உயிரியல் பல்வகை சட்டம் / Biological Diversity Act - 2002

உயிரியல் பல்வகை சட்டம் (Biological Diversity Act - 2002)

  • 1992ல் கையெழுத்தான ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு. 
  • அதாவது காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபு பொருட்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவைப் பாதுகாக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 
  • இந்தச் சட்டப்படி பிரிவு 3 அல்லது 4 அல்லது 6 ஆகியவற்றின் கீழ் கொண்டு வரப்பட்ட வகையங்களை மீறுகிறோர் அல்லது எவரையும் மீற தூண்டுகிறாரோ அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். 
  • அவ்வாறு மீறுவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் பொருட்டு அபராதம் வசூலிக்கப்படும். அல்லது இழப்பீடு மற்றும் அபராதம் சேர்ந்து வசூலிக்கப்படும். மேலும் தீவிரமாக சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் வாரியத்தை தண்ணீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் 1974ன் படி அமைத்தது. 
  • அந்த வகையில்தான் தமிழ்நாடு அரசு மாசு கட்டுபாட்டு வாரியத்தை 1974ம் ஆண்டு நீர் மத்திய அரசு சட்டம் 6ம் படி 27.02.1982 அன்று அமைக்கப்பட்டது. இது 1974ம் ஆண்டு நீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1997ம் ஆண்டு நீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு) மேல் வரி சட்டம், 1981ம் ஆண்டு காற்று (மாசு தடுத்தல் மற்றும் கட்டுபாடு) சட்டம் மற்றும் 1986ம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் அடங்கிய பின்வரும் விதிகளின்கீழ் செயல்படுகிறது. 
  • 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், திருத்தப்பட்ட 2008ம் ஆண்டின் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் விதிகள், 1994ம் ஆண்டு மற்றும் 2000ம் ஆண்டுகளில் திருத்தப்பட்ட 1989ம் ஆண்டு அபாயகரமான இரசாயனங்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள், 2000 மற்றும் 2003ம் ஆண்டில் திருத்தப்பட்ட 1998ஆம் ஆண்டு மருத்துவ நுண்ணுயிர் கழிவு விதிகள், 2011ம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் விதிகள், 2000ம் ஆண்டு ஒலி மாசு விதிகள், 2000ம் ஆண்டு நகர திடக்கழிவுகள் விதிகள், திருத்தப்பட்ட 2001ம் ஆண்டு மின்கலன்கள் விதிகள், 2011ம் ஆண்டு மின்னணுக் கழிவுகள் விதிகள் போன்ற சட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் மாசுவை தடுத்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வழிவகுக்கிறது. 
  • இப்படி இந்தியா சுற்றுச் சூழல் சட்டங்களை சரியாக செயல்படுத்தியதன் விளைவுதான், உலகிலேயே மிக குறைந்த அளவு கரியமில வாயுக்களை வெளியேற்றுகின்றன.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel