பிரதமர் மோடிக்கு 'சயித் விருது' ஐக்கிய அரபு அமிரகம் அறிவிப்பு
- இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரசு அமிரகத்தின் உயர்ந்த விருதான 'சயித் விருது' வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமிரகம் அறிவித்து உள்ளது.
- ஐக்கிய அரபு அமிரகத்தின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம், நாட்டின் அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்தமுறை இந்திய பிரதமருக்கு வழங்கப்படு வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
'கி.மு 905 காலத்து பொருள்'- ஆதிச்சநல்லூர் தொன்மையை வெளியிட்டது தொல்லியல் துறை!
- ஆ திச்சநல்லூரர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தை, 'கார்பன் பகுப்பாய்வு' செய்து நீதிமன்றத்தில் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.
- இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் சிலவற்றை கார்பன்பகுப்பாய்வுக்கு அனுப்பியிருந்தது மத்திய அரசு. அதன் ஆய்வு முடிவைத் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது மத்திய அரசு.
- அதில், ''கார்பன் பகுப்பாய்வு செய்யப்பட்ட இரண்டு பொருள்களின் காலம், 'கி.மு 905 மற்றும் கி.மு 971' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு தகுதி
- இந்தியாவில் தற்போது பயிரிடப்பட்டு வரும் 700 வகையான பூண்டு வகைகளில் தனிச்சுவை, மருத்துவப் பண்புகள் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு தகுதி கிடைத்துள்ளது என்றார் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழக உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன்.
500 கி.மீ தூரத்திற்கு பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணையுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்க இந்திய கடற்படை திட்டம்
- 500 கி.மீ தூரத்திற்கு பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புடன் கூடிய 6 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளின் எல்லைகளில் மட்டுமின்றி கடற்பரப்பிலும் பதற்றம் நீடிக்கிறது.
- எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பு மற்றும் கடற்கரையோரங்களில் உள்ள எதிரிகளின் முகாம்களை தாக்கி அழிக்கும் 12 ஏவுகணை தடுப்பு அமைப்பை கொண்டதாக நீர்மூழ்கி கப்பலை வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
40 நாட்களில் இந்திய ராணுவம் புதிய சாதனை
- ஜம்மு - காஷ்மீரில், 260 அடி நீள தொங்கு பாலத்தை, 40 நாட்களில் கட்டி முடித்து, நம் ராணுவ வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லே மாவட்டத்தில், சோக்லம்ஸர் கிராமம் உள்ளது. இங்கு, சிந்து நதியின் மேல், 260 அடி நீளமுள்ள தொங்கு பாலத்தை கட்டும் பணியில், நம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
- இந்த பாலம், 500 டன் எடை உடைய உபகரணங்களை வைத்து, புதிய பொறியியல் தொழில்நுட்பத்தில், 40 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த தொங்கு பாலத்தின் நடுவே, துாண்கள் எதுவும் இல்லை.
- லே - லடாக் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், இதற்கு, மைத்ரி பாலம் என பெயரிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஓய்வு பெற்ற ராணுவ வீரர், நெயிக் புங்கக் ஆங்டஸ், 89, இந்த தொங்கு பாலத்தை சமீபத்தில் திறந்து வைத்தார்.சோக்லம்ஸர், ஸ்டோக் மற்றும் சுச்சோட் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த கட்டப்பட்ட இந்த பாலம், மக்களின் பயன்பாட்டுக்காக, நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
பென்ஷன் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது! - உச்ச நீதிமன்றம்
- ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவரின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியாக (EPF) 12%, நிறுவனத்தின் சார்பில் 12% சேர்த்து, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும். ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67% மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு (EPF) அளிக்கப்படும்.
- மீதமுள்ள 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) என அழைக்கப்படும் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.
- 1.9.2014-ம் தேதிக்குப் பிறகு புதிதாக வேலைக்குச் சேர்பவர்களும், பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை வருங்கால வைப்புநிதி ஆணையம் கடந்த 2018-ல் அறிவித்திருந்தது.
- வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் திட்டங்களில் இருக்கும் இந்த வேறுபாட்டை எதிர்த்து, கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியாளர்கள் சார்பில் கடந்த 2018-ல் வழக்கு தொடரப்பட்டது.
- வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 15,000 ரூபாய் வரம்புகள் எதுவும் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கக் கூடாது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
- வெறும் 15,000 ரூபாயை அடிப்படை ஊதியமாகக் கருதாமல், ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, கடைசியாகப் பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.