தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு நீதிபதி தேவதாஸ் நியமனம்
- தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், கே.ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம், மூத்த வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி கொள்கை: ரிசர்வ் வங்கியின் 3 நாள் கூட்டம் தொடங்கியது
- இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த 3 நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மும்பையில் தொடங்கியது.
- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிதி கொள்கை குழுவில் (எம்பிசி) அங்கம் வகிக்கும் ஆறு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
- கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில்,கர்நாடக மாநிலத்தில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 292 பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.
- இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுப்படி, கர்நாடகா மாநிலத்தின் வேலை இல்லா திண்டாட்டம் 1.2 சதவீதமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
- அதேசமயம் திரிபுரா தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக இருக்கிறது. இங்கு 22.9 சதவீதம் வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது.
- வேலைவாய்ப்பு முகாம், பல்வேறு மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம் ஆகியவை அம்மாநில மக்கள் பெருமளவு வேலை வாய்ப்பை பெற காரணமாக அமைந்துவிட்டது.
ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடந்த சிறு நாடு எஸ்டோனியா
- ஐரோப்பா கண்டத்தில் உள்ள சிறு நாடான எஸ்டோனியாவில் வாக்குப் பதிவு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது
- உலகநாடுகளில் இணைய தள பயன்பாடு பெரிதும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத் தக்கது. பல வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இணையம் மூலம் அரசு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
- ஐரோப்பாவில் உள்ள ஒரு மிகச்சிறிய நாடு எஸ்டோனியா. இந்த நாட்டின் பெயரையும் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். செய்தித் தாளில் இடம்பெறாத நாடுகளில் ஒன்றாக இருந்த இந்நாடு இப்போது உலகப் புகழ் அடைந்துள்ளது.
- இதற்கு முக்கிய காரணம்சமீபத்தில் நடந்த இந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் ஆகும்.இந்த தேர்தலில் 44% வாக்குகள் ஆன்லைன் மூலம் பதிவாகி உள்ளன. இதில் வெற்றி பெற்ற கட்சி ஆன்லைனில் 40% வாக்குகள் பெற்றது. இது அந்நாட்டில் பதிவான மொத்த வாக்குகளில் 30% ஆகும்.
- அனைத்து வயதினருக்கும் ஆன்லைன் மூலம் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலம் வாக்களித்தவர்களில் 25% பேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். அத்துடன் ஆன்லைனில் 20% வாக்குகள் 45 முதல் 54 வயதான வாக்காளார்கள் வாக்களித்துள்ளனர்.
புதுச்சேரி தொலைக் காட்சி நிலைய இயக்குனருக்கு தமிழ் சங்க விருது
- புதுச்சேரி தமிழ் சங்கம் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் புதுச்சேரி தொலைக் காட்சி நிலைய இயக்குனர் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு தமிழ் சங்க விருது வழங்கப்பட்டது.
கடன்பத்திரங்களை வெளியிட்டு எல் & டி பைனான்ஸ் ரூ.1,000 கோடி திரட்டுகிறது
- கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி நிதி திரட்டப்படவுள்ளது. 3,5, மற்றும் 8 ஆண்டுகளில் முதிர்வடையும் வகையில் இந்த கடன்பத்திரங்கள் வெளியிடப்படும். இதற்கான வட்டி விகிதம் 8.48-9.05 சதவீதமாக இருக்கும்.
- இதில், திரட்டப்படும் தொகை கடன், நிதியளித்தல், தற்போது நிறுவனத்தின் கடன் மறுநிதியளித்தல் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்.
- ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கவுள்ள இக்கடன்பத்திர வெளியீடு 18-ஆம் தேதியுடன் முடிவடையும். மேலும், இவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எல் & டி பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
- எடல் வைஸ், ஏகே கேப்பிட்டல், ஆக்ஸிஸ் கேப்பிட்டல் மற்றும் டிரஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அட்வைஸர் ஆகியவை இக்கடன்பத்திர வெளியீட்டை நிர்வகிக்க உள்ளன.
- கடந்த மாதம் இந்நிறுவனம் முதல் கட்ட கடன்பத்திர வெளியீட்டை மேற்கொண்டு ரூ.1,500 கோடி திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், வரவேற்பு அதிகரித்ததையடுத்து, ரூ.2,228.06 கோடியை திரட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.