நிஜாமாபாத் தொகுதியில், 'கின்னஸ்' சாதனை
- தெலுங்கானா மாநிலத்தில், 185 வேட்பாளர்கள் போட்டியிட்ட, நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில், அதிகமான மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது, கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, 17 லோக்சபா தொகுதிகளுக்கு, நேற்று தேர்தல் நடந்தது.185 வேட்பாளர்கள்இதில், நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில், முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உட்பட, 185 பேர் போட்டியிட்டனர்.
- தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததை கண்டித்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் போட்டியிட்டதால், வேட்பாளர் எண்ணிக்கை அதிகரித்தது. நிஜாமாபாத் தொகுதியில், 12 மின்னணு இயந்திரங்களில், 185 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டன;
- இவை அனைத்தும், ஒரு பிரதான இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு, ஓட்டுப் பதிவு நடத்தப்பட்டது.
- ஒரே நேரத்தில், 12 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து, கின்னஸ் புத்தகத்தின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து, இயந்திரங்களை பார்வையிட்டு சென்றனர்.அதிக அளவிலான மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஓட்டுப்பதிவு சுமுகமாக நடந்தது.
துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
- நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.
- உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.
- அதன்படி துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
- இந்த நிலையில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
சர்வதேச விமானங்கள் திடீர் ரத்து: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பு
- கட்டண பாக்கியை செலுத்தாததால் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று நெதர்லாந்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் பயணிகள் ஏறும் முன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- எனவே பயணிகளை மும்பைக்கு அனுப்ப ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மாற்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அசவுகரியத்திற்காக பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது. கடன் சுமையில் தள்ளாடி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு, வங்கிகள் அவசர நிதியாக 1500 கோடி ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்த போதிலும், அதனை வழங்கவில்லை.
- அதனால் பல நிறுவனங்களுக்கு கட்டண பாக்கியை செலுத்த முடியவில்லை. விமானிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. இ
- தற்கிடையே கட்டண பாக்கிக்காக இந்தியன் ஆயில் நிறுவனமும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எரிபொருள் வினியோகத்தை நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில் இன்று இரவு வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்
- ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் 1988ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தால் மத்திய பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
- அதன்படி இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் துணை வேந்தரை மத்திய அரசு நியமிக்கும். அந்தவகையில் இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நஜ்மா அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.