Type Here to Get Search Results !

23rd MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இந்தியக் கடற்படையின் அடுத்த தளபதியாக கரம்பிர் சிங் நியமனம்
  • துணை அட்மிரல் கரம்பிர் சிங் இந்தியக் கடற்படையின் அடுத்த தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியக் கடற்படையின் தளபதியாக சுனில் லன்பா பதவி வகித்து வருகிறார். அவரது பதவி காலம் வருகிற மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அட்மிரல் சுலின் லன்பாவுக்குப் பிறகு, கரம்பிர் சிங் நியமனம் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • துணை அட்மிரல் கரம்பிர் சிங், தற்போது கடற்படையின் துணைத் தளபதியாக செயல்பட்டு வருகிறார். இவர் இந்தியாவின் மிக பெரிய மற்றும் முதல் கப்பற்படை தளம் எனப் பெயர் பெற்ற விசாகப்பட்டினத்திலுள்ள கிழக்கு கடற்படையின் தலைவராக இருந்து வருகிறார்.
  • இந்தியக் கடலோர காவல்படைக்கு சொந்தமான சாந்த்பிபி, ஏவுகணை தாங்கி கப்பலான விஜய்துர்க் ஆகியவற்றின் தளபதியாகவும் இருந்துள்ளார். அதிசிறந்த சேவைக்கான பதக்கத்தை குடியரசுத்தலைவரிடம் இருந்து இவர் பெற்றுள்ளார்.
5ஜி தொலைபேசி சேவையை 2020-ம் ஆண்டில் தொடங்க நடவடிக்கை: பரீட்சார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர் தகவல்
  • 5 ஜி தொழில்நுட்ப சேவையை 2020-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் தொடங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக ஸ்பெக்ட்ரம் பரீசார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர் தெரிவித்துள்ளார்.
  • கடந்த பிப்ரவரி 25-ம் தேதி எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்துக்கான உரிமம், அளவு, கட்டணம் மற்றும் பரீட்சார்த்த சேவை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவோம்.
உலகின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்
  • மஹிந்திரா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் பினின் பரீனா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் உலகின் சக்திவாய்ந்த ஹைப்பர் காரை வெளியிட்டு இருக்கிறது. இத்தாலியை சேர்ந்த பினின் பரீனா நிறுவனம் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 
  • மஹிந்திரா - பினின் பரீனா கூட்டணி. ஆம். உலகின் அதிசக்திவாய்ந்த முதல் மின்சார ஹைப்பர் கார் மாடலை பினின் பரீனா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ''பேட்டிஸ்டா'' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மின்சார கார், ஜெனிவா மோட்டார் ஷோ மூலமாக பொதுப்பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. 
  • இந்த காரில் T வடிவிலான 120 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது மின்சார கார் என்பதால், சைலென்சர் சப்தத்திற்கு வேலை இல்லை. புகாட்டி சிரோன் ஹைப்பர் காரைவிட இது மிக சக்திவாய்ந்த மாடல். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2 வினாடிகளிலும், 0-300 கிமீ வேகத்தை 12 வினாடிகளிலும் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. இந்த கார், அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தை எட்டும் திறன் வாய்ந்தது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 450 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel