நீர் நிலைகள் புனரமைப்பு தென் இந்தியாவில் மதுரை முதலிடம்
- மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நீர்நிலைகள் புனரமைப்பு, புதிதாக உருவாக்குதலில் தென்னிந்தியாவில் மதுரை மாவட்டத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
- இதில் தென்னிந்தியா அளவில் நீர்நிலைகள் புனரமைப்பு, உருவாக்குதலில் முதல் பரிசும், நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மூன்றாம் பரிசும் மதுரைக்கு வழங்கப்பட்டது. நதி மீட்டெடுத்தல் பணிக்காக திருநெல்வேலி மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பு, உருவாக்குதலில் சிவகங்கைக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவில் ரூ. 100 கோடியில் உறை விந்து உற்பத்தி மையம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
- சேலம் தலைவாசல் கூட்டு ரோடு அருகில் 900 ஏக்கரில் அமையும் ஒருங்கிணைந்த நவீன கால்நடை பூங்காவில் நாட்டின, கலப்பின காளைகளைக் கொண்டு ரூ. 100 கோடியில் உறை விந்து உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
- சேலம் நேரு கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 202 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தல், ரூ. 64 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 157 கோடி கடனுதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 140.31 கோடி மதிப்பில் அல்லிக்குட்டை, நேரு நகர், காந்தி நகர், பெரியார் நகர் மற்றும் அவ்வை நகர் பகுதிகளில் 1,476 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி, சேலம் மாநகராட்சி சார்பில் தொங்கு பூங்கா வளாகத்தில் ரூ. 10.50 கோடி மதிப்பில் பல்நோக்கு மண்டபத்தை மேம்படுத்தும் பணிகள் உள்பட ரூ. 202.47 கோடி மதிப்பில் 34 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2017-18-ஆம் ஆண்டில் வங்கிக் கடன் இணைப்பு இலக்கு ரூ. 7,000 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை 2,72,089 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 8,332 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக கடந்த 2011-12-ஆம் ஆண்டு முதல் 2017-18-ஆம் ஆண்டு வரை ரூ. 41,180 கோடி சுய உதவிக் குழுக்களுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
- சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தில் அகில இந்திய அளவில் தமிழகம் ஒரு சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 2750 குழுக்களுக்கு கிட்டத்தட்ட 42,600 உறுப்பினர்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ. 157 கோடி கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
- தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சேலம் தலைவாசல் கூட்டு ரோடு அருகில் 900 ஏக்கர் பரப்பளவில் ரூ. 396 கோடியில் ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- மேலும், மரபு திறன்மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளைக் கொண்டு ரூ. 100 கோடி மதிப்பில் உறை விந்து உற்பத்தி மையம் அந்த வளாகத்திலே அமைக்கப்படும்.விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளினால் அல்லல்படும் நிலையில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் விதமாக ஆண்டொன்றுக்கு ரூ. 6,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதற்கட்டமாக ரூ. 2,000 வங்கிக் கணக்கிலே செலுத்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து: சென்னையில் ஜூன் 6ல் துவக்கம்
- மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கால்பந்து போட்டி, சர்வதேச லயன்ஸ் கிளப் மற்றும் சிறப்பு ஒலிம்பிக் இணைந்து, சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து- 2019 என்ற தலைப்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வரும் ஜூன் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சென்னை கட்டிட கலைஞர் வடிவமைத்த 'தேசிய போர் நினைவகம்'!நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
- தலைநகர் டில்லியில் இந்தியா கேட் அருகில் தேசிய போர் நினைவகம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த போர் நினைவு சின்னம் வடிவம் குறித்து சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. அந்த போட்டியில், சென்னை சேர்ந்த கட்டிட கலைஞரான யோகேஷ் சந்திரஹாசன் என்பவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்திருந்த போர் நினைவகம் டில்லியில் அமைக்கப் பட்டது.
- இந்த நினைவு சின்னத்தை பிரதமர் மோடி இன்று மாலை தீபம் ஏற்றி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- சுமார்176 கோடி ரூபாய், 40 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவகம், ஒரு பெரிய வட்ட வடிவிலான அடித்தளமும், அதன் மையப் பகுதியில் சதுர வடிவில் மேடையும் அமைந்துள்ளது. அதன் நடுவில் அணையா விளக்குடன் கூடிய ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட் டுள்ளது.
Rail Drishti இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார்
- ரயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Rail Drishti என்ற புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார்.
- இதன் மூலம் ரயிலில் வழங்கப்படும் உணவுகள், தயாரிக்கும் சமையலறைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அமர்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பார்க்கலாம்.
ஆஸ்கார் விருதுகள் 2019
- 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற விழாவை தொகுப்பாளர் இல்லாமல் பிரபலங்கள் தொகுத்து வழங்கினர்.
- சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது, Roma திரைப்படத்தை இயக்கிய Alfanzo Cuaron-க்கு வழங்கப்பட்டது.
- சிறந்த திரைப்படம்: க்ரீன் புக்
- சிறந்த நடிகை: ஒலிவியா கோல்மன் (தி வெஃப்ரைட்)
- சிறந்த நடிகர்: ரமி மாலிக் ( போஹிமியன் ராப்சடி )
- சிறந்த துணை நடிகர்: மகர்ஷாலா அலி ( க்ரீன் புக்)
- சிறந்த துணை நடிகை: ரெஜினா கிங் - இஃப் பெலே ஸ்டிரிட் குட் வாக்
- சிறந்த இயக்குநர்: அல்போன்சா கவுரான் ( ரோமா)
- சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ரோமா (மெக்சிகோ)
- சிறந்த ஆவணப்படம்: பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் (இந்தியா)
- சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஸ்பைடர் மேன் : இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ்
- சிறந்த திரைக்கதை: க்ரீன் புக்
- சிறந்த தழுவல் திரைக்கதை: சார்லி வாச்டெல் , டேவிட் ராபின்சன், கெவின் வில்மோட், ஸ்பைக் லீ - பிளாக்லென்சன் திரைப்படம்
- சிறந்த இசை: லுட்விக் கோரன்சன் - பிளாக் பந்தர்
- சிறந்த பாடல்: ஏ ஸ்டார் பார்ன் - ஷோலோ திரைப்படம்
- சிறந்த ஆவணப்படம்: பிரி சோலோ
- சிறந்த குறும்படம்: இன்
- சிறந்த சண்டை காட்சி: ஸ்கின்
- சிறந்த ஒளிப்பதிவு: அல்போன்சா கவுரான் - ரோமா திரைப்படம்
- சிறந்த அனிமேஷன் காட்சி : பாவோ
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: பிளாக் பந்தர்
- சிறந்த ஆடை வடிவமைப்பு: பிளாக் பந்தர்
- சிறந்த ஒப்பனை: வைஸ்
- சிறந்த ஒலிப்பதிவு : போஹிமியன் ராப்சடி
- சிறந்த ஒலி கலவை: போஹிமியன் ராப்சடி
- சிறந்த எடிட்டிங் : போஹிமியன் ராப்சடி
- சிறந்த காட்சி: ஃபர்ஸ்ட் மேன்