Type Here to Get Search Results !

17th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஏலகிரிமலையில் கல்வெட்டு, கற்கோடரிகள் கண்டெடுப்பு
  • ஏலகிரிமலையில் ஏராளமான பழங்காலத் தடயங்கள், நடுகல் மற்றும் கல்வெட்டுகள் தொடர்ச்சியாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 
  • அதன்படி, அத்தனாவூரில் உள்ள பெருமாள் கோயிலில் திறந்தவெளியில் உள்ள இந்தக் கல்வெட்டும், கோயிலுக்குள் இருக்கும் கற்கோடரிகளும் இம்மலையின் பழைமையான மரபைத் எடுத்துரைக்கும் வகையில் உள்ளன. 3.5 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட இந்தப் பலகைக் கல்லின் இரு பக்கமும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. 
  • இதில் உள்ள வடிவமைப்பைப் பார்க்கும்போது இவை கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால எழுத்துகள் எனக் கருதப்படுகிறது. 
  • கோயிலின் உட்புறத்தில் பெரிய கல் உரல் உள்ளது. இதைச் சுற்றிலும் ஏராளமான கற்கோடரிகள் காணப்படுகின்றன. இவை மனிதன் இரும்பைப் பயன்படுத்துவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்.
  • எனவே, இக்காலத்தை புதிய கற்காலம் என வரலாற்று அறிஞர்கள் அழைப்பர். இதன் காலம் கி.மு.1000 என்று கருதப்படுகிறது. இம்மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தனர் என்பது இதன் மூலம் உறுதிப்படுகிறது என்றார் அவர்.



சேவைகளை முழுமையாக நிறுத்திய ஜெட் ஏர்வேஸ்
  • ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது சேவைகளை முழுமையாக நிறுத்திக் கொண்டுள்ளது.
  • நிதி நெருக்கடியால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது பல சேவைகளை ரத்து செய்தது. இந்த நிறுவனத்துக்கு ரூ.1500 கோடிக்கு மேல் கடன் கொடுத்துள்ள பாரத ஸ்டேட் வங்கி இந்த நிறுவன பங்குகளை விற்று நிறுவனம் தொடர்ந்து நடக்க முயன்று வருகிறது. ஆனால் இந்த பங்குகளுக்கு சரியான விலை கிடைக்காததால் அந்த முயற்சியில் தடை ஏற்பட்டுள்ளது.
  • நிர்வாக செலவுகள் மற்றும் ஊதிய பாக்கிகளுக்காக பாரத ஸ்டேட் வங்கி மேலும் நிதி உதவி அளிக்க வேண்டும் என விமானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மேற்கொண்டு நிதி அளிக்க பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து கடன் அளித்தவர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
  • இதனால் நிர்வாகம் எற்கனவே நடத்தி வரும் சேவைகளையும் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் இன்று இரவுடன் தனது சேவைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel