Type Here to Get Search Results !

2nd FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




சிபிஐ புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்
  • சிபிஐ இயக்குநராக இருந்த அலேக்வர்மா நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய இயக்குநராக ரிஷிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சிபிஐ இடைக்கால பொறுப்பில் இருந்து நாகேஷ்வரராவ் விடுவிக்கப்பட்டார்.
  • மத்திய பிரதேச மாநிலத்தின் காவல்துறை ஆணையராக பணியாற்றியவர் ரிஷிகுமார் சுக்லா. 
சுற்றுச் சூழல் பாதுகாப்புடன் திகழும் உலகின் முதன்மையான மெர்சிடஸ்-பென்ஸ் பசுமை விளையாட்டரங்கம்
  • அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் உள்ள மெர்சிட்ஸ்-பென்ஜ் விளையாட்டரங்கத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புக்கான (எல்இஇடி பிளாட்டினம்) சான்றை பெற்று, தொடர்ந்து உலக அளவில் முதன்மையான விளையாட்டரங்கள் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
  • கண்கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கம் மறுசீரமைப்புக்குப் பின் கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த விளையாட்டரங்கம் உலக அளவில் அனைத்து வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது.
10% இடஒதுக்கீடு: பிகார் மாநிலம் ஒப்புதல்
  • பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கு பிகார் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய பாஜக கூட்டணி அரசால் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த இட ஒதுக்கீட்டுக்கு குஜராத், ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதைத் தொடர்ந்து, அந்த 2 மாநிலங்களிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு கோடி கடனுதவி அளிக்கிறது சீனா
  • பாகிஸ்தானிடம் தற்போது 812 கோடி டாலர்தான் நிதிக் கையிருப்பு உள்ளது. சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவை பாகிஸ்தானின் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச நிதிக் கையிருப்பைவிட இது மிகவும் குறைவாகும்.
  • எனவே, ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கியிடமிருந்து பாகிஸ்தான் கடன் பெற இயலாத நிலை உள்ளது.
  • இந்த நிலையைப் போக்க, பாகிஸ்தானின் ரிசர்வ் வங்கியில் 250 கோடி டாலர்களை சீனா கடனாகச் செலுத்தவிருக்கிறது. இந்தத் தொகையுடன் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் பாகிஸ்தானுக்கு சீனா அளிக்கும் கடனுதவியின் மதிப்பு 450 கோடி டாலராக உயர்ந்துள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.



பிப்.,6 விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31 செயற்கைகோள்
  • இந்தியாவின் தகவல் தொடர்பு வசதிக்காக "ஜிசாட்-31" செயற்கை கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து, வருகிற 6ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.இஸ்ரோவின் 40ஆவது தகவல் தொடர்பு செயற்கை கோளான இந்த "ஜிசாட்-31" செயற்கை கோள், பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில் இருந்து "ஏரியன்-5" ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. "ஜிசாட்-31" செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். 
  • இந்த செயற்கை கோள், டிவி ஒளிபரப்பு, டி.டி.எச். சேவை, மொபைல்போன் சேவை உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்திய நேரப்படி அதிகாலை 2.31 மணிக்கு இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 
  • அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து ஜிசாட் 31 சேவையாற்ற உள்ளது. அரபிக் கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் போன்ற கடல் பகுதிகளில் பயணிக்கும் போதும் தொலைத் தொடர்பு சேவை வழங்க இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நவீன துப்பாக்கிகள் வாங்க ஒப்புதல்
  • ராணுவத்துக்காக, ஏழு லட்சம் ரைபிள்கள், 44 ஆயிரம் இலகு ரக தானியங்கி துப்பாக்கிகள், 44 ஆயிரத்து 600 கார்பைன் எனப்படும், துப்பாக்கிகள் வாங்கும் பணி, 2017, அக்டோபரில் துவங்கியது.மேற்கு வங்க மாநிலம், இஷார்புரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வடிவமைத்த, ரைபிள், சோதனையின்போது தோல்வி அடைந்தது.
  • அதையடுத்து, உடனடி தேவைக்காக, வெளிநாடுகளில் இருந்து இந்த ரக துப்பாக்கிகள் வாங்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டது.அதன்படி, அமெரிக்காவில் தயாரிக்கப்படும், 'சிக் சார்' எனப்படும், அதிநவீன ரைபிள் துப்பாக்கிகள் வாங்க, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நிர்மலா சீதாராமன் தலைமையிலான, ஆயுதக் கொள்முதல் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
  • அமெரிக்காவிடம் இருந்து, 73 ஆயிரம் நவீன ரைபிள் துப்பாக்கிகள், விரைவு கொள்முதல் ஒப்பந்தப்படி பெறப்பட உள்ளது.இதற்காக, அமெரிக்க நிறுவனங்களிடம் பேசப்படுகிறது. ஒப்பந்தம் செய்த ஓராண்டுக்குள், இந்த துப்பாக்கிகளை அமெரிக்க நிறுவனம் அளிக்க வேண்டும்.
  • அண்டை நாடான சீனாவுடனான எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு, இந்த நவீன ரைபிள் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன.தற்போது பயன்பாட்டில் உள்ள, தமிழகத்தின் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் தயாரிக்கப்பட்ட, இன்சாஸ் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, இந்த நவீன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel