Tuesday, 19 March 2019

17th & 18th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

பிரமோத் சாவந்த் - கோவாவில் சபாநாயகராக இருந்தவர் முதல்வரானார்.
 • கோவாவில் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து பிரமோத் சாவந்த் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
 • கோவா சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. பாரிக்கர் மறைவையடுத்து ஆட்சியமைக்க முயற்சி செய்த நிலையில் பாஜக நேற்று மீண்டும் புதிதாக பொறுப்பேற்றுள்ளது.
 • பிரமோத் சாவந்துடன் மீதமுள்ள 11 பாஜக உறுப்பினர்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
அட்மா கூட்டமைப்பின் தலைவராக கே.எம்.மேமன் தேர்வு
 • மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் (அட்மா) தலைவராக எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கே.எம். மேமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் பொறுப்புக்கு ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸின் முழு நேர இயக்குநர் அனுஷ்மான் சிங்கானியா தேர்வு செய்யப்பட்டார்.7 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை
 • தென்னிந்தியாவின் பொருளாதார இயந்திரமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 6.97 லட்சம் சரக்குப் பெட்டகங்களை விட அதிகளவில் நிகழ் நிதியாண்டில் கடந்த 13 ஆம் தேதி வரை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையானது நிகழ் நிதியாண்டில் 18 நாள்களுக்கு முன்பாகவே நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எரிக்ஸனுக்கு அசலும் வட்டியுமாக ரூ. 571 கோடியை வழங்கிய அனில் அம்பானி: சிறை என உச்சநீதிமன்ற அறிவிப்புக்கு பணிந்தார்
 • கடந்த 2014-ல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்வீடனின் எரிக்ஸன் நிறுவனமும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்து கொண்டன.
 • இந்த விவகாரத்தில், எரிக்ஸனுக்கு ரூ. 550 கோடியை ரிலையன்ஸ் தர வேண்டியிருந்தது. இந்த தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தை எரிக்ஸன் நிறுவனம் நாடியது.
 • இந்த விவகாரத்தில் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் 4 வாரத்திற்குள் எரிக்ஸனுக்கு வழங்க வேண்டி தொகையை, வட்டியும் முதலுமாக அனில் அம்பானி வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் 3 மாதம் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது.
 • இந்நிலையில், எரிக்ஸனுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ. 550 கோடி மற்றும் வட்டித் தொகை ரூ. 21 கோடி சேர்த்து மொத்தம் ரூ. 571 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிள்ளது.
 • இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொடர்பு நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் தனது தொழிலை கடந்த 2017-ல் நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
கோயில் சொத்துக்களை டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற கிளை
 • கோயில் சொத்துக்களை டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் சொத்து விவரங்களை புத்தகமாக அச்சடித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும், கோயில் சொத்து விவரங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் அளித்து மற்றவர் ரிஜிஸ்டர் செய்வதை தடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 
பிரதமர் மோடி குறித்து ஆய்வு : இளைஞருக்கு டாக்டர் பட்டம்
 • சமூக சேவை, ஒரு துறையில் சிறந்த ஆராய்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக டாக்டர் பட்டங்கள் வழங்கப்படும். அந்த வகையில் மெஹூல் சோக்ஸி என்ற அரசியல் அறிவியல் பாடப்பிரிவு பட்டதாரி, ஒரு ஆய்வை தொடங்கினார். 
 • அவர் ஆய்வு செய்தது, தற்போது இந்தியப் பிரதமராக உள்ள நரேந்திர மோடியைதான். மோடி முதலமைச்சராக இருந்த காலம் தொடர்பாகவும், அவரது பொதுப்பணிகள் தொடர்பாகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்களவை தேர்தலில் தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது
 • தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 
 • இதையடுத்து அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் என கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் சீன போர் விமானங்கள்
 • மார்ச் 23-ம் தேதி தேசிய தினத்தை கொண்டாடுகிறது பாகிஸ்தான். இதில் பங்கேற்பதற்காக ஜே-10 ரக போர் விமானங்களை பாகிஸ்தானில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது சீனா.
 • தேசிய தினக் கொண்டாட்ட அணிவகுப்பில் சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் பங்கேற்பதாகவும், சிறப்பு விருந்தினராக மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது கலந்து கொள்வார் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆஷிப் காஃப்கார் தெரிவித்துள்ளார்.
விஐடி - இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • விஐடி மற்றும் இந்தியன் வங்கி இடையே மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.
 • விஐடியில் கல்வி பயிலும் சுமார் 36 ஆயிரம் மாணவர்களிடமிருந்து இந்தியன் வங்கி கல்விக் கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய கல்விக் கட்டணத்தை வங்கிக் கிளையில் நேரடியாக செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பது தவிர்க்கப்படும். 
 • மாணவர்கள் கல்விக் கட்டணத்தை வங்கிக் கிளையில் செலுத்துவதால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதைத் தவிர்க்கும் வகையில் குறைந்த சேவைக் கட்டணத்துடன் தங்களுடைய கல்விக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 • மாணவர்கள் தங்களுடைய கல்விக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் மொபைல் மற்றும் இன்டர்நெட் வங்கிச் சேவை மூலம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியன் வங்கி மேற்கொண்டுள்ளது.
இரண்டாவது மாதமாக சரிந்த ஜி.எஸ்.டி. வருவாய்: நிதி அமைச்சகம்
 • ஜி.எஸ்.டி. வரிவருவாய், இரண்டாவது மாதமாக சரிந்து, ரூ.85,174 கோடிகள் மட்டுமே வசூலாகியுள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
 • இதுதொடரபாக நிதியமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது; பிப்ரவரி மாத கணக்கின்படி, இதுவரை 69% வரிசெலுத்துனர்கள் மட்டுமே தங்களின் வரியை செலுத்தியுள்ளார்கள்.
 • ஜி.எஸ்.டி. வகையின்கீழ், கடந்த 2018 பிப்ரவரி மாதத்திற்கான (மார்ச் 26 வரை செலுத்தப்பட்டது) வருவாயாக, ரூ.85,174 கோடி பெறப்பட்டது.
 • அதேசமயம், ஜனவரி மாத வருவாயாக, ரூ.86,318 கோடியும், டிசம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் முறையே ரூ.88,929 கோடியும், ரூ.83,716 கோடியும் வசூலாகியுள்ளன.
 • மொத்தம் ரூ.25,564 கோடிகள், ஐ.ஜி.எஸ்.டி கணக்கிலிருந்து, சிஜிஎஸ்டி/எஸ்.ஜி.எஸ்.டி.கணக்குகளுக்கு திருப்பி விடப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாகப் பெங்களூரு அணி சாம்பியன்
 • இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாகப் பெங்களூரு அணி சாம்பியனாகியுள்ளது. ஐ.எஸ்.எல் தொடரின் ஐந்தாவது சீசன், நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூரு - கோவா அணிகள் மோதின. எக்ஸ்ட்ரா டைம் வரை சென்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
 • இந்த சீசனில், அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில், கோவா அணி வீரர் ஃபெரான் கொரோமினாஸ் (16) முதல் இடம் பிடித்து 'கோல்டன் பூட்' விருதைப் பெற்றார். பெங்களூரு அணி கோல்கீப்பர் குரு ப்ரீத் சந்துவுக்கு 'கோல்டன் க்ளவ்' விருது வழங்கப்பட்டது.
இளைஞர் ஆசிய போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாதேஸ் 
 • ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேனியைச் சேர்ந்த மாதேஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
 • ஹாங்காங்கில் 3-வது இளைஞர் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
 • இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீரர் சுமீத் காரப் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்: இர்பான் தகுதி
 • ஆசிய நடை போட்டியில் அசத்திய இந்திய வீரர் இர்பான், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஜப்பானின் நோமி பகுதியில் ஆசிய நடை போட்டி சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் 20 கி.மீ., பிரிவில் இந்திய வீரர் இர்பான் பங்கேற்றார். இலக்கை ஒரு மணி நேரம் 20:57 நிமிடத்தில் கடந்த இவர் நான்காவது இடம் பிடித்தார். 
 • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நிர்ணயித்த நேரத்தை விட (ஒரு மணி நேரம், 21 நிமிடம்) முன்னதாகவே வந்து அசத்தினார். இதன் மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய தடகள நட்சத்திரம் என்ற பெருமை பெற்றார். 2வது முறை இதனையடுத்து, இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். 
 • ஏற்கனவே, 2012ல் லண்டனில் நடந்த போட்டியில் (10வது இடம்) கலந்து கொண்டிருந்தார்.தவிர, தோகாவில் வரும் செப்டம்பர் 27ல் துவங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கும் தகுதி பெற்றார். 
 • சக வீரர்களான தேவிந்தர், கணபதியும் உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றனர்.முதலிரண்டு இடங்களில் முறையே ஜப்பானின் டோசிகாசு, கஜகஸ்தானின் செய்கோ பிடித்தனர். தென் கொரியாவின் பியாங்வாங் மூன்றாவது இடம் அடைந்தார். பெண்கள் பிரிவில் இந்தியாவின் சவுமியா பேபி பந்தய துாரத்தை ஒரு மணி நேரம் 36:08 நிமிடத்தில் கடந்து நான்காவது இடம் பிடித்தார்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment