பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை; ஆர்பிஐ ரூ.25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு
- ரிசர்வ் வங்கி, வெளிச் சந்தையில், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அரசு கடன் பத்திரங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தாண்டில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இரு முறை கூடியது. இரு முறையும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி, தலா, 0.25 சதவீதம் என, 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது.
- தனி நபர் கடன், வாகனம், வீட்டு வசதி கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறைக்கப்பட்டால், சாதாரண மக்களுக்கு பயன் கிடைக்கும்.
- ரிசர்வ் வங்கி, வெளிச் சந்தையில். 358 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 25ஆயிரம் கோடியாகும்.
- முதற்கட்டமாக, வரும் மே, 2ல், 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் பத்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள், எஞ்சிய தொகைக்கான கடன் பத்திரங்கள் வாங்கப்படும்.
டிக் டாக் ஆப் தடை நீங்கியது
- ஆபாசமான வீடியோ காட்சிகளை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.
- தவறான நோக்கத்திலோ (அ) ஆபாசமாகவோ வீடியோ பதிந்தால் அடுத்த 15 நிமிடங்களில் வீடியோ நீக்கம் செய்யப்படும் - டிக்-டாக் செயலி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உறுதி.
- நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம்
- சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
- சென்னை பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கூறி கல்லூரி பேராசிரியர்கள் 7 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
- இந்த வழக்கு நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்லூரி முதல்வர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாக பச்சையப்பன் அறக்கட்டளை தேர்வுக்குழு தரப்பில் வாதிடப்பட்டது.
- அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்லூரி முதல்வர் சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி முதல்வரை மீண்டும் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளும்படி நீதிபதி அறிவுறுத்தினார்.
- அதேவேளையில் மனுதாரர்கள் கூறியுள்ள முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மிதக்கும் அணுமின்நிலையத்தில் சோதனை வெற்றி
- ரஷிய நிறுவனம் தயாரித்துள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தில் வெற்றிகரமாக மின்உற்பத்தி செய்து பரிசோதனை செய்யப்பட்டது. ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது.
- பெரும் பொருட்செலவில் மிகப்பெரிய சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில், மின்சார உற்பத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- மிதக்கும் அணுமின் நிலையத்தில் சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, ரொஸாட்டம் குழுவினரின் மிகப்பெரிய சாதனை என அந்த நிறுவனம் கூறி உள்ளது.
ராமாயண காட்சி சிறப்பு தபால் தலை இந்தோனேஷியா வெளியிட்டது
- இந்தியா - இந்தோனேஷியா தூதரக நட்புறவு ஏற்பட்டதன் 70-வது ஆண்டையொட்டி இந்தோனேஷியா அரசு ராமாயண காட்சியை விளக்கும் சிறப்பு தபால்தலை வெளியிட்டுள்ளது.
- இந்தியா- இந்தோனோஷியா இடையே கடந்த 1949-ம் ஆண்டு தூதரக ரீதியில் நட்புறவு ஏற்பட்டது. இதன் 70-ம் ஆண்டையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட இந்தோனேஷிய அரசு முடிவு செய்திருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி இந்தோனேஷியா சென்றிருந்த போது இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
- இந்த தபால் தலையை இந்தோனேஷியாவின் பாபக் நெயோமன் நூரத் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.
இலங்கையில் அவசரகால சட்டம் நிறைவேற்றம்
- இலங்கையில் அவசரகால சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை 3 தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது.
- இதில் 360 பேர் பலியாயினர். இதனைடுத்து இலங்கை அரசு அவசர கால சட்டம் கொண்டு வந்தது.மேலும் வாக்கெடுப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
- இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மாளிகையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை 10 மணி அளவில் அனைத்துகட்சி கூட்டம் அதிபர் தலைமையில் நடைபெறும் எனவும், மாலை 4 மணி அளவில் மத சம்பந்தப்பட்ட ஆலோசனை குழு கூட்டம்நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் தன்கருக்கு வெள்ளிப் பதக்கம்
- சீனாவின் ஸியான் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அமித் தன்கர், கஜகஸ்தானின் டேனியர் காய்சனோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்த அமித் தன்கர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- 61 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ராகுல் அவாரே 9-2 என்ற கணக்கில் கொரியாவின் ஜின்சோல் கிம்மை வீழ்த்தினார். இந்தத் தொடரில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
- நேற்று முன்தினம் 65 கிலோ எடைப் பிரிவில் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கமும், 79 கிலோ எடைப் பிரிவில் பிரவீன் ராணா வெள்ளிப் பதக்கமும், 97 கிலோ எடைப் பிரிவில் சத்யவர்த் கதியான் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.
ஆசிய தடகள போட்டி - ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்யராஜீவ் உள்பட இந்திய அணி
- 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது.
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
- 4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி நாளில் இந்திய வீராங்கனை சித்ராவுக்கு தங்கம்
- 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது.
- பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.
- கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் அமித் குமார்
- சீனாவின் ஸியான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் தாங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராகுல் அவாரே வெண்கலம் வென்றார். 74 கிலோ எடைப் பிரிவில் ப்ரீ ஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் டானியர் கெய்சனோவிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார் அமித் தாங்கர்.
- முன்னதாக அரையிறுதியில் கிர்கிஸ்தான் வீரர் லிஜிஸ் ஜகிப்பெகோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் அமித். 61 கிலோ எடைப்பிரிவில் மோதிய ராகுல் அவாரே கொரிய வீரர் ஜின்சியோல் கிம்மிடம் 9-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இ
- ந்த போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக இதுவரை 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளது. 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தங்கம் வென்றார்.
- விக்கி (92 கிலோ எடைப்பிரிவு), தீபக் புனியா (86 கிலோ), சுமித் (125 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர். 2 தினங்களில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.