அபிநந்தனுக்கு 'வீர் சக்ரா' விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை
- விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, போர்க்கால வீர தீர செயலுக்கான 'வீர் சக்ரா' விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை செய்துள்ளது.
- பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து போபால் வாயுக்கசிவு : ஐநா அறிவிப்பு
- கடந்த 1984 ஆம் ஆண்டு டிசமர் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு போபால் நகருக்கு மரண நேரமாக அமைந்தது. இந்நகரில் உள்ள அமெரிக்க உர நிறுவனத்துக்கு சொந்தமான யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து மிதைல் ஐசோ சயனைடு என்னும் விஷ வாயு கசிந்தது. கடினமான விஷமான இந்த வாயு போபால் நகர காற்று மண்டலத்தில் கசிந்தது. நகரில் ஆயிரக்கணக்கோனோர் தூக்கத்திலேயே மரணம் அடைந்தனர்.
- அதிகாலை வரை நீடித்த இந்த சம்பவத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்பு அடைந்தனர். பாதிப்பு அடைந்தோரில் பலர் இன்னமும் முழுமையாக குணம் அடையாமல் தவித்து வருகின்றனர். ஐநா சபை இந்த விபத்தை 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய தொழிற்சாலை விபத்து என அறிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 41,488 கோடி டாலராக அதிகரிப்பு
- நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 110 கோடி டாலர் (ரூ.7,735 கோடி) அதிகரித்து 41,488 கோடி டாலரை (ரூ.29.04 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
- கணக்கீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 64 கோடி டாலர் உயர்ந்து 38,676 கோடி டாலராக இருந்தது.தங்கத்தின் கையிருப்பு 7.74 கோடி டாலர் அதிகரித்து 2,330 கோடி டாலராக காணப்பட்டது.
- சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 33 லட்சம் டாலர் அதிகரித்து 145 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 37 கோடி டாலர் உயர்ந்து 336 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
- கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் முதல் முறையாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு காரணங்களால் செலாவணி கையிருப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்து போனது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன, போர்க் கப்பலான ஐ.என்.எஸ்., இம்பால்
- உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, அதிநவீன, போர்க் கப்பலான, 'ஐ.என்.எஸ்., இம்பால்' நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.கடற்படைக்காக, அதிநவீன போர்க் கப்பல்களை தயாரிக்கும், பிராஜெக்ட் - 15பி என்ற திட்டத்தின்கீழ், மும்பையில் உள்ள, மாசகோன் கப்பல் கட்டும் நிறுவனம், நான்கு போர்க் கப்பல்களை தயாரிக்கிறது.
பசிபிக் கடலைக் கடந்த முதல் பார்வையற்ற மாலுமி
- முதல் முறையாக ஒரு பார்வை திறனற்ற ஜப்பானிய மாலுமி தனது பசிபிக் கடல் பயணத்தை இரு மாதங்களில் முடித்துள்ளார்.
- ஜப்பானை சேர்ந்த மாலுமியான இவாமோட்டோ பார்வை திறன் அற்றவர் ஆவார். ஆயினும் இவருக்கு கடற்பயணங்களில் சாதனை செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆவார். தனது 16 ஆம் வயதில் பார்வையை இழந்த இவர் பார்வையற்றவர்கள்ன் நலனுக்காக நிதி திரட்டி வருகிறார்.