6th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிபா தரவரிசையில் 6 வருடங்களுக்குப் பிறகு அர்ஜெண்டினா முதலிடம்
- அர்ஜெண்டினா அணி கடந்த மாதம் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் தரவரிசையில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.
- அந்த அணி 6 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேவேளையில் கடந்த மாதம் இறுதியில் மொரோக்கோவிடம் தோல்வி அடைந்த பிரேசில் அணியானது தரவரிசையில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
- பிபா உலகக் கோப்பையில் 2-வது இடம் பிடித்துள்ளது பிரான்ஸ். தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை அடைந்துள்ளது அந்த அணி.
- பெல்ஜியம் 4-வது இடத்தில் தொடர்கிறது. இத்தாலி உள்ளிட்ட இரு அணிகளுக்கு எதிராக சமீபத்தில் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி 5-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து, குரோஷியா, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் முறையே 6 முதல் 10-வது இடங்களில் உள்ளன.
- ஆசிய அணிகளில் ஜப்பான் 20-வது இடத்தை பிடித்துள்ளது. 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்திய கத்தார் 61-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து அணி 5 இடங்கள் முன்னேறி 101-வது இடத்தை பிடித்துள்ளது.
- தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். இதன் தொன்மையைக் கண்டறிய, முறையான அகழாய்வுகள் அவசியம்.
- தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழக வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.
- அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் காலவரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
- நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
- அதன்படி, இந்த ஆண்டில், சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அகரம், கொந்தகையில் உள்ள தொல்லியல் தளங்களில் 9-ம் கட்ட ஆய்வு, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் 3-ம் கட்டம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 2-ம் கட்டம், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2-ம் கட்டம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் முதல்கட்டம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் முதல் கட்டம், தருமபுரி மாவட்டம் பூதிநத்தத்தில் முதல் கட்டம், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூரில் 3-ம் கட்டமாக ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
- இந்தப் பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
- மேலும், கீழடி அருங்காட்சியகத்துக்காக கீழடி புனை மெய்யாக்க செயலியை (Keeladi Augment Reality App) தமிழக தொல்லியல் துறை உருவாக்கியுள்ளது. கீழடி அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள 200 தொல்பொருட்களை புனை மெய்யாக்கம் மற்றும் முப்பரிமாணத்தில் பார்க்கலாம்.
- கலைப் பொருட்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். பார்வையாளர்கள் தங்களின் செல்போன் வாயிலாகவே, அகழாய்வுக் குழி மற்றும் தொல்பொருட்களைப் பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
- 'பெட்டிங்' எனப்படும் பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக, சுய ஒழுங்குமுறை அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
- இது, ஆன்லைன் விளையாட்டில் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும். எத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை அனுமதிக்கலாம்; எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக, இந்த அமைப்புகள் முடிவெடுக்கும்.
- ஆன்லைன் விளையாட்டைப் பொறுத்தவரை, பந்தயத்துடன் கூடியதா, இல்லையா என்பது தான் முக்கியம். பந்தயத்துடன் கூடிய ஆன்லைன் விளையாட்டாக இருப்பின், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை இந்த சுய ஒழுங்குமுறை அமைப்புகள் கூறிவிடும்.
- ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணைய தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா 46 ஓட்டுக்களை பெற்றுவெற்றி பெற்றது. இதன் அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும், சீனா 19 ஓட்டுகளும், யுஏஇ 15 ஓட்டுகளும் பெற்றன. தென் கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 2வது வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
- இந்தியா ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அர்ஜென்டினா, சியரா லியோன், ஸ்லோவேனியா, உக்ரைன், தான்சானியா ஐக்கிய குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜனவரி 1, 2024 முதல் 4 ஆண்டு பதவி காலத்திற்கான அங்கீகாரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- இதன்படி ஐநா புள்ளியியல் ஆணையத்திற்கு 4 ஆண்டு காலத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.