்தரிக்கும்.
மதிப்பு
  • இறைச்சி, காய்கறிகள், பால் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், ஏப்ரல் 2012 இல் பணவீக்கம் 7.23% யை அடைந்தது. ஏப்ரல் 2011 இல் பணவீக்கத்தின் மதிப்பு 9.74% ஆக இருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel