தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் / NATIONAL FOOD SECURITY PROGRAM
TNPSCSHOUTERSApril 07, 2023
0
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் / NATIONAL FOOD SECURITY PROGRAM
நோக்கம்
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் / NATIONAL FOOD SECURITY PROGRAM: இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி இன்றைய நிலையில் மந்தமாக உள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு தானியத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய அரசு, "தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தை" ஆகஸ்ட் 2007இல் அமல்படுத்தியுள்ளது.
கோதுமை, நெல் மற்றும் பயறு வகைகளில், உற்பத்தியையும், உற்பத்தி திறனையும் அதிகரித்து, உணவு தானிய தன்னிறைவை அடைவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதிய தொழில் நுட்பங்களையும், பண்ணை மேலாண்மை முறைகளையும் விவசாயிகளுக்கு அளித்து, மகசூல் குறைபாட்டை ஈடுசெய்வதும் இதன் முக்கிய குறிக்கோள்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் / NATIONAL FOOD SECURITY PROGRAM: தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் - நெல்
தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் - கோதுமை
தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் - பயறு வகைகள்
11வது திட்டத்தில் (2007- 2012) தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டம் திட்டத்தின் பொருளாதார ஒதுக்கீடு ரூ.4882.48 கோடியாகும். பயன்பெறும் விவசாயிகள் 50% சாகுபடி செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவரவர் பண்ணைகளில் சாகுபடி செய்ய வேண்டும்.
பயனாளி விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் அவர்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை, அரசு, அவர்கள் கடன் பெற்றுள்ள வங்கிகளுக்கு அளித்து விடுகிறது.
இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், 2011-12 இல் நெற்பயிரில் 10 மில்லியன் டன், கோதுமையில் 8 மில்லியன் டன் மற்றும் பயறு வகைகளில் 2 மில்லியன் டன் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறது.
திட்டத்தின் கீழ்வரும் மாநிலங்கள்
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் / NATIONAL FOOD SECURITY PROGRAM: 15 மாநிலங்களில் (ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம், பீஹார், சட்டிஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்) உள்ள 142 மாவட்டங்கள் இத்திட்டத்தின் நெல் பிரிவின் கீழ் வருகிறது.
9 மாநிலங்களில் (பஞ்சாப், ஹரியானா, உ.பி, பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்ட்ரா மற்றும் மேற்கு வங்காளம்) உள்ள 142 மாவட்டங்கள் இத்திட்டத்தின் கோதுமை கீழ் வருகிறது.
16 மாநிலங்களில் (ஆந்திரா, பீஹார், சட்டிஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ஒரிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வாங்காளம்) உள்ள 468 மாவட்டங்கள், இத்திட்டத்தின் பயிர்கள் பிரிவின் கீழ் வருகிறது.
20 மில்லியன் எக்டரில் நெற்பயிரும், 13 மில்லியன் எக்டரில் கோதுமையும், 4.5 மில்லியன் எக்டரில் பயிர்களும் மேற்கண்ட மாவட்டங்களில், இத்திட்டத்தின் கீழ் வருகிறது.
இது நெல் மற்றும் கோதுமை சாகுபடி செய்யப்படும் பரப்பில் 50% ஆகும். பயறு வகைகளில், 20% கூடுதலான பரப்பை உருவாக்ககப்பட உள்ளது.
ENGLISH
Objective
NATIONAL FOOD SECURITY PROGRAM: India's food grain production is sluggish at present. The demand for food grains is also increasing with the growing population.
Considering this, the Government of India has implemented the "National Food Security Scheme" in August 2007.
The main objective of the scheme is to increase production and productivity in wheat, rice and pulses and achieve food grain self-sufficiency.
Its main objective is to provide farmers with new technologies and farm management methods to compensate for yield shortfalls.
Salient Features of National Food Security Programme
NATIONAL FOOD SECURITY PROGRAM: National Food Security Program - Rice
National Food Security Program - Wheat
National Food Security Program - Pulses
In the 11th Plan (2007-2012), the financial allocation of the National Food Security Program was Rs.4882.48 crore. The beneficiary farmers have to bear 50% of the cost of cultivation. Cultivation in their farms.
Beneficiary farmers can take loans from banks. In this case, the government gives the subsidy given to them to the banks from which they have taken loans.
Implementation of the scheme will increase production by 10 million tonnes of paddy, 8 million tonnes of wheat and 2 million tonnes of pulses in 2011-12. And this also increases employment.
States under the scheme
NATIONAL FOOD SECURITY PROGRAM: 142 districts in 15 states (Andhra Pradesh, Assam, Bihar, Chhattisgarh, Gujarat, Jharkhand, Karnataka, Kerala, Madhya Pradesh, Maharashtra, Orissa, Tamil Nadu, Uttar Pradesh and West Bengal) are covered under the rice wing of the scheme.
142 districts in 9 states (Punjab, Haryana, UP, Bihar, Rajasthan, Madhya Pradesh, Gujarat, Maharashtra and West Bengal) are covered under the wheat scheme.
468 districts in 16 states (Andhra Pradesh, Bihar, Chhattisgarh, Gujarat, Karnataka, Madhya Pradesh, Maharashtra, Orissa, Rajasthan, Tamil Nadu, Punjab, Haryana, Uttar Pradesh and West Bengal) are covered under the crops wing of the scheme.
20 million hectares of paddy, 13 million hectares of wheat and 4.5 million hectares of crops are under this scheme in the above districts.
It accounts for 50% of the area under paddy and wheat cultivation. In pulses, 20% additional area is to be developed.