Type Here to Get Search Results !

15th & 16th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF


ஸ்டெர்லைட் ஆலை புதிய சி.இ.ஓ., நியமனம்
  • ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, பங்கஜ் குமார் நேற்று நியமிக்கப்பட்டு, உடனடியாக பொறுப்பேற்றார்.
  • 'டாடா ஸ்டீல், மிட்டல் ஸ்டீல், அதானி போர்ட்ஸ்' ஆகியவற்றில், உயர் அதிகாரியாக, இவர் பணியாற்றி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில், தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.தலைமை செயல் அதிகாரியாக இருந்த, ராம்நாத் பணி ஓய்வு பெற்றதையடுத்து, 
  • புதிய தலைமை செயல் அதிகாரியாக, பங்கஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முதுநிலை ஆலோசகராக, ராம்நாத் தன் பணியை தொடர்வார்.
13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ல் இங்கிலாந்தில் தொடக்கம்
  • 13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் படை வீரர்கள் பங்கேற்கும் மாபெரும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.
  • இதற்காக, 13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் ராணுவ வீரர்கள், 35 போர் கப்பல்கள், 5 நீர்முழ்கிக் கப்பல்கள், 59 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த கூட்டுப் போர் பயிற்சியில் பங்கேற்கிறார்கள்.
  • பெல்ஜியம், கனடா,டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லத்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த போர் பயிற்சியில் பங்கேற்கின்றன. இந்த கூட்டு போர் பயிற்சி ஏப்ரல் 11-ம் தேதி நிறைவடையும்' என்றார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
  • புகார் கொடுத்த பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டு பெண்ணின் ரகசியத்தை அரசு காக்கவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 



விளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதா?. உடனே மூட ஐகோர்ட் உத்தரவு
  • ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கடைகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரியும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
  • இதனைத் தொடர்ந்து, விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என கூறிய நீதிபதிகள், 110 டாஸ்மாக் கடைகளை மூடியதற்கான அறிக்கையை 18ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டி: ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
  • அபுதாபியில் நடைபெற்ற கோடைக்கால சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 1000 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவின் ரிஷப் ஜெயின் தங்கப்பதக்கம் வென்றார்.
தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு
  • ஓட்டுப்பதிவு நடக்கும் 48 மணி நேரத்திற்கு முன்பாக எந்த கட்சியும், தேர்தல் அறிக்கையை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபாவிறகு ஏப்.,11 துவங்கி மே 19 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. 
  • தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஓட்டுப்பதிவு நடக்கும் 48 நேரத்திற்கு முன் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிடக்கூடாது. 
  • கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள், மூத்த நிர்வாகிகள், மீடியாக்களை சந்திக்கக்கூடாது. தேர்தல் குறித்து பேட்டி கொடுக்கக்கூடாது. இந்த காலகட்டத்தில், எந்த நிர்வாகியும், தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஓட்டு கேட்கக்கூடாது.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
10 மெகாவாட் சூரியமின் உற்பத்தி ஆலை: லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் தொடக்கம்
  • லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் சூரியமின் உற்பத்தியில் களமிறங்குகிறது. இதற்காக, கோவை மாவட்டம் கொண்டாம்பட்டியில் 10 மெகாவாட் திறனிலான சூரியமின் உற்பத்தி ஆலையை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. 
  • இங்கு, போட்டோவோல்டிக் என்ற ஒளிமின்னழுத்த முறையை பயன்படுத்தி சூரியமின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சீமென்ஸ் கமிஸா, பொறியியல், கட்டுமானம் உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளது. 
  • நிறுவனத்துக்கு சொந்தமாக காற்றாலைகள் மூலம் 36.80 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனில் ஆலை நிறுவப்பட்டுள்ளது. 



ரயில்வே பாதுகாப்பு படை புதிய கமிஷனராக சந்தோஷ் சந்திரன் நியமனம்
  • தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு படை புதிய கமிஷனராக சந்தோஷ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஏ.கே.அக்னிகோத்ரி நேற்று அறிவித்தார்.
கீழடி அகழாய்வு ஆராய்ச்சி அதிகாரி அமர்நாத்தை 15 நாளில் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும்
  • கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை அசாம் மாநிலத்துக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
  • அப்போது அகழாய்வு பணி முடிந்து, அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும்.எனவே, அசாமுக்கு மாற்றப்பட்ட அமர்நாத்தை, 15 நாட்களில் தமிழகத்துக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மதுரை சின்னப்பிள்ளை, நம்பி நாராயணன், கம்பீர் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் ஜனாதிபதி வழங்கினார்
  • சமூக சேவகி, மதுரை சின்னப்பிள்ளை உட்பட பல்வேறு நபர்களுக்கு, இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்.
  • நாட்டின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகளுக்காக, இந்த ஆண்டு மொத்தம் 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த குடியரசு தினத்திற்கு முந்தைய நாளில், இந்த விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது.
  • இதில், இம்மாதம் 11ம் தேதி, முதல் கட்டமாக குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அன்று ஒரு பத்ம விபூஷண், 8 பத்ம பூஷன் மற்றும் 46 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
  • பாக்கியிருந்த, பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று வழங்கப்பட்டன. மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி, சின்னப்பிள்ளை பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றார். கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel