நாட்டின் ஏற்றுமதியில் புதிய சாதனை முதன் முறையாக, ரூ.37 லட்சம் கோடியை தாண்டியது
- கடந்த, 2018 - -19ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 7.97 சதவீதம் வளர்ச்சி கண்டு, முதன் முறையாக, 50 ஆயிரம் கோடி டாலரை தாண்டி, 53 ஆயிரத்து, 540 கோடி டாலரை எட்டியுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 37 லட்சத்து, 40 ஆயிரத்து, 800 கோடியாகும்.
- கடந்த, மார்ச்சில், முக்கியமான, 30 பொருட்களில், 20 பொருட்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. மருந்து, ரசாயனம், பொறியியல் துறைகளில் வளர்ச்சி நன்கு இருந்ததால், சரக்கு ஏற்றுமதி, ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, 11 சதவீதம் அதிகரித்து, 3,250 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த, 2018 அக்டோபரில், இப்பிரிவு, 17.86 சதவீத வளர்ச்சியை எட்டிஇருந்தது.
- கடந்த நிதியாண்டில், சரக்கு ஏற்றுமதி, 33 ஆயிரத்து 100 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு முன், அதிகபட்சமாக, 2013 - -14ம் நிதியாண்டில், 31 ஆயிரத்து 440 கோடி டாலர் ஏற்றுமதி நடைபெற்றது. இதன் மூலம், ஐந்து நிதியாண்டுகளுக்கு பின், சரக்கு ஏற்றுமதியில் புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது.
- வர்த்தக பற்றாக்குறை:மார்ச்சில், இறக்குமதி, 1.44 சதவீதம் ஏற்றம் கண்டு, 43 ஆயிரத்து, 440 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில், இறக்குமதி, 8.99 சதவீதம் அதிகரித்து, 50 ஆயிரத்து 744 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 35 லட்சத்து, 52 ஆயிரத்து, 80 கோடியாகும்.
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் ரத்து! - பரப்புரை ஓய்ந்த பின்னர் அறிவித்த தேர்தல் ஆணையம்
- தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாளான ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், பணம் கைப்பற்றப்பட்ட புகாரில் வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை ரத்துசெய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்துசெய்யப்பட்டாலும் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்
- சோழா எம்எஸ், இடர் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய கடமையாக கருதி செயல்பட்டு வருகிறது. மேலும், இத்துறையில் சர்வதேச தரத்துக்கு இணையான அளவீடுகளை கட்டமைப்பதில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. அவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- ஐஎஸ்ஓ 31000:2018 தரச் சான்றிதழ் பெற்ற பொதுக் காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இது, எங்களின் "விஷன் 2025' திட்டத்துக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார் அவர். இந்த ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும்.
கட்டாயம் 30% நிலக்கரி: என்.எல்.சி டெண்டர் நிபந்தனைக்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை
- அதானியின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து கட்டாயம் 30% நிலக்கரி கொண்டு வரவேண்டும் என்ற என்.எல்.சி டெண்டர் நிபந்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் நிலக்கரி தொடர்பான டெண்டர் நிபந்தனையில் உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.