Type Here to Get Search Results !

அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்

அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்

  • இது 11.01.2016 அன்று விலை மட்டுப்படுத்துதல் நிதியத்தின் கீழ் (Price Stabilization Fund) தமிழ்நாடு உணவுப் பொருள் விநியோக கழகத்தினால் 25 மாவட்டங்களில் 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் தொடங்கப்பட்டன. 
  • இது குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. 



அம்மா சிமெண்ட்

  • இது 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. 
  • இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • மிகக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாயை ஈட்டும் குழுக்கள் மானிய விலையில் சிமெண்டைப் பெறுவதற்கு இது உதவுகிறது. 
  • அம்மா சிமெண்ட்டின் ஒரு மூட்டையின் விலை ரூ.190 ஆகும். 
  • இந்த சிமெண்ட்டானது தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழக நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. 
  • ஒரு சிமெண்ட் மூட்டையின் உண்மையான மதிப்பு ரூ.360 ஆகும். ஆனால் இத்திட்டத்தின் கீழ் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை பாதியாகக் குறைந்துள்ளது. 
  • தாம் கட்டும் வீடுகளுக்காக நுகர்வோர்களுக்கு 100 சதுர அடிக்கு 50 மூட்டைகளும் 1500 சதுர அடிக்கு 750 சிமெண்ட் மூட்டைகளும் வழங்கப்படும். 
  • இத்திட்டத்தின் கீழ் பொது மக்கள் குறைந்தபட்சம் 10 சிமெண்ட் மூட்டைகளையும் அதிகபட்சமாக 100 சிமெண்ட் மூட்டைகளையும் பெற முடியும். 
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிடங்குகளிலிருந்து அவை விற்பனை செய்யப்படும். 
  • மாநிலத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறையின் 250 கிடங்குகளிலிருந்து அவை விற்பனை செய்யப்படும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel