Type Here to Get Search Results !

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

நோக்கம்
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் என்பது இலக்கு மக்களுக்கு உதவி செய்யும் ஒரு சுயசார்பு மக்கள் அமைப்பாகும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பெரும்பான்மையோர் இலக்கு மக்களாக இருக்க வேண்டும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதில் கிராம சபைக்கும், ஊர்க்கூட்டத்திற்கும் பொறுப்புடையதாக இருக்கும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் திட்டத்திற்கும், கிராம மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கும்
ஏழைகளுக்காக ஏழைகளைக் கொண்டு அமைக்கப்படும் ஒரு சமூக அமைப்பு
  • பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு அமைப்புகள் இதுவரை உருவானாலும், வறுமையை மையமாக வைத்து, ஏழை மக்களின் அமைப்புகள் கிராம அளவில் சரிவர செயல்படுவதில்லை. 
  • வறுமையை ஒழிப்பதற்காக, மக்களால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுவதற்கான, ஏழை, எளியோருக்கான அமைப்புதான் இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம்.
ஏழைகளின் பிரச்சனைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அமைப்பு
  • பெரும்பாலான கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் ஏழைகளாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை நல்ல முறையில் புரிந்து கொள்ள முடிகிறது.
  • மேலும், மக்களின் வாழ்வு உயர, அவர்களே திட்டம் தீட்டி முடிவெடுப்பதால், அது ஏழை மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகவும் அமைகிறது.
சுய உதவி மற்றும் சுயசார்புத் தன்மை
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், தங்களுடைய சொந்த நிறுவனம் என்பதால் அச்சங்கம் தற்சார்பு உடையதாக இயங்கும். ஊரிலுள்ள அனைத்து நபர்களையும் கலந்தாலோசித்து, நமக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும் நமக்குள்ளேயே பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
தலைமைப்பண்பை ஏழைகளிடையே உருவாக்குதல்
  • மிகவும் ஏழைகள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்கள், பயனாளிகளாக மட்டுமே இருந்து வருகின்றனர். தலைமை மற்றும் ஆளுமைப் பண்புகளை வளர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏழைகளுக்கு போதிய வாய்ப்புகளை அளிப்பதில்லை. 
  • மாறாக நம் திட்டத்தில், இலக்கு மக்களே முக்கிய பொறுப்புகளை வகிப்பதனால் அவர்களது பல்வேறு திறமைகள் வளர்க்கப்பட்டு, மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஏன்?
  • வறுமையை ஒழித்து, வளமையான கிராமத்தை உருவாக்க வேண்டும் என்கிற இலட்சியப் பார்வையுடன், பெரும்பாலான கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் செயல்படுவதினால், இந்த அமைப்புக்கள் போதிய திறமைகள் மற்றும் வளங்களைப் பெற்று நிலைத்து செயல்படும். 
  • மேலும் இது, மக்கள் பங்கேற்புடன் செயல்படும் ஒரு மக்கள் அமைப்பு என்பதால், திட்டக்காலத்திற்கு பின்பும் தன் இலட்சியத்திற்காக தொடர்ந்து செயல்படும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பொறுப்புகள்
  • புதுவாழ்வு திட்டத்தில் மிகவும் ஏழை, ஏழை, மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், மற்றும் நலிவுற்றோர் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இதுவரையில் சுய உதவிக் குழுக்களில் இல்லாத இலக்கு மக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குழுவாக இணைத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து முன்னேற்ற வேண்டும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், புதுவாழ்வு நிதிக்காக தனி வங்கி கணக்கை ஆரம்பித்து செயல்படுத்த வேண்டும்.
  • கிராம முன்னேற்றத்திற்கான திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும்.
  • இத்திட்டத்தின் மூலம் இலக்கு மக்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டிய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் .
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூகத்தணிக்கைக்குழு, சுயஉதவிக்குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் தன் ஆதரவினை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
  • சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடத்தில் நிதி ஆதாரம் திரட்டுவதற்கு துணை புரிய வேண்டும்.
  • திட்ட ஒருங்கிணைப்பு அணியுடன் இணைந்து, சார்புத்தொழில் வல்லுநர்களைக் கண்டறிந்து உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தங்களுடைய செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது உரிய அறிக்கைகளை அளிக்க வேண்டும்.
  • கிராம சபைக்கு தனது செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை
  • நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் குறைந்தது 10 முதல் அதிகபட்சமாக 20 நபர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கலாம்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது, இலக்கு மக்களிலிருந்து 80ரூ உறுப்பினர்கள் தேர்வு செய்வதை உறுதி செய்ய வேண்டும். பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்.
  • குறைந்த பட்சம் 30ரூ விழுக்காடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • குறைந்தது 50ரூ விழுக்காடு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.
  • ஊராட்சியில் குடியிருப்புகள் பெரிதாக அல்லது அதிகமாக இருந்தால், கிராமசபை ஊராட்சிக்கு ஏற்றாற்போல சுழற்சி முறையை பயன்படுத்த வேண்டும். எப்படி இருந்தாலும், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் 20 பேருக்கு மேற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel