- பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா 2012ன் படி இதன் உறுப்பு நாடுகளாகும்.
- இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகளாகும்.
- 2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்
வரலாறு
- 2006 செப்டம்பரில் பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. அதன்பிறகு 2008 மே 16ல் ரஷ்யாவில் உயர்நிலை அரசியல் சந்திப்பு நடந்தது.
- நான்கு நாடுகளின் தலைவர்கள் லுலா ட சில்வா(பிரேசில்), திமித்ரி மெட்வெடெவ்(ரஷ்யா) மன்மோகன் சிங்(இந்தியா), மற்றும் கூ சிங்தாவ்(சீனா) பங்கேற்க, ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் முதல் மாநாடு 2009 ஜூன் 16ல் தொடங்கியது.
- உலக பொருளாதர நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு முதலியவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
- 2010 டிசம்பர் 24ல் தென்னாப்பிரிக்கா முறைப்படி பிரிக் கூட்டணியுடன் சேர்ந்தது அதனையடுத்து தென்னாப்பிரிக்காவை குறிக்க "எஸ்" என்ற ஆங்கில எழுத்து சேர்ந்து பிரிக்ஸ் என பெயரிட்டப்பட்டது. பிரிக்ஸ் கூட்டணியாக இருந்த இந்நாடுகள் 2011ல் சேர்ந்து பிரிக்ஸ் என கூட்டமைப்பாக மாற்றியது.
- 2014 பிரிக்ஸ் மாநாட்டில் $100 பில்லியன் மூதலீட்டில் பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சாங்காய் சீனா தலைமையிடமாக கொண்டு இயங்கும்.
பிரிக்ஸ் மாநாடுகள்
- 2009லிருந்து ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றன.
- ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011ல் நடைபெற்றது. நான்காவது மாநாடு மார்ச்சு 29, 2012 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.
- இதில் நாட்டின் குடிமைப் பணிக்காக தேவைப்படும் அணு உற்பத்தியை ஈரான் நாடு தொடரவும், பிரிக் நாடுகளுக்கான பரிவர்த்தனைகள் அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே நடத்திக்கொள்ளவும், பிரிக் நாடுகளுக்கான வங்கி முகமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sr. No. | Date(s) | Host country | Host leader | Location | Notes |
---|---|---|---|---|---|
1st | 16 June 2009 | ![]() | Dmitry Medvedev | Yekaterinburg (Sevastianov's House) | |
2nd | 15 April 2010 | ![]() | Luiz Inácio Lula da Silva | Brasília | Guests: Jacob Zuma (President of South Africa) and Riyad al-Maliki (Foreign Minister of the Palestinian National Authority) |
3rd | 14 April 2011 | ![]() | Hu Jintao | Sanya (Sheraton Sanya Resort) | First summit to include South Africa alongside the original BRIC countries. |
4th | 29 March 2012 | ![]() | Manmohan Singh | New Delhi (Taj Mahal Hotel) | The BRICS Cable announced an optical fibre submarine communications cablesystem that carries telecommunications between the BRICS countries. |
5th | 26–27 March 2013 | ![]() | Jacob Zuma | Durban (Durban ICC) | |
6th | 14–17 July 2014 | ![]() | Dilma Rousseff | Fortaleza (Centro de Eventos do Ceará)[47] Brasília | BRICS New Development Bank andBRICS Contingent Reserve Arrangement agreements signed. Guest: Leaders of Union of South American Nations (UNASUR)[48][49] |
7th | 8–9 July 2015 | ![]() | Vladimir Putin | Ufa (Congress Hall)[50] | Joint summit with SCO-EAEU |
8th | 15–16 October 2016 | ![]() | Narendra Modi | Benaulim (Taj Exotica) | Joint summit with BIMSTEC |
9th | 3–5 September 2017 | ![]() | Xi Jinping | Xiamen (Xiamen International Conference Center) | Joint summit with EMDCD |
10th | 25–27 July 2018 | ![]() | Cyril Ramaphosa | Johannesburg (Sandton Convention Centre) | |
11th | 13–14 November 2019 | ![]() | Jair Bolsonaro | Curitiba | |
12th | TBD 2020 | ![]() | Vladimir Putin | Chelyabinsk[51] | Joint summit with SCO |