பிரதமர் மோடிக்கு ரஷ்யா உயர் விருது
- இந்தியா - ரஷ்யா நீண்ட கால நண்பர்கள். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு இந்த உறவு மேலும் வலுபடுத்தப்பட்டது. இந்நிலையில், இருநாட்டு உறவுக்காக சிறப்பான சேவையாற்றிய மோடியை பாராட்டி, தனது நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதை வழங்குவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. \
- 'ஆர்டர் ஆப் செயின்ட் ஆன்ட்ரூ தி அபோஸ்தல்' என்ற இந்த உயரிய விருது, ரஷ்யாவின் பெருமைக்குரியது. இந்த விருது தனக்கு வழங்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
- சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக, ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- பணி ஓய்வுக்குப் பிறகு பொன் மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் 2018, நவம்பர் 30-ஆம் தேதி நியமித்தது சரியே. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித தவறும் இழைக்கவில்லை. தமிழக அரசு 2018, நவம்பர் 29-ஆம் தேதி ஏடிஜிபியை (அபய் குமார் சிங்) நியமித்தது தேவையற்றது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது சரியில்லை. அந்த உத்தரவை தள்ளுபடி செய்கிறோம்.
- எனவே, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஏடிஜிபியை நியமித்ததும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைவராக ஏடிஜிபி இருப்பார் என்ற அந்த உத்தரவும் செல்லத்தக்கதாக உள்ளது.
- இதன் அடிப்படையில், தமிழக அரசின் மேல்முறையீடு பகுதியளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நிதியளிக்க சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நீக்குகிறோம்.
- மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொன் மாணிக்கவேலுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெறக்கூடாது. சிலை கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கை அந்த பிரிவின் ஏடிஜிபியிடம் அளிக்கப்படும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சிறப்பு அதிகாரி விசாரணை அறிக்கையை அதனிடம் சமர்ப்பிக்கலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நிதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- மத்திய பாஜக அரசு இந்த பல்லாண்டு கால நடைமுறையை மாற்ற நினைத்தது.அதன்படி தேர்தல் நிதிக்கு எதிராக தேர்தல் நிதி பத்திரம் (Electoral Bonds) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த தேர்தல் நிதி பத்திரம் என்பது கொஞ்சம் சிக்கலானது.
- இதன் மூலம் பாரத் ஸ்டேட் பேங்க் வங்கிகளில் நிதி பத்திரங்கள் வழங்கப்படும். இந்த பத்திரங்களை வாங்கி அதை நிரப்பி வங்கிகளில் கட்சிகளின் கணக்குகளில் நிதியாக செலுத்த முடியும். இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று கூறி மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது.
- இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள்.
- அதன்படி தேர்தல் நிதி பத்திர விவரத்தை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 30ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் நிதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய அளவிலான வேலையின்மை பட்டியலில் தமிழகம்
- தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வேலையின்மை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- அதில் 2017-2018 ஆண்டு காலத்தில் இந்தியாவின் 11 மாநிலங்களில் வேலையில்லா உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் ஹரியான, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், கேரளா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு வேலையின்மை பிரச்னை உள்ளது.
- 2011-12ஆம் நடத்தப்பட்ட ஆய்வைவிட தற்போது வேலையின்மை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோன்று தமிழகம் பஞ்சாப், தமிழ் நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் வேலையின்மை மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
ராஜராஜசோழன் நினைவிடத்தை தொல்லியல் துறை ஆய்வுசெய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 'உடையாளூர் பகுதியில் ராஜராஜசோழன் உடலை அடக்கம் செய்ததற்கான ஆதாரம் இல்லை' என்றார்.
- அதற்கு நீதிபதிகள், முழுமையாக ஆய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது. எனவே தமிழக அரசின் தொல்லியல் குழுவினர் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி
- பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் அனுமதி கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரதான வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆலையில் பராமரிப்பு பணி செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை அந்நிறுவனம் அணுகியது. ஸ்டெர்லைட் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்தது.
பாஜக MLA பாபுபா-வின் வெற்றி செல்லாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- குறைபாடுள்ள வேட்பு மனுவை பாஜக வேட்பாளர் மானக் தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியும் காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- இவ்வழக்கு விசாரணையின்போது, மானக்கின் வேட்பு மனுவில் தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்றும், மக்கள் அளித்த தீர்ப்பின்படி மானக்கை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
- இவ்வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, துவாரகா சட்டமன்ற உறுப்பினர் பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார்.
கட்சி தலைவர்களின் பிரசார செலவுகள் கட்சியின் வேட்பாளர் கணக்கில் சேராது : தேர்தல் ஆணையம்
- அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- மேலும் செலவு தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தலைவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து விலக்கு பெறலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
2019 ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை பெற்ற படம்
- அமெரிக்கா- மெக்ஸிக்கோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருப்பது போன்ற புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை( World Press Photo Award ) தட்டிச்சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி சிலர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களில் கைதான சான்ட்ரா சஞ்சேஸ் என்ற பெண், மகள் யனீலாவை அங்கேயே விட்டுவிட்டு, கைதிகளுடன் எல்லை படையினர்வாகனத்தில் செல்ல நேர்ந்தது.
- இதனால் இரவு தனித்து விடப்பட்ட சிறுமி பயத்தில் அழுதுகொண்டிருந்தாள். இந்த காட்சியை அந்நாட்டு புகைப்பட நிபுணர் ஜான் மூர் தத்துரூபமாக படம் பிடித்திருந்தார்.
- அதன்படி 4,738 புகைப்பட நிபுணர்கள் சமர்பித்திருந்த 78,801 படங்களில், யனீலாவின் இந்த புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை வென்றுள்ளது.
ஐ.நா. அறிக்கையில் சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி
- உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
- 2010-2019 ஆண்டுகள் இடையே இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.
- 2010-2019 ஆண்டுகள் இடையே சீனாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்து வந்துள்ளது.