துணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள்: மத்திய அரசு முடிவு
- பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கண்ணி வெடிகளிலிருந்து பாதுகாக்க, துணை ராணுவ படையினருக்கு, புதிய வாகனங்களை கொள்முதல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பணியாற்றும், துணை ராணுவ படையினருக்கும், புதிய வாகனங்கள் வாங்க, 613.84 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
- இந்த நிதியில், கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனங்கள், குண்டு துளைக்காத சட்டைகள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனத்தில், ஒரே நேரத்தில், ஆறு பேர் பயணம் செய்யலாம்.
- அதேபோல், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய கமாண்டோ படையினருக்கு, 'ரிமோட்' மூலம் இயக்கப்படும் வாகனங்கள் வாங்க, 16.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த வாகனம் மூலம், கட்டடத்துக்குள்ளும், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்த முடியும். மேலும், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, அதை அழிக்க, கமாண்டோ படையினருக்கு, இந்த வாகனம் மிகவும் உதவியாக இருக்கும். மாடி அல்லது சரிவு பாதையில், இந்த வாகனங்கள் பயணிக்க முடியும். இந்த வாகனத்தில், 'எக்ஸ்ரே' உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.
வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
- பராமரிப்பு பணிகளை ஆய்வுசெய்ய குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
- இன்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பராமரிப்பு பணிகளை ஆய்வுசெய்ய குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.பின்னர் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையை ஜூன் 11-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலின மாற்று சிகிச்சை செய்தவரும் இந்து திருமணச் சட்டத்தில் மணமகள்தான்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- தூத்துக்குடியை சேர்ந்த சிரிஜா என்ற பாலின மாற்று சிகிச்சை செய்து கொண்ட திருநங்கைக்கும், அருண்குமார் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் பேசி முடிவெடுத்தனர்.
- அதன்படி அவர்கள் அங்குள்ள கோயில் ஒன்றின் நிர்வாகத்தை அணுகிய போது, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. ஆனால், கடும் போராட்டத்துக்கு பின்னர் அவர்கள் திருமணம் கடந்த மாதம் நடைபெற்றது.
- பின்னர் அவர்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்யுமாறு கோரி பதிவாளரை அணுகியுள்ளனர். ஆனால் அவர்களது திருமணத்தை இந்து திருமணச் சட்ட விதிகளின் படி பதிவு செய்ய இயலாது என்று பதிவாளர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
- ஆனால் இந்த வழக்கில் திங்களன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் பாலின மாற்று சிகிச்சை செய்தவரும் இந்து திருமணச் சட்டத்தில் மணமகளாகத்தான் கருதப்படுவார் என்று கூறியதோடு, இந்து திருமணச் சட்டத்தின்படி அவர்களது திருமணம் செல்லும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிய தடகளம் இந்தியாவுக்கு 2 வெள்ளி
- டோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக மகளிர் ஹெப்டதலான் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 5993 புள்ளிகளை குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2017 போட்டியில் ஸ்வப்னா தங்கம் வென்றிருந்தார். ஜகார்த்தா ஆசிய போட்டியில் 6026 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.
- மகளிர் 4ல400 மீ கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், பூவம்மா, விகே.விஸ்மயா, ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் கொண்ட இந்திய அணி 3 நிமிடம் 16.47 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆசிய பவர்லிப்டிங் சென்னை பல் மருத்துவர் ஆர்த்திக்கு தங்கம்
- ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய பவர்லிப்டிங் சாம்பியன் போட்டி மகளிர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண் தங்கப் பதக்கம் வென்றார்.
- ஹாங்காங்கில் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஆசிய பவர்லிப்டிங் சாம்பியன் போட்டியில் பங்கேற்ற அவர் 72 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டி தங்க மகன் பஜ்ரங் புனியா
- சீனாவின் ஸியாங் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை ஆடவர் ப்ரீஸ்டைல் பிரிவில் 65 கிலோ பிரிவு அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் சிரோஜித்தினை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற பஜ்ரங் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா: இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் சயாட்பெக் ஓகஸ்úஸாவை 12-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் பஜ்ரங்.
- 2018 ஜகார்த்தா ஆசியப் போட்டி , காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த பஜ்ரங் தற்போது ஆசிய மல்யுத்த போட்டியிலும் தங்கம் வெனறுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆடவர் 79 கிலோ பிரிவில் பர்வீன் ராணா வெள்ளிப் பதக்கம் வென்றார். 97 கிலோ பிரிவில் சத்யவர்த் கடியன் வெண்கலம் வென்றார்.
சந்தோஷ் கோப்பை கால்பந்து சர்வீஸஸ் சாம்பியன்
- லூதியானாவில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பைக்கான தேசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் சர்வீஸஸ் அணி 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.
- இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பஞ்சாப் அணியும்-சர்வீஸஸ் அணியும் மோதியதில் சர்வீஸஸ் வீரர் பிகாஷ் தாப்பே அடித்த ஓரே கோல் வெற்றி கோலாக மாறியது. இதன் மூலம் 6-ஆவது முறையாக சாம்பியன் ஆனது சர்வீஸஸ்.
ஆசிய தடகளம் தஜிந்தர் சிங்குக்கு தங்கம்
- ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் 800 மீ. ஓட்டத்தில் கோமதி மாரிமுத்துவும், குண்டு எறிதலில் தஜிந்தர் சிங்கும் தங்கப் பதக்கம் வென்றனர்.
- ஆடவர் குண்டு எறிதலில் தஜிந்தர் சிங் 20.22 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
- ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீ தூரம் எறிந்து வெள்ளி வென்றார்.
- மேலும் அவர் செப்டம்பர் மாதம் டோஹாவில் நடக்கவுள்ள உலக தடகளப் போட்டிக்கும் தேர்வு பெற்றார். மகளிர் 400 மீ. தடை தாண்டுதலில் 24 வயதான சரிதாபென் கெய்க்வாட் 57.22 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். ஆடவர் 400 மீ. தடை தாண்டுதலில் ஜபிர் மாதாரி 49.13 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். ஜபிரும் உலக தடகளப் போட்டிக்கு தேர்வானார்.
- டுட்டி சந்த் மீண்டும் சாதனை: 100 மீ. தேர்வுச் சுற்றில் டுட்டி சந்த் 11.26 விநாடிகளில் கடந்து, தனது முந்தைய தேசிய சாதனையை தகர்த்தார். எனினும் உலக சாம்பியன் போட்டி தகுதி அளவான 11.24 விநாடிகளை இன்னும் எட்டவில்லை டுட்டி.
ஜப்பான்: உள்ளாட்சித் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதல்முறையாக வெற்றி
- ஜப்பானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எடோகாவா வார்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா வெற்றி பெற்றார். ஜப்பானில் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் இவர்தான்.
- எடோகாவா வார்டு தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புராணிக் யோகேந்திரா 6,447 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ஜப்பானில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முதலாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.