- தமிழ்நாட்டில் அரியலூர், நீலகிரி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் 2017-2018ம் ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2018-2019ஆம் ஆண்டுகளில் மீதமுள்ள மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- அடுத்த மூன்று ஆண்டுகளில் 0-6 வயது குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக கீழ்க்கண்டவாறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நோக்கங்கள் மற்றும் இலக்கு
- 0-6 வயது குழந்தைகளிடையே வயதிற்கேற்ற உயர குறைவினை குறைத்தல் மற்றும் தடுத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவிகிதம் குறைத்தல்
- 0-6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு (எடை குறைவு) குறைத்தல் மற்றும் தடுத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவீதம் குறைத்தல்
- 6-59 மாதங்கள் உள்ள இளங் குழந்தைகளிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவீதம் குறைத்தல்
- 15-49 வயதில் உள்ள வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவீதம் குறைத்தல்
- குறைந்த பிறப்பு எடை குறைத்தல் – ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவீதம் குறைத்தல்