- சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர்.
- தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
- பிறப்பு - 09 பிப்ரவரி 1873
- பம்மல், தமிழ்நாடு, இந்தியாஇறப்புசெப்டம்பர் 24, 1964கல்விபச்சையப்பா கல்லூரிபணிநாடகாசிரியர், நடிகர் முத்தமிழில் ஒன்றான நாடகக் கலைக்கு உயிரூட்டியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அதை நன்கு பேணி வளர்த்தவர் பம்மல் சம்பந்த முதலியார். படித்தவர்கள் மத்தியில் அக்கலையைக் கொண்டு சேர்த்தவர் அப்பெருந்தகை. 19ம் நூற்றாண்டில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அக்கலையை உயர்த்தியவர் பம்மல் சம்பந்த முதலியார்.
- பம்மல் விஜயரங்க முதலியார் சென்னையில் ஆச்சாரப்பன் தெருவில் வசித்து வந்தார். அவர் தன் முதல் மனைவி இறந்து பிறக மாணிக்கவேலு அம்மையாரை 1860ம் ஆண்டு இரண்டாம் தாரமாக மணந்தார். அவர்களின் நான்காவது மகனாக 1873ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி சனிக்கிழமை திருஞானசம்பந்தம் பிறந்தார்.
- விஜயரங்க முதலியார் மதுரை திருஞான சம்பந்தர் மடத்து அடியவர் 1872ம் ஆண்டு அம்மடத்தில் அவர் சிவதீட்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு இவர் பிறந்ததால் 'திருஞான சம்பந்தம்' என்று பெயர் சூட்டினார் அவரது தந்தை. பிறகு எல்லோரும் பம்மல் சம்பந்த முதலியார் என்று மரியாதையுடனும் அன்புடனும் அழைத்தனர்.
- சம்பந்த முதலியார் க்கால வழ்கப்படி முதலில் திண்ணைப் பள்ளி்க்கூடத்திலும் பிறகு பிராட்வேயிலிருந்து 'ஹிந்து புரொபரைடர்' என்ற பள்ளிக்கூடத்திலும் பிறகு செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கூடத்திலும் படித்தார். கல்லூரி படிப்பைப் பச்சையப்பன் கல்லூரியில் முடித்த பிறகு சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
- வழக்கறிஞராக இருந்த தன் தமையனார் ஐயாசாமி முதலியாரிடம் உதவி வழக்கறிஞராக சேர்ந்தார். பிறகு தனியாகத் தொழில் நடத்திப் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆனார். தன் உழைப்பாலும் நேர்மையாலும் நீதிபதி ஆனார். நீதிபதி பதவிக்கே பெருமை தேடித்தரும் விதத்தில் பணியாற்றினார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
- சம்பந்தர் நீதிபதியாக இருந்தபோது நோய்வாயப்பட்டிருந்த அவர் மனைவி காலமானார். மறுநாள் காலை தன் மனைவியின் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று தகனம் செய்தவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துப் பூஜை செய்து உணவருந்திவிட்டு மதியம் நீதிமன்றத்துக்குச் சென்றார்.
- தன்னால் வழக்கறிஞர்களும் வழக்கு சம்பந்தப்பட்டவர்களும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக முதலியார் கூறினார்.
- சிறுவயது முதலே முதலியாருக்கு நாடகக்கலை மீது விருப்பம் உண்டு. ஆங்கில நாடகங்களைப் படித்தத் தாமும் அதுபோல எழுதவேண்டும் என்று விரும்பினார்.
- பெல்லாரி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் என்பவரிடம் 'சரச விநோதினி சபா' எனும் நாடகக் கம்பெனி நடத்திய தெலுங்கு நாடகமே சம்பந்தர் தமிழ் நாடகம் எழுதக் காரணமாயிற்று.
- வடமொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு சகுந்தலை நாடகத்தை 'மானியர் வில்லியம்ஸ்' என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அந்நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார் சம்பந்தர்.
- கோவிந்தராவ் நாடகக் கம்பெனி நடத்திய 'ஸ்திரி சாகசம்' என்ற நாடகமே முதலியார் பார்த்த முதல் நாடகம். அந்த நாடகத்தையே 'புஷ்பவல்லி' என்ற பெயரில் சிறிது மாற்றி எழுதினார். அதுவே சம்பந்த முதலியார் எழுதிய முதல் நாடகம்.
- சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1.7.1891ல் நண்பர்களுடன் சேர்ந்து சுகுண விலாச சபா என்ற சபையை நிறுவி அதன் மூலம் தான் எழுதிய நாடகங்களை நடத்தினார். அதில் நடிக்கவும் செய்தார். டாக்டர்கள், வக்கீல்கள் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தவர்கள் போன்றவர்கள் சுகுண விலாச சபா நாடகங்களில் நடித்தனர்.
- துருவன் கதையின் தாக்கத்தால் 'மனோகரா' கதையை எழுதி அதை நாடகமாக்கினார். மனோகரா மிகவும் புகழ்பெற்ற நாடகம். அந்நாடகக் கதாநாயகிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் தந்தையுடன் புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கே புதுக்கோட்டை சமஸ்தானம் வெளியிட்ட ஒர நாணயத்தைக் கண்டார். அதில் விஜயா என்று எழுதியிருந்தது. அப்பெயரையே மனோகரா நாடகக் கதாநாயகிக்கு வைத்தார்.
- இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் இலங்கையிலும் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் நடந்து அவருக்கு புகழைத் தேடித்தந்தன.
- பேசும் படங்கள் வந்ததும் அதிலும் அவர் பணியாற்றினார். இவரது பல நாடகங்கள் திரைப்படங்களாகவும் வந்தன. குறிப்பாக பெரும் வெற்றிபெற்ற சபாபதி திரைப்படம் இவரத நாடகமே.
- தமிழ்மீது கொண்டிருந்த பற்றால் பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார் சம்பந்தர்.
- சிவாலயங்கள் பற்றி நான்கு பாகங்கள் கொண்ட நூல் எழுதினார். 1946ம் ஆண்டு அந்நூல் அச்சேற திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் பொருளுதவி செய்தார். மற்றும் காலக் குறிப்புகள், சாதாரண உணவுப் பொருளின் குணங்கள், நாடகத் தமிழ் போன்ற நூல்களை எழுதி உள்ளார்.
- மேலும் அவரது பல நாடகங்கள் நூல் வடிவம் பெற்றன. சம்பந்தர் எழுதிய நூல்களுக்குப் பரிதிமாற் கலைஞர், டாக்டர் உ.வே.சா., பூசை. கலியாண சுந்தர முதலியார் போன்ற அறிஞர் பெருமக்கள் சாற்றுக் கவிகள் எழுதிக் கொடுத்தனர்.
- சம்பந்த முதலியார், நாடகங்களையும், பிற நூல்களையும் பென்சிலால் மட்டுமே எழுதினார். கடைசி வரை இப்பழக்கம் அவரிடம் இருந்தது.
- சம்பந்த முதலியார் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராக 1900 முதல் 1924ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில்தான் அக்கோயில் கோபுரம் கட்டப்பட்டது. கோயில் திருக்குளம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது.
- அப்போது ஓர் ஆங்கிலேய கவர்னர் கோயிலுக்கு வர விரும்பினார். அவர் கொடிமரத்தைத் தாண்டி உள்ளே போகக் கூடாது என்று சம்பந்த மதலியார் கண்டிப்பாக் கூறிவிட்டார்.
- சென்னைப் பல்கலைக் கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் செனட் அங்கத்தினராக இருந்தார். இந்து தர்ம சமாஜத்தில் பல ஆண்டுகள் அங்கத்தினராக இருந்து பணியாற்றி உள்ளார். விளையாட்டுத்துறை தொடர்பான குழுக்களில் அங்கத்தினராக இருந்து பணியாற்றி உள்ளார்.
- சம்பந்தரின் 81ம் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1959ம் ஆண்டு பத்ம பூஷண் பட்டம் பெற்றார். பல கல்லூரிகளும் பல சபாக்களும் இவருக்கு விழா எடுத்தன. நாடகத் திரைப்படத்துறையினரும் அவர் பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர்.
- தமிழ் நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய பம்மல் சம்பந்த முதலியார் 24.9.1967 அன்று இறையடி சேர்ந்தார். சம்பந்த முதலியார் தன் இறுதிநாள் வரை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.
TNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார்
April 25, 2019
0
Tags