- குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். இது கணவன், மனைவி அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாக சுட்டி நிற்கின்றது.
- துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம்.
தமிழ்ச் சூழலில் குடும்ப வன்முறை
- இந்தியாவில் 70 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர். ஆண் ஆதிக்க மரபுடைய தமிழ்க் குடும்ப கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர்.
- குடும்ப வன்முறையின் மூலம் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்களுக்கு சிலச்சில உரிமைகளை மட்டும் அளித்துவிட்டு குடும்பத்தில் பங்கெடுக்கும் மற்றும் சுயநிலையை உரிமை மறுக்கப்பட்டு உரிமை மீறல்களும் இழக்கப்படுகின்றன.
- குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை - 1) மாமியார் கொடுமைகள் 2) கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள் 3) கணவனால் மறுக்கப்படும் உரிமைகள் 4) அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை 5) சுதந்திர உரிமை 6) பெண் சிசுக் கொலைகள் 7) வரதட்சணை கொடுமை 8) பெண் கருக்கொலைகள் 9) மனைவியை அடித்துத் துண்புறுத்தல் 10) விதவைகள் கொடுமைகள் 11) குழந்தை மனித உரிமை மீறல் 12) கொலைகள் புரிதல் 13) எரித்தல் ... போன்றவை
- குடும்ப வண்றை நடைபெறும் விதங்கள் 1) பெற்றோர்களால் குழந்தைகள் கொல்லப்படுதல் 2) வீட்டு வேலையாட்களை உரிமையாளரே கொல்லுதல் 3) வீட்டு வேலையாட்கள் வீட்டின் உரிமையாளரை கொல்லுதல் 4) கொள்ளை போன்ற செயல்களில் வீட்டு வேலையாட்கள் ஈடுபடுதல் 5) மாமனார் / மாமியார் கொடுமையினால் திருமணமான பெண்கள் கொலை செய்யப்படுதல் 6) சொத்துக்காக சகோதரரோ / சகோரிகளோ கொல்லப்படுதல் 7) உடல் சார்ந்த வன்முறைகள் - சிறு காயங்கள் / பெருங்காயங்கள் ஏற்படுத்துதல் 8) பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் / சித்திரவதை செய்தல் 9) உளவியல் மூலம் / வார்த்தையின் மூலம் அவமதித்தல் 10) பொருளாதார ரீதியாக பயமுறத்துதல் 11) வீட்டுக் காவலில் வைத்தல்
குடும்ப வன்முறையைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள்
- பெண்களின் மீதான வன்முறையைத் தடுக்க மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- பெண்களுக்கெதிரான குற்றங்களை செயல்படுத்துவோருக்கு கடினமான தண்டனைகளை வழங்குதல்
- பெண்களுக்கான மனித உரிமை பிரிவுகளை ஏற்படுத்தல்
- வரதட்சணையை ஒழிக்க வரதட்சனை தடுப்புச்சட்டம் எற்படுத்தல்
- பெண்களுக்கெதிரான வன்முறை புகுந்தவீட்டில் நடந்தால் சட்டப்பிரிவு 498ஏ பிரிவின் கீழ் 3 ஆண்டிற்கு கடுங்காவல் தண்டனை / அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படும்.
- பெண்கள் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டமை
- குடும்ப வன்முறையினால் ஏற்படுத்தப்படும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375, 372, 379, 498ஏ, 376ஏ, 302பி, 306, 398ஏ, 307 மற்றும் 309 பரிவுகளின் கீழ் குற்றங்களையும் தண்டனையையும் விதிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.
- முறையற்ற மனித உரிமை அத்துமீறல் சட்டம் 9) தொழிலாளர் நலம் காணுவதற்கான சட்டம் - ஆகியன.
- பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women, சுருங்க VAW) என்பது பெண்களுக்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களை மொத்தமாகக் குறிப்பிடுகின்றது.
- சிலநேரங்களில் வெறுப்புக் குற்றமாகக் கருதப்படும். பாதிக்கப்படுபவரின் பாலினத்தை முதன்மைக் காரணமாகக் கொண்டு, இத்தகைய வன்முறை குறிப்பிட்ட குழுவினரைக் குறி வைக்கிறது. அதாவது இத்தகைய வன்முறைகள் பெண்களுக்கு எதிராக அவர்கள் பெண்கள் என்பதாலோ இனத்தலைவர்/சமூக பால் கட்டமைப்புகளாலோ நிகழ்த்தப்பெறுகின்றன.
- "காலங்காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கின் வெளிப்பாடே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்";
- "ஆண்களை விடத் தாழ்ந்தநிலைக்குப் பெண்களைத் தள்ளும் இக்கட்டானச் சமுதாயச் செயற்பாடுகளுள் ஒன்று பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்."
ஐக்கிய நாடுகள் பெண்களுக்கான வளர்ச்சி நிதியின் வலைத்தளத்தில் 2006க்கான அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான் அறிவித்துள்ளதாவது:
- பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பரவும் அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர்; இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார்.
- பெண்களுக்கு எதிரான வன்முறை பல விரிந்த வகைப்பாடுகளில் அடங்கும். ‘தனிநபர்களால்’ நிகழ்த்தப்படுபவையும் ‘அரசுகளால்’ நிகழ்த்தப்படுபவையும் இவற்றில் அடங்கும்.
- தனிநபர்களால் நிகழ்த்தப்படுபவற்றின் வகைகளில் வன்கலவி, குடும்ப வன்முறை, பாலின துன்புறுத்தல், கருத்தடுப்பு முறைகளின் கட்டாயப் பயன்பாடு, பெண் சிசுக் கொலை, பால் தெரிவு கருக்கலைப்பு, மகப்பேறு வன்முறை மற்றும் திரள் வன்முறை, மற்றும் மரபுவழி அல்லது சமூக செயல்முறைகளாக கெளரவக் கொலை, வரதட்சிணை மரணம், பெண் உறுப்பு சிதைப்பு, கடத்திக் கல்யாணம், கட்டாயக் கல்யாணம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
- அரசுகளால் நிகழ்த்தப்பெறும் அல்லது மன்னிக்கப்படும் வன்முறைகளாக போர்களின் போது போர் வன்புணர்வு, பாலியல் வன்முறை மற்றும் பெண்ணடிமைத் தனம், கட்டாயக் கருவளக்கேடு, கட்டாயக் கருக்கலைப்பு, காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினால் வன்முறை, கல்லால் அடித்தல் மற்றும் சவுக்கடிஆகியன உள்ளன. தவிரவும் பெண்களைக் கடத்துதல், கட்டாய விபசாரம் போன்ற பல வன்முறைகள் கட்டமைக்கப்பட்ட குற்றப் பிணையங்களால் நடத்தப்படுகின்றன.[6]
- பெண்களுக்கெதிரான வன்முறையை ஆய்ந்த உலக சுகாதார அமைப்பு (WHO), இவ் வன்முறை பெண்களின் வாழ்நாளின் ஐந்து நிலைகளில் நடைபெறுவதாக வகைப்படுத்தி உள்ளது: “1) பிறப்பிற்கு முன்னர், 2) மழலைப் பருவம், 3) சிறுமியர், 4) வளர்சிதை மாற்றம் மற்றும் வயது வந்தோர் 5) முதியோர்”
- அண்மை ஆண்டுகளில், பன்னாட்டளவில் நெறிமுறைகள், சாற்றுரைகள் போன்றவற்றின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் பாலினத் துன்புறுத்தலுக்கான வழிகாட்டுதலையும் மாந்தக் கடத்துகைக்கு எதிரான வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.
- பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.
- உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
- ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.