ரூ.100 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது
- ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ரூ.100 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாணயத்தை வெளியிட்டார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான சேடன்-2: பரிசோதனை-ரஷ்ய அதிபர்
- ரஷ்யா அதன் அணு ஆயுதம் தாங்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான சேடன்-2, இறுதிகட்ட பரிசோதனையில் இருப்பதாக இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
- ரஷ்யாவில் "சேடன்" அல்லது RS-20B Voyovoda என்று அறியப்படும் பனிப்போரில் பயன்படுத்தப்படும் ஆயுதத்திற்கு மாற்றாக, ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்குவதற்கான திட்டங்களை 2013 ஆம் ஆண்டு ரஷ்யா அறிவித்தது.
- 2018 மார்ச்சில் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் தனது வருடாந்திர உரையில், மற்ற அணு திறன் கொண்ட ஆயுதங்களுடன் சேடன்-2 ஏவுகணையையும் அறிவித்தார் புடின்.
- சேடன் 2 அல்லது RS-28 சார்மாட் ஏவுகணையானது 100 மெட்ரிக் டன் எடையுடன் 10,000 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று தாக்கும் திறனுடையது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழையும் திறனுடையது மற்றும் டெக்சாஸ் நகரத்தின் அளவுடைய ஒரு பகுதியை அழிக்கும் திறன்கொண்டது என்கிறது இரஷ்யா.
இந்தியாவில் மனிதர்களின் வாழ்நாள் நீடிக்கிறது அறிக்கையில் தகவல்
- சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. 1994-ல் இது 123 கோடியாக இருந்தது. 2010-19 ஆண்டுகள் இடையே சீனாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்துள்ளது.
- அதே நேரத்தில் இதே காலகட்டத்தில் இந்தியாவின் இது 1.2 சதவீதமாக இருந்தது. ஆக சீனாவை விட இரு மடங்குக்கும் அதிகமாகும். தற்போது படித்தவர்கள், வேலை பார்க்கிறவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை. இதனால் தற்போது ஒரு பெண்ணின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 2.3 ஆக குறைந்துள்ளது.
- 1969-ல் வாழ்நாள் 47 ஆண்டுகளாக இருந்தது. 1994-ல் இது 60 ஆண்டுகள் என்று உயர்ந்தது. தற்போது அது 69 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது.
- இந்தியாவில் தற்போது 14 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் ஆகும். 10 - 24 வயது வரையானவர்கள் 27 சதவீதமாகவே உள்ளது. ஆனால் 15 - 64 வயது வரையானவர் எண்ணிக்கை 67 சதவீதமாக உள்ளது. 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக உள்ளது.
7 லட்சம் கோடி: கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து
- நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள தாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி அளவிலானது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
- இந்த வாராக்கடன்களில் 80 சதவீத வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டிருப் பது அதிர்ச்சி அளிக்கிறது.
- கடந்த 2016-17 ம் ஆண்டில் 1,08,374 கோடி வாராக்கடன்களை வங்கிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 2017-18-ஆம் ஆண்டில் 1,61,328 கோடியாக அதிகரித்துள்ளது.
- 2018-19-ஆம் ஆண்டின் தொடக்க 6 மாத காலத்தில்வங்கிகள் 82,799 கோடி வாராக்கடன்களை ரத்து செய்துள்ளது.
- அதுவே 2018-ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அபாரமாக 64,000 கோடி வாராக்கடன்களை ரத்து செய்துள்ளது.
குரூப்-1 தேர்வு எழுதிய ரிசர்வ் வங்கி ஊழியருக்கு போலீஸ் அதிகாரி பதவி ஐகோர்ட்டு உத்தரவு
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வில் பங்கேற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக தேர்வு செய்யப்பட்டவர் மனோஜ்குமார். ஆனால் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்தபோது, ரிசர்வ் வங்கியில் தான் பணியாற்றியதை தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறி இவரது தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நிறுத்திவைத்தது.
- அரசு ஊழியர் இல்லை இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனோஜ்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது
- மனுதாரர் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் 8-வது இடம் வந்தவர். மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், அதில் சேராமல் என்ஜினீயரிங் படிப்பை முடித்து ரிசர்வ் வங்கி பணியில் சேர்ந்துள்ளார்.
- ரிசர்வ் வங்கி என்பது இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 12-ன் கீழ் செயல்படும் ஒரு தனி அமைப்பாகும். ரிசர்வ் வங்கியில் பணியாற்றுபவர்கள் அரசு ஊழியர்கள் வரையறைக்குள் வரமாட்டார்கள்.
- இதை விண்ணப்பத்தில் மனுதாரர் சரியாக குறிப்பிட்டுள்ளார். அவர் குரூப்-1 தேர்வில் பங்கேற்பதற்கு தடை எதுவும் இல்லை என்று உயர் அதிகாரியின் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளார். எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்கிறோம். மனுதாரருக்கு ஒரு வாரத்துக்குள் பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.