Type Here to Get Search Results !

10th,11th,12th, 13th & 14th MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

பாரம்பரிய புகழ்பெற்ற திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு
  • தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரிய புகழ்பெற்ற திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
  • சிற்பக்கலையைப் போலவே, தமிழர்கள் கைத்தறி நெசவுத் தொழிலிளும் சிறந்து விளங்குவதற்கு சான்றாக இருப்பது திருபுவனம் பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, பட்டு சேலைகள் தான். அதிலும் திருபுவனம் பட்டு சேலைகள் சுமார் 1000 ஆண்டுகளாக பழமை மாறாமல் அதே நேர்த்தியுடனும் கலை நயத்துடனும் தரத்துடனும் நெய்யப்பட்டு வருவதால் தான் இன்றும் அதற்கு மதிப்பு உள்ளது.
  • மத்திய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரால் நிறுவப்பட்ட அகில இந்திய கைப்பணிக் கழகம் வெளியிட்ட இந்திய அச்சுப் புடவைகள் என்ற நூலில் 'ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு தமிழகத்தில் மிகத்தொன்மையான காலத்திலே அரும்பி மிகச் சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது' என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சோழர்களின் கடைசிப் பேரரசரான மூன்றாம் குழோத்துங்க சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சச்சரவர்த்தி என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டான். இதற்காக தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே 5 மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான். அதுதான் திருபுவனம் ஆகும்.
ஏற்றுமதியில் தமிழகம் 3வது இடம்
  • தமிழகம், 20 சதவீதத்துடன், மூன்றாவது ஏற்றுமதி மாநிலமாகவும், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், 10 சதவீத பங்களிப்பும் அளிக்கிறது. டெக்ஸ்டைல், வாகனம் மற்றும் உதிரி பாகங்கள், எலக்ட்ரிகல், தோல் பொருட்கள் ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளது.
DGP நியமனத்திற்கான காலவரம்பை மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு
  • உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழகம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்கள் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன.
  • இந்நிலையில், சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, DGP நியமனத்தில், பணிநிலைவு காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
  • இதன்படி, பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் இருப்பவர்களை DGP-யாக நியமிக்கலாம் எனவம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே DGP-க்களை நியமிக்க முடியும் எனவும், மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இல்லை எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிறந்த சேவை : பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் விருது
  • சிறந்த தொலைத்தொடர்பு சேவைக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.
  • திறன் அபிவிருந்தி திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி அளித்துள்ளதாக பி.எஸ்.என்.எல் தமிழக வட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்களவைத் தேர்தலில் பிளக்ஸ் பேனர், கட்-அவுட் வைக்கத் தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு
  • மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைக்கத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
  • வரும் மக்களவை தேர்தலில் பணம் பெறுவதும், பணம் கொடுப்பதும் குற்றம் என அதிகளவில் விளம்பரப்படுத்த வேண்டும். அதிகளவில் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ சாலைகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது. 
  • தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, அதற்கு காரணமான கட்சியிடம் இருந்து தேர்தலுக்காகச் செலவு செய்யப்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ராணுவ தளபதிக்கு உயரிய விருது
  • டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவ தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட, 19 ராணுவ அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
  • ராணுவ தளபதி பிபின் ராவத்தின் சிறந்த சேவையை பாராட்டி, அவருக்கு, பரம் விசிஷ்ட் சேவா என்ற விருது வழங்கப்பட்டது.கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தாக்குதல் நடத்திய, 12 பயங்கரவாதிகளில், மூன்று பேரை சுட்டுக் கொன்ற, ராணுவ மேஜர் துஷார் கவுபாவுக்கு, 'கீர்த்தி சக்ரா' விருது வழங்கப்பட்டது.ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 12 அதிகாரிகளுக்கு, 'சவுர்ய சக்ரா' விருது வழங்கப்பட்டது.
  • ராணுவ வீரர் விராஹ்மா பால் சிங், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் ராஜேந்திர நைன் மற்றும் ரவீந்திர பபன் தன்வாதே ஆகியோருக்கு, இறப்புக்கு பிந்தைய விருதாக, அவர்களின் குடும்பத்தினரிடம் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
சென்னையில் தேசிய அளவிலான மகாபாரதம் மாநாடு
  • சென்னை, சி.பி. ராமசாமி ஐயர் ஆய்வு நிறுவனத்தின், இந்தியவியல் துறை சார்பாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மகாபாரதம் தொடர்பான மூன்று நாள் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. 
  • இந்த மாநாட்டின் கருப்பொருளான 'இந்தியக் கலை மற்றும் கலாசாரத்தில் மகாபாரதம் ' என்னும் தலைப்பில், இந்தியா முழுவதும் இருந்து மகாபாரத ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கின்றனர்.
ராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ. தகவல்
  • கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் ராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ராஜஸ்தான் பாலைவனத்தில் நடத்திய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது என டி.ஆர். டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது. 
  • மேலும் ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட ஏவுகணை சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் என்றும் கூறப்படுகிறது.



பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியீடு
  • பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். 
  • இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இந்த வழக்கை கோவை போலீஸார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 
  • இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்குத் தடை 
  • போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விமானப் பயணக் கட்டணம் 20 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
  • எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமான த்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.
  • இரு விமானங்களுமே போயிங் ரகத் தை சேர்ந்தவை என்பதாலும் இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. இந்நிலையில், போயிங் 777 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை விதித்துள்ளது.
  • இதையடுத்து 'போயிங் 737 மேக்ஸ்-8' ரக விமானங்கள் அனைத்தையும் எத்தியோப்பியா நிறுத்தியது. அதே போல சீனா, இந்தோனேஷியா, சிங் கப்பூர், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி உட்பட பல நாடுகள், போயிங் ரக விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில் இந்தியாவும் இந்த ரக விமானங்களை இயக்க நேற்று முன் தினம் தடை விதித்தது.
இந்தியாவில் மேலும் 6 அணுஉலைகள்
  • இந்தியாவில் மேலும் 6 அணுஉலைகளை அமெரிக்கா ஏற்படுத்தித் தருவதற்கு, இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே , அந்நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி ஆண்ட்ரியா தாம்சன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமெரிக்கா 6 அணு உலைகளை இந்தியாவில் ஏற்படுத்தித் தருவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
Tamil Nadu 1st State to introduce TAVI in government hospitals
  • Tamil Nadu becomes first state in the country to introduce Transcatheter Aortic Valve Implantation (TAVI) in the government hospitals. 
  • TAVI is performed on old-age heart patients who cannot undergo an open-heart surgery and involves replacement of valve through a keyhole procedure. 
  • It was launched at the Tamil Nadu Government Multi Super Speciality Hospital (TNGMSSH), Omandurar Estate in November 2018 and two people underwent the surgery free of cost. 
பிரெக்ஸிட் தீர்மானம் 2-வது முறையாக தோல்வி
  • ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்ய, கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் தெரசா மே, கடந்த 2018 நவம்பரில், பார்லிமென்ட்டில், வரைவு ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார். 
  • கடந்த ஜனவரியில் பார்லிமென்ட் கீழ் சபையில், 'பிரெக்சிட்' வரைவு ஒப்பந்தத்தின் மீது, ஓட்டெடுப்பு நடந்தது. ஒப்பந்தத்துக்கு எதிராக, 432 பேரும், ஆதரவாக, 202 பேரும் ஓட்டளித்தனர். இதையடுத்து, 'பிரெக்சிட்' ஒப்பந்தம் தோல்வியடைந்தது. 
  • இதையடுத்து நேற்று பாராளுமன்றத்தில் 'பிரெக்ஸிட்' விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.



இந்தியாவில் நடப்பு ஆண்டில் தொழில் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு: மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல்
  • இந்தியாவில் தொழில் வளர்ச்சி கடந்த ஆண்டை விட பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வரும் ஏப்ரல் 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதன்படி, பொருளதார நடவடிக்கையை அதிகரிக்கும் வகையில் வட்டி விகித குறைப்பு இருக்கும்.
  • உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2018-ம் ஆண்டு ஜனவரியில் 8.7% இருந்தது. தற்போது ஜனவரி 2019-ல் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.
  • அதேபோல், எரிசக்தி துறையிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.8% குறைந்துள்ளது. எனினும் கனிமவளத் துறையில் கடந்த ஆண்டில் 0.3% வளர்ச்சி மட்டுமே இருந்தது. இந்த ஆண்டில் 3.9% அதிகரித்துள்ளது.
"மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை" எஸ்.பி.ஐ. வங்கி அறிமுகம்
  • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்கும் நடைமுறையை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
  • அதன்படி 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மருத்துவத் துறையால் அங்கீகரிக்கப்பட்டு சான்று பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்க வேண்டும் என 2017ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
பிஏசிஆர் தனியார் ஐடிஐ-க்கு அகில இந்திய அளவில் 3-ஆவது இடம்
  • இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனியார் ஐடிஐ-க்களை தேர்ந்தெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டது. 
  • அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 33 தனியார் ஐடிஐ-க்களில் 73.7 சதவீத மதிப்பெண்களைப் பெற்று ராம்கோவின் பிஏசி ராமசாமி ராஜா ஐடிஐ 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடந்த 2010-ஆம் ஆண்டு மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் பிஏசிஆர் ஐடிஐ-யை ராம்கோ சிமென்ட்ஸ் தொடங்கியது.
இந்தியாவில் 1400 கோடி முதலீடு செய்யும் ஓயோ
  • 2019-ம் ஆண்டில் ஓயோ ஸ்டார்ட் அப் நிறுவனம் தன் விருந்தோம்பல் துறையில் மேலும் கொஞ்சம் முதலீடு செய்யப் போகிறதாம்.
  • தெற்காசியா நாடுகளில் மட்டும் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்யப் போகிறார்களாம். இந்த பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்வது, டெக்னாலஜியில் முதலீடு செய்வது மற்றும் நல்ல வேலை ஆட்களை பணிக்கு எடுப்பது போன்ற செலவுகளை மேற்கொள்ள இருக்கிறார்களாம்.
  • குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்யப் போகிறார்களாம். இந்தியாவில் தற்போது 259 நகரங்களில் ஓயோ இருக்கிறது. இந்த 259 நகரங்களில் 8,700 கட்டடங்களில் 1,73,000 அறைகள் ஓயோவில் பார்த்து தேர்வு செய்ய முடியுமாம்.
ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலக அளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்: ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்
  • போர் ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
  • கடந்த 2014-2018 வரை ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் சவுதி அரேபியா முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
  • உலக அளவில் நாடுகள் இறக்குமதி செய்யும் ஆயுதங்களில், 9.5% இந்தியா மட்டும் இறக்குமதி செய்கிறது.
  • ஆயுதங்கள் இறக்குமதியாவதில் தாமதம் எற்பட்டதால், கடந்த 2009-13 மற்றும் 2014-18 ஆகிய ஆண்டுகளில் ஆயுத இறக்குமதி 24% குறைந்துள்ளது.
  • கடந்த 2001-ல் ரஷ்யாவில் ஆர்டர் செய்யப்பட்ட போர் விமானம் மற்றும் 2008-ல் பிரான்ஸில் ஆர்டர் செய்யப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்கள் தாமதம் ஆவது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவுக்குத் தான் ரஷ்யா அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் பிரான்ஸும் இந்தியாவுக்கான ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.
  • வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 11-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel