Type Here to Get Search Results !

1st FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




2019-2020 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்
  • வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளநிலையில், இன்று 2019-2020 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையாகவே தாக்கல் செய்துள்ளார் இடைக்கால நிதித்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
  • மாதம் ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய மெகா ஓய்வூதியத்திட்டம்.
  • ஊரக சுகாதாரம் 98 சதவீதம் உறுதி செய்யப்பட்டு 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன.
  • 22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2 ஹெக்டேர் நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ரூ.6 ஆயிரமும் 3 தவணையாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
  • சிறிய விவசாயிகளுக்கு உதவ ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
  • ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் வழங்க ரூ.1.70 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
  • பால் உற்பத்தியை அதிகரிக்க காதமதேனு என்ற சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும்.
  • மீன் வர்த்தகம் மூலம் கடந்தாண்டு 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இந்திய பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பு மீன்வளத்துறை அளித்து வருகிறது.
  • மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை என்று உருவாக்கப்படும்.
  • கால்நடை மற்றும் மீன் வளப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடனில் 2 சதவீத வட்டி தள்ளுபடி வழங்கப்படும்.
  • கால்நடை வளர்ப்பு, மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.
  • இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3 சதவீதம் வரை வட்டி மானியம்.
  • கால்நடை, மீன்வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி சலுகை .
  • பொருளாதார நலிந்த பிரிவினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிக்கப்படும்.
  • இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாக்கப்படும்.
  • கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய பொருளாதார நாடாக உலக அளவில் இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • லஞ்சம், ஊழலை ஒழிக்க வெளிப்படையான நடைமுறைகளை கொண்டு வந்துள்ளோம்.
  • நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டுள்ளது.
  • வருமான வரி தாக்கல் முழுவதும் கணினி மயமாக்கப்படும்.
  • 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி அறிமுகம்.
  • 34 கோடி வங்கி கணக்குகள் ஜன்தன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரி வருவாய் உயர்ந்துள்ளது.
  • தனி நபர் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை.
  • வீடு வாங்குவோர் சுமையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலை கேட்டுக்கொண்டுள்ளது.
  • 99.54 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர்.
  • நேரடி வரி வருவாய் ரூ.6.38 லட்சம் கோடியில் இருந்து, ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னோடி நாடாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 27 கி.மீட்டர் என்ற அளவில் - தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • தொழில் வளத்தை மேம்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களிலும் உள்நாட்டு தேசிய நீர்வழி சரக்கு போக்குவரத்து தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ரயில்வே துறைக்கு சுமார் ரூ.65,587 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அகல ரயில் பாதையில் இருந்த ஆளில்லா ரயில்வே லெவல் கிராஸிங் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புதுறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும்.
  • சூரிய மின் சக்தி கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்காக உயர்வு.
  • இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது .
  • செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்ததன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது.
  • அத்தியாவசிய மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது மிக மிக குறைந்த அளவு வரி.
  • வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுப்பு அளிக்கப்படும்.
  • இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என பியூஷ் கோயல்.
  • வருங்கால வைப்பு நிதி ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
  • பணி கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • முறைப்படுத்தப்பட்ட தொழில் துறையில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • நிரந்தரமாக ஓரிடத்தில் தங்காத மக்களுக்கு சமூக நலத்துறை கீழ் தனி நலவாரியம் அமைக்கப்படும்.
  • மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிப்படும்.
  • நாடு முழுவதும் பின்தங்கிய நிலையில் இருந்து 115 மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
  • வெளிப்புறத்தில் மலம் கழிக்கும் முறை நாட்டில் இருந்து ஏறக்குறைய ஒழிக்கப்பட்டுவிட்டது.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • 2009-2014 காலகட்டத்தில் பணவீக்கம் 10 சதவீதத்தை தாண்டியது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பணவீக்கம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.
  • திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.
  • நேரடி வரி வருவாய் ரூ.6.38 லட்சம் கோடியில் இருந்து ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
  • வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்து ரிட்டர்ன் கேட்டவர்களின் 99.54 விழுக்காட்டினரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
  • 4 ஆண்டுகளில் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு பதிவுநீக்கம் செய்யப்பட்டுள்ளன.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் 10 இலக்குகளை இந்தியா எட்டும். அனைவருக்கும் தூய, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை.
ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி
  • நாடு முழுவதும் ஒரே வரித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு முறையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது.
  • ஜிஎஸ்டி வரி வசூலை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரூ.1,00710 கோடியாக உயர்ந்தது. நவம்பர் மாதம் 30ம் தேதி யில் மொத்தம், 97 ஆயிரத்து 637 கோடி ரூபாய் வசூல் ஆகியது. இது அக்டோபர் மாதத்தைவிட, 3 ஆயிரத்து 79 கோடி ரூபாய் குறைவானதாகும்.
உலக வங்கி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.2645 கோடி ஒப்பந்தம்
  • உலக வங்கி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறைக்குரூ. 2645 கோடிக்கானஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
  • தொடர்ந்து பேசிய அவர், உலக வங்கியுடன் 2,645 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு முன்னிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரும் திங்கட்கிழமை ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் மக்கள் நல்வாழ்வு துறையை உலக அளவில் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.
  • போலியோ சொட்டி மருந்து மார்ச் 10ம் தேதி தமிழகத்தில் வழங்கப்படும் என்றும், இந்த ஆண்டு ஒரே தவணையாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



வீட்டுப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க அம்மா ஆம்புலன்ஸ் - தமிழக அரசு திட்டம்
  • வீட்டுப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டுஒவ்வொரு மாவட்டத்திற்கும் அம்மா ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித் தரப்படும் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
எதிர்மறை மதிப்பெண் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
  • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், எதிர்மறை மதிப்பெண்கள் லட்சக்கணக்கான மாணவர்களின் கற்பனைத் திறனை மழுங்கடித்து எதிர்காலத்தையே சீரழிக்கும் முறையாக உள்ளது. 
  • கொள்குறிவகைத் தேர்வுகளில் 4 விடைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து பதிலளிக்க வேண்டும். ஆனால் எதிர்மறை மதிப்பெண் முறையின் காரணமாக மாணவர்களிடம் சிந்தித்து பதிலளிக்க வேண்டும் என்ற சிந்தனையே வராது. 
  • இந்த தேர்வுகள் எந்த பதில் சரியானதாக இருக்கும் என்ற பதற்றத்தையும், பயத்தையுமே ஏற்படுத்தும்.
  • இந்த வழக்கின் விசாரணயின் போது, கல்வியில் வளர்ந்து முன்னேறிய நாடுகளில் கூட இந்த எதிர்மறை மதிப்பெண் முறை கிடையாது. வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியிலும் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 
  • தேர்வு வாரியம், ஒரு மாணவர் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்து பதில்களையும் துல்லியமாக கணித்து விடையளிக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. 
  • எதிர்மறை மதிப்பெண்களால் அறிவில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து விட்டோம் என்பதற்கான எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் கிடையாது. 
  • இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரர் சரியாக பதிலளித்த 18 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் வீதம் 72 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 
  • அவர் தவறாகப் பதிலளித்த 25 கேள்விகளுக்கு தலா ஒரு மதிப்பெண் வீதம் 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அவர் பெற்ற 72 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டு 47 மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஐடியில் சேர வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவில்லை. 
  • மனுதாரரைப் போலவே பல மாணவர்களின் எதிர்காலமும் இந்த எதிர்மறை மதிப்பெண்களால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. 
  • எனவே போட்டித் தேர்வுகளில் பின்பற்றப்படும் எதிர்மறை மதிப்பெண் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
செம்மொழி பூங்காவிற்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
  • செம்மொழி பூங்கா, மாதவரம் தோட்டக்கலை பண்ணை, தோட்ட கலைத்துறை அலுவலகம், தோட்ட கலைத்துறை பயிற்சி மையம் ஆகியவற்றுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னை மாதவரத்தில், தோட்ட கலைத்துறை பண்ணை உள்ளது. இங்கு, காய்கறிகள் மற்றும் மலர் நாற்றுக்கள், பழ மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கும், மாடித்தோட்டம் அமைக்கும் பொதுமக்களுக்கும், குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. 



2019-20 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8 அன்று தாக்கல்
  • தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். அதில் 2019-20ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, வரும் 8 ஆம் தேதி நிதித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பானை வீழ்த்தி கத்தார் 'சாம்பியன்'
  • 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய அணி லீக் போட்டியில் வெளியேறியது.
  • ஜப்பானும், கத்தாரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு விறுவிறுப்பான இந்த போட்டியில் முடிவில் கத்தார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 
  • 63 ஆண்டு கால ஆசிய கோப்பை கால்பந்து வரலாற்றில் கத்தார் அணி மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றியின் மூலம் 2021-ம் ஆண்டில் நடக்கும் 'பிபா' கான்பெடரேஷன் கோப்பை போட்டிக்கும் கத்தார் அணி தகுதி பெற்றது.
'சிமி' மாணவர் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு உத்தரவு
  • சிமி (Students Islamic Movement of India) எனப்படும் இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 ஆண்டு காலம் தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
  • கடந்த 1977ம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் 'சிமி' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (Students Islamic Movement of India) தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முழுவதும் கிளைகள் உருவாக்கப்பட்டு பயங்கரவாத செயல்கள் அரங்கேற்றப்பட்டது.
  • பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் குண்டு வெடிப்பு, கயா குண்டுவெடிப்பு, சிறை உடைப்பு போன்ற பல்வேறு வழக்குகளில் சிமி அமைப்பினர் ஈடுபட்டது தெரிய வந்தது.
  • அதைத்தொடர்ந்து, சிமி அமைப்புக்கு கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்து மத்திய அரசு உத்தர விட்டது. இந்த நிலையில், சிமி மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel