Type Here to Get Search Results !

21st MARCH CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

அசோக் லேலண்ட் அலுவலகத்துக்கு பசுமை விருது
  • அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சென்னை அலுவலக கட்டடத்துக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்க கிரீன் பில்டிங் கவுன்சில் வழங்கும் லீட் தங்க சான்றிதழ் வழங்கப்பட்டது. 
  • சுற்றுப்புறச் சூழலுக்கேற்ற கட்டட வடிவமமைப்புக்காக இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மேலும் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டதையடுத்து, நிறுவனம் தற்போது லீட் வி4.1 பிளாட்டினம் சான்றிதழை தட்டிச் சென்றுள்ளது. 
  • இந்தியாவில் கார்ப்பரேட் அலுவலகமொன்று பிளாட்டினம் சான்றிதழைப் பெறுவது இதுவே முதல் முறை. மேலும், உலளவில் இது நான்காவது சான்றிதழ் ஆகும் என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
உலக சாம்பியன் பட்டம் வென்ற பெல்ஜியம் புறா ரூ. 10 கோடிக்கு விற்பனை
  • புறா பந்தயம் நடத்தும் பெல்ஜியம் நாட்டு இணையம் ஏலம் நடத்தி வருகிறது. அர்மான்டோ என்ற புறாவை வாங்குவதில் சீனாவைச் சேர்ந்த 2 தொழிலதிபர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது.
  • கடந்த மார்ச் 17-ம் தேதி நடந்த ஏலத்தில் ரூ.10 கோடிக்கு அர்மான்டோ என்ற புறா ஏலம் போனது.
  • மொத்தம் 178 புறாக்களும், அதன் குஞ்சுகளும் ரூ.17 கோடிக்கு ஏலம் போயின.



ரெப்கோ வங்கியின் வர்த்தகம் ரூ.15,000 கோடியைத் தாண்டி சாதனை
  • ரெப்கோ வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.15,000 கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இதில், வங்கி திரட்டிய டெபாசிட் ரூ.8,669 கோடியாகவும், வழங்கிய கடன் ரூ.6,337 கோடியாகவும் உள்ளது.
  • ரெப்கோ வங்கியைப் பொருத்தவரையில் தொடர்ந்து லாபம் ஈட்டியே வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ரூ.100 கோடிக்கும் மேலாக நிகர லாபத்தை பெற்று வருகிறது. இந்த நிதியாண்டில் ரூ.110 கோடிக்கு மேலான நிகர லாபம், பங்குதாரர்களுக்கு 20 சதவீத ஈவுத் தொகை என்பதை நோக்கி முன்னேறி வருகிறது. 
  • தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை மூலம், கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, போன்ற நலத்திட்ட உதவிகளை தாயகம் திரும்பியோருக்கு அளித்து வருகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் இதற்காக ரூ.7.20 கோடி செலவழிக்கப்பட்டு சுமார் 37,500 பேர் பயனடைந்துள்ளனர். இது ரெப்கோ வங்கியின் வரலாற்றில் முதல் முறை என்றார் அவர்.
  • இலங்கை, பர்மா, வியத்நாம் மற்றும் பிற நாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக 1969-ஆம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்டது ரெப்கோ வங்கி. இந்த வங்கி, 108 கிளைகள், 10 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்கள் மற்றும் 1,300 பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
180 அரிய வகை தாவரங்கள் குறித்த நூல் வெளியீடு
  • உலக வன நாளையொட்டி, சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் வி.கணேசன் எழுதிய மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அரிய வகை தாவரங்கள்நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தாவரங்கள் குறித்து கடந்த 1921-ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரியான பிட்சர் என்பவர் புத்தகம் வெளியிட்டார். அதன்பிறகு, மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் கொண்டை பனை, குறிஞ்சி, பால்சம், கொடம்புளி உள்ளிட்ட 180 அரிய வகை தாவரங்களின் குணங்கள், மருத்துவப் பயன்கள் ஆகியவை குறித்து மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அரிய வகை தாவரங்கள் என்ற இந்தப் புத்தகத்தில் படத்துடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்றார். 
புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் ராஜினாமா
  • புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், மார்ச் 21 இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார்.புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்., - தி.மு.க. கூட்டணி சார்பில், காங்., வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • இதற்கான அறிவிப்பு, இன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வசதியாக, தனது சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் நேற்று ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவக்கொழுந்திடம் வழங்கினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel