Type Here to Get Search Results !

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு / PLASTIC BAN IN TAMIL NADU

நோக்கம்

  • பிளாஸ்டிக் இல்லா தமிழ் நாட்டினை உருவாக்குவது மற்றும் சிறந்த தரமான வாழ்க்கையை நமக்கு நாமே உறுதி செய்வதுமே நமது நோக்கமாகும்.

குறிக்கோள்
  • ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அதனை முழுமையாக தடை செய்வதுமே நமது குறிக்கோளாகும். 
  • இதற்காக அனைத்து பங்குதாரர்களும் அதாவது உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் மற்றும் பொதுநல சமூக அமைப்புகள் அனைவரும் அரசுடன் ஒருங்கிணைந்து ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க உண்மையாக செயல்படுவதுமே ஆகும்.



பிளாஸ்டிக் மறுசுழற்சி
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • ஆகவே அவைகளை முறையாக சேகரித்து, மறுசுழற்சி மூலம் விஞ்ஞான ரீதியில் மறுஉபயோகத்திற்கு பயன்படுத்தப்படவேண்டும்.
  • பொதுவாக இளகும் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மைக்கேற்ப, பாலிஎத்திலின், பாலிபுரோப்பிலின், பாலிஸ்டிரின்,.
  • மற்றும் பாலிவினைல் குளோரைடு போன்றவைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • இவற்றின் இளகும் தன்மைக்கேற்ப, மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, பல பயனுள்ள வீட்டுஉபயோக பொருட்கள் தயாரிக்கப்பயன்படுத்தப்படுகின்றன.
  • தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் சாலைகள் அமைப்பதற்கு பிளாஸ்டிக் குப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இறுகும் வகையான பிளாஸ்டிக் குப்பைகளின் எரிதிறன் தன்மையால் மின் உற்பத்தி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் இணை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
  • தற்பொழுது நடைமுறையிலுள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சியினை திறம்படுத்தி செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு சமன்படுத்தப்பட்டு மத்திய அரசின் "தூய்மை இந்தியா" என்ற குறிக்கோளை அடைய முடியும்.



பிளாஸ்டிக் குப்பைகளின் பயன்பாட்டை குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சீர்கேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அவைகளில் சில பின்வருமாறு.
  • பிளாஸ்டிக் குப்பைகளினால் ஏற்படும் மாசு குறித்து, சுற்றுச்சூழல் அரங்கத்திலிருந்து கிண்டி சிறுவர் பூங்கா வரை மாணவப்பேரணியை 05.06.2018 அன்று மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் துவங்கி வைத்தார்..

மற்ற மாவட்ட அலுவலகங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
திண்டுக்கல் மாவட்டம்
  • டட்லி பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் கைப்பைகளை உபயோகப்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.
  • நுகர்வோர் உற்பத்தி நிலையம், திண்டுக்கல் மற்றும் சுற்று சூழல் சங்கம், திண்டுக்கல் மூலமாக 1000 துணி கைப்பைகள் அச்சிடப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
  • பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கிடையே ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
  • பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த 200 சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டன.

விருதுநகர் மாவட்டம்
  • விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் 05.06.2018 அன்று பிளாஸ்டிக் கைப்பைகள் உபயோகப்படுத்த மாட்டோம் என விருதுநகர் பேருந்து நிலையத்தின் முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர்
  • 06.06.2018 அன்று அரசினர் மேல்நிலைப் பள்ளி, வீரர்பட்டி, விருதுநகர் மாவட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் கைப்பைகள் உபயோகப்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து நடத்தினர்.
  • அரசினர் மேல்நிலைப் பள்ளி, வீரர்பட்டி, விருதுநகர் மாவட்ட மாணவர்களால் வீரர்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.



கழிவு மேலாண்மை
  • 2016 ஆம் ஆண்டில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், திட கழிவு மேலாண்மை விதிகள், 2016 மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஆகியவற்றை அறிவிப்பு செய்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016
  • திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, விதி 15-ன் படி திடக்கழிவுகளை சேகரித்தல், வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லுதல், செயல்முறைக்குள்ளாக்குதல், மறுசுழற்சி செய்தல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் வெளியேற்றுதல் ஆகிய பொறுப்புகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்தது. 
  • திடக்கழிவுக்களை கையாளுவதற்கு கட்டணமும் மற்றும் உடனடி அபராதமும் விதிபதற்கான துணைச் சட்டங்கள் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளாளும் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • தமிழ்நாடு அரசு, திடக்கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு 25.01.2017 தேதியிட்ட அரசாணை எண். 5 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA.IV) துறை வாயிலாக மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016
  • பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 விதி 6 மற்றும் 7-ன் படி பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து எடுத்தல், சேகரித்தல், சேமித்தல், வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லுதல், செயல்முறைக்குள்ளாக்குதல் மற்றும் வெளியேற்றுதல் ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக உள்கட்ட அமைப்பை உருவாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. .
  • தமிழ்நாடு அரசு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட செயல்படுத்தும்பொருட்டு 23.10.2016 தேதியிட்ட அரசாணை எண். 148 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA.IV) துறை வாயிலாக மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel