Type Here to Get Search Results !

19th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இந்தியாவின் முதல் லோக்பால் அமைப்பின் தலைவர் நியமனம்
  • லோக்பால் தேர்வுக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் அவர்களும் மற்றும் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக நீதிபதிகள் திலிப் பி.போசலே, பிரதீப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தினேஷ் குமார் ஜெயின், ஐ.பி.எஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் இந்தர்ஜித் பிரசாத் கௌதம் ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு மக்களவை தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
  • நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவுக்கு சிறப்பு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • 'இந்திய தேர்தல் ஆணையம் முன்னாள் அரசு அதிகாரிகளான திரு சைலேந்திர ஹண்டா மற்றும் திருமதி மது மகாஜன் ஆகியோரை சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமித்துள்ளது.
  • சைலேந்திர ஹண்டே மகாராஷ்டிரா மாநிலத்திலும் மது மகாஜன் தமிழகத்திலும் தேர்தல் செலவினங்களை கவனிப்பார்கள்.
மரபுக்கு மாறாக சிறுவனுக்கு வீர தீர செயல் விருது
  • முப்படைகள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்களுக்கு, வீர தீர செயலுக்கான விருதுகளை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். 
  • தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை அடித்து விரட்டிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் வீர தீர விருது வழங்கப்பட்டது.
  • ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 'ஆர்மர்டு கார்ப்ஸ்' பிரிவின் வீரர் விஜய் குமார், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கான்ஸ்டபிள், பிரதீப் குமார் பாண்டா உயிரிழந்தனர். இந்த இருவருக்கும், கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. 
  • மணிப்பூரில் நடந்த நடவடிக்கையில் உயிரிழந்த, ராணுவத்தின் ரைபிள்பேன் ஜெயபிரகாஷ் ஓரான், ஜம்மு - காஷ்மீரில் உயிர் இழந்த ராணுவ வீரர் அஜய் குமாருக்கு, மூன்றாவது உயரிய விருதான, சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.



பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை: குறைந்தபட்ச மதிப்பெண் அறிவிப்பு
  • அகில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் விதிமுறைப்படி, வரும் கல்வி ஆண்டில் (2019-2020) பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் மாற்றியமைக்கப்படுகிறது. 
  • அதில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண் 35 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும், இதரப் பிரிவினர் அனைவருக்கும் 40 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆப்கனுக்கு முதல் வெற்றி: டெஸ்ட் அரங்கில் வரலாறு
  • ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டேராடூனில் நடந்தது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து 172, ஆப்கானிஸ்தான் 314 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அயர்லாந்து அணி 288 ரன்கள் எடுத்தது.
  • இரண்டாவது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இசானுல்லா (65), ஹஷ்மதுல்லா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
  • ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அரங்கில் அறிமுகமாகி 277 நாட்களே ஆன நிலையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதுவரை விளையாடிய 2 டெஸ்டில், ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் அறிமுகமான ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
"பாதுகாப்பு வீரர் படங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தகூடாது" - தேர்தல் ஆணையம்
  • பாதுகாப்புத்துறை பற்றி பிரச்சாரங்களில் பயன்படுத்தக்கூடாது என அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 
  • அதில் பாதுகாப்புத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையை சார்ந்தவர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக்கூடாது என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தங்களது கட்சி வேட்பாளர்களிடமும் அதனை அறிவுறுத்தும்படியும் தேர்தல் ஆணையம் அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel