Type Here to Get Search Results !

இந்திய விண்வெளி ஆய்வு மையம் / ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் / ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இசுரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. 
  • தற்போது 16,000 ஊழியர்கள் இசுரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய்செலவில் செயலாற்றப்படுகிறது. 
  • இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இசுரோவிற்கு ஏ.எஸ்.கிரண்குமார் தற்போது தலைவராக உள்ளார்.
  • இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.
  • இசுரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இசுரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 
  • 1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத் தக்க ஜி. எஸ். எல். வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. 
  • இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இஃச்ரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது.
  • கடந்த ஆண்டுகளில் இசுரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது. தனது ஏவுகலங்களையும் ஏவுமிடங்களையும் தனது செயற்கைக்கோள் ஏவுதிறனுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. 
  • புவியியைவு செயற்கைக் கோள் ஏவுகலத்தை (ஜி.எஸ்.எல்.வி) மேம்படுத்தி முழுமையும் இந்தியப் பொருட்களால் கட்டமைப்பதும் மனிதரியக்கு விண்வெளித் திட்டங்கள், மேலும் பல நிலவு புத்தாய்வுகள் மற்றும் கோளிடை ஆய்வுக்கருவிகள் செயல்படுத்துவதையும் எதிர்காலத் திட்டங்களாகக் கொண்டுள்ளது. 
  • தனது பல்வேறு பணிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குவியப்படுத்திய மையங்களை நாடெங்கும் கொண்டுள்ளது. பன்னாட்டு விண்வெளிச் சமூகத்துடன் பல இருவழி மற்றும் பல்வழி உடன்பாடுகளைக் கண்டு கூட்டுறவாகச் செயல்படுகிறது.

செயற்கைக்கோள் ஏவுகலம் (SLV)

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் / ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: இதன் ஆங்கிலச் சுருக்கமான எஸ்.எல்.வி அல்லது எஸ்.எல்.வி-3 என அறியப்படும் செயற்கைக்கோள் ஏவுகலம் ஓர் நான்கு கட்ட திட எரிபொருள் இலகு ஏவுகலம். 500கிமீ தொலைவு ஏறவும் 40 கிலோ ஏற்புச்சுமை கொண்டு செல்லவும் வடிவமைக்கப்பட்டது.
  • முதல் ஏவல் 1979இலும் அடுத்த ஆண்டு இருமுறையும் இறுதி ஏவல் 1983இலும் நிகழ்ந்தன. இந்த நான்கில் இரண்டே வெற்றிகரமாக அமைந்தன.

மேம்பட்ட செயற்கைக்கோள் ஏவுகலம் (ASLV)

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் / ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: இந்த ஏவுகலம் ஐந்து நிலை திட எரிபொருள் விறிசு ஆகும்; இதனால் 150 கிலோ செயற்கைக்கோளைத் தாழ் புவி சுற்றுப்பாதையில் ஏவ இயலும். இதன் வடிவமைப்பு எஸ்.எல்.வியை அடியொற்றி இருந்தது.
  • முதல் ஏவல் 1987இலும், 1988,1992,1994 களில் மூன்று ஏவல்களும் நிகழ்ந்தன; இரண்டு ஏவல்களே வெற்றி பெற்றன.

முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV)

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் / ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: பி.எஸ்.எல்.வி என்ற ஆங்கிலச் சுருக்கத்தால் பரவலாக அறியப்படும் முனையத் துணைக்கோள் ஏவுகலம் இந்திய தொலையுணர்வு துணைக்கோள்களை சூரிய இணைவு சுற்றுப்பாதைகளில் ஏவிட வடிவமைக்கப்பட்ட மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு) ஏவு அமைப்பாகும். 
  • இதற்கு முன்னர் இந்தச் செயற்கைக்கோள்கள் உருசியாவிலிருந்து விண்ணேற்றப்பட்டு வந்தன. இந்த ஏவுகலங்களால் சிறு துணைக்கோள்களை புவிநிலை மாற்று சுற்றுப்பாதைக்கு ஏவ முடியும். இந்த ஏவுகலத்தால் 30 விண்கலங்கள் (14 இந்திய விண்கலங்களும் 16 வெளிநாட்டு விண்கலங்களும்) விண்ணேற்றப் பட்டுள்ளன.
  • ஏப்ரல் 2008இல் இது ஒரே ஏவலில் 10 துணைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏற்றி அதுவரை இருந்த உருசிய சாதனையை முறியடித்தது.
  • சூலை 15, 2011 அன்று ப.எஸ்.எல்.வி தனது 18வது தொடர்ந்த ஏவல்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இதன் 19 ஏவல்களில் செப்டம்பர் 1993 முதல் பயணம் மட்டுமே தோல்வியில் முடிந்தது.

புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் (GSLV)

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் / ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: ஜி.எஸ்.எல்.வி ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு கலம். இது ஒரு மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு). 
  • இந்தத் திட்டம் இன்சாட் வகை செயற்கைக்கோள்களைப் புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திடவும் வெளிநாட்டு விறிசுகளை நாடவேண்டிய தேவையைக் குறைக்கவும் செயல்படுத்தப்பட்டது. இதனால் 5 டன் எடையுள்ள ஏற்புச்சுமையை தாழ் புவி சுற்றுப்பாதையில் இட முடியும்.
  • இத்திட்டத்திற்கு ஒரு பின்னடைவாகத் திசம்பர் 25, 2010இல் ஜிசாட்-5பி சுமந்தவண்ணம் சென்ற ஜி.எஸ்.எல்.வி கட்டுப்பாட்டு அமைப்பு தவறியதால் முன்னரே திட்டமிட்டபடி பாதுகாப்பாகத் தானே வெடித்துச் சிதறியது.

புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் மார்க்-III (GSLV III)

  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் / ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் மார்க்-III முன்நு நிலைகள் கொண்ட விண்வெளிக்கலன் ஆகும். இதன் மூலம் மிகு எடையுள்ள செயற்கைக்கோள்களைப் புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இது ஜி. எஸ். எல். விக்கு அடுத்தத் தலைமுறையாக இருப்பினும் இதன் வடிவமைப்பை அதனை ஒட்டி இருக்கவில்லை. 
  • இதன் முதல் ஏவுதல் 2012ஆம் ஆண்டில் வெற்றி பேற்று, மேலும் இரு முறை இயக்கப்பட்டுள்ளது. 
  • தற்போது இது பயன்பாட்டு நிலையை அடைந்துள்ளது. இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்திற்கு இந்த விண்கலனையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ENGLISH

  • ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: Indian Space Research Organization (ISRO) is the premier national space agency of the Government of India. ISRO was formed in 1969 with its head office at Bangalore.
  • Currently 16,000 employees work in ISRO. It is being implemented at a cost of approximately 41 billion rupees.
  • AS Kirankumar is currently the Chairman of ISRO, which runs under the direct supervision of the Indian Space Department.
  • ISRO is the sixth largest space research center in the world. Its primary objective is to explore developments in space technology and utilize them for the benefit of the nation.
  • ISRO has seen many achievements since its inception. In 1975, India's first satellite, Aryabhatta was launched by ISRO and launched by the Soviet Union.
  • The first satellite, Rohini, was launched in 1980 by an Indian-built launcher (SLV-3). Terminal Satellite Launch Vehicle (PSLV) to launch satellites into terminal orbits and G. S. L. Two V launchers were designed.
  • IFFRO has launched several telecommunication satellites and Earth observation satellites through these launchers. This culminated in the launch of Chandrayaan-1 in 2008 as India's first mission to the moon.
  • Over the years ISRO has been providing space/satellite related activities not only to Indian clients but also to foreign clients. It uses its launchers and launch pads for its satellite launch capabilities.
  • Future plans include upgrading the Geospatial Satellite Launch Vehicle (GSLV) and building it entirely with Indian materials for human space programs, and the implementation of several lunar probes and interstellar probes.
  • It has concentrated centers all over the country for its various works and researches. Cooperates with the international space community through several bilateral and multilateral agreements.

Satellite Launch Vehicle (SLV)

  • ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: The Satellite Launch Vehicle, known as SLV or SLV-3 for its English abbreviation, is a four-stage solid propellant light launch vehicle. Designed to climb a distance of 500 km and carry a payload of 40 kg.
  • The first outbreak occurred in 1979, twice the following year, and the final outbreak occurred in 1983. Only two of these four were successful.

Advanced Satellite Launch Vehicle (ASLV)

  • ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: The launcher is a five-stage solid propellant rocket; Thus, a 150 kg satellite can be launched into low earth orbit. Its design was inspired by the SLV.
  • The first event occurred in 1987, followed by three events in 1988, 1992, and 1994; Only two events were successful.

Polar Satellite Launch Vehicle (PSLV)

  • ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: Polar Satellite Launch Vehicle (PSLV), popularly known by its acronym PSLV, is a non-returnable (losable) launch vehicle designed to launch Indian remote sensing satellites into solar fusion orbits.
  • Earlier these satellites were launched from Russia. These launchers can launch small satellites into geostationary orbits. 30 spacecraft (14 Indian and 16 foreign) have been launched by this launcher.
  • In April 2008, it successfully launched 10 satellites in a single launch, breaking the previous Russian record.
  • On July 15, 2011, PSLV successfully completed its 18th consecutive launch. Of its 19 flights, only the one from September 1993 ended in failure.

Geostationary Satellite Launch Vehicle (GSLV)

  • ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: GSLV is a Delta-II type satellite launch vehicle. It is a non-regenerative system (a lossy launch system).
  • The project was implemented to launch INSAT-type satellites into low-Earth orbit and reduce the need to resort to foreign missions.
  • A setback to the program occurred on December 25, 2010, when the GSLV carrying GSAT-5B safely self-detonated as planned due to a control system failure.

Geospatial Satellite Launch Vehicle Mark-III (GSLV III)

  • ISRO - INDIAN SPACE RESEARCH ORGANIZATION: The Geospatial Launch Vehicle Mark-III is a spacecraft with pre-stages. Through this, it is planned to send very heavy satellites into geostationary orbit.
  • This is G. S. L. Although it is the next generation of the V, its design does not stick to it.
  • Its first launch was successful in 2012 and has been launched twice more.
  • Now it has reached the utility level. He plans to use this spacecraft for India's human space program.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel