- 07.2018 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாவட்டத்தின் கொங்கணாபுரத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- அம்மா பூங்காக்களில் உள்ள இடங்களில் அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படவிருக்கிறது. இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படும்.
அம்மா உடற்பயிற்சியகத்தின் நன்மைகள்
- இது கிராமப்புற இளைஞர்களின் உடற்பயிற்சிக்கு உதவி செய்து, தங்கள் உடற்திறனை மேம்படுத்த உதவுகிறது.
- இது கிராமப்புற மக்களிடையே சுகாதாரம் குறித்த அறிவை அதிகரிக்கிறது.
- இளைஞர்களின் தலைமைப் பண்பு மற்றும் மன உறுதியை இது மேம்படுத்துகிறது.
- இது இளைஞர்களை விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார் செய்கிறது.
பயனாளிகள்
- கிராமப்புறங்களில் உள்ள மக்கள்
பயன்கள்
- கிராமப்புற மக்களின் உடற்தகுதி மேம்பாடு.
சென்னை சிற்றுந்து
- தமிழ்நாடு அரசு 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி சென்னையில் “50 சிற்றுந்து” சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது அருகிலுள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையங்களுக்குச் செல்ல பேருந்து வசதியில்லாத பகுதிகளை இணைப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- “சிற்றுந்து” சேவை என்றழைக்கப்படும் இந்த சேவையானது மாநிலத்தின் மற்ற பகுதிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.