- மூன்றாம் பாலினத்தவர் நலக் கொள்கையை உருவாக்கிய முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
- நாட்டில் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கு ஒரு சிறப்புத் தரவுத் தளத்தை தமிழ்நாடு உருவாக்கியிருக்கிறது.
- தமிழ்நாட்டில் திருநங்கைகள் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாரியம் உருவாக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் தேதி “திருநங்கைகள் தினமாக” அனுசரிக்கப்படுகிறது.
- குடும்ப அட்டைகள் மற்றும் இலவச வீட்டு வசதித் திட்டங்கள்.
- அரசுப் பொது மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சையின் மூலம் இலவசமாக பாலினத்தை மாற்றிக் கொள்ளுவதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இவர்கள் இலவச கல்வி பயில வழி செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-IV தேர்வில் வெற்றி பெற்ற முதலாவது திருநங்கை ஸ்வப்னா ஆவார்.
- கே. பிரித்திகா யாஷினி சென்னை நகர காவல் துறையிடமிருந்து பணி நியமன ஆணையைப் பெற்றார்.
மூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்
April 05, 2019
0