Type Here to Get Search Results !

24th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இந்திய பெண் குறித்த 'PERIOD END OF SENTENCE' என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண் குறித்த 'PERIOD END OF SENTENCE' என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. 
1 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 புதிய திட்டத்தை துவக்கினார் மோடி
  • மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்ட, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான, உதவித் தொகை திட்டத்தை, உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 
  • முதல் தவணையாக, தலா, 2,000 ரூபாய், ஒரு கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 'நாடு முழுவதும் உள்ள, 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இது, மூன்று தவணைகளில் வழங்கப்படும்' என, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டது. 



ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல்
  • ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
  • அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரயில்வே வாரியம் 650 ஏக்கர் நிலத்தை கொடுக்கும். ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்படும்.
  • ரூ.1,700 கோடி மதிப்பிலான இரு வழிப்பாதைக்கு கர்நாடக அரசு பாதிச் செலவை ஏற்கும். இந்த திட்டத்தின்படி, 160 கி.மீ தொலைவுக்கு 82 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.அடுத்த 6 ஆண்டுகளில் திட்டம் நிறைவுபெறும் என்று தெரிவித்தனர்.
இசை மற்றும் கவின் கலைக்கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர்!
  • தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக்கல்லூரிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் சவுரப்
  • உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்.டில்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, ரவிந்தர் சிங் பங்கேற்றனர். 
  • சவுரப் சவுத்ரி பைனலுக்கு முன்னேறினார். அபிஷேக், ரவிந்தர் முறையே 24, 26வது இடம் பிடித்தனர். பைனலிலும் சவுரப் நம்பிக்கை அளித்தார். மொத்தம் 245 புள்ளிகள் குவித்த இவர் தங்கத்தை தனதாக்கினார். இதன் மூலம், உலக சாதனையையும் எட்டினார். வெள்ளி, வெண்கலம் முறையே டாமிர், சீனாவின் பாங் வெய் கைப்பற்றினர்.
  • இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த தங்கத்தின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. ஏற்கனவே, 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் சண்டேலா தங்கம் வென்றிருந்தார்.
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக கெல்லி கிராஃப்ட் நியமனம்
  • ஐ.நா. சபைக்கான புதிய அமெரிக்க தூதராக கெல்லி நைட் கிராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது கனடாவுக்கான தூதராக உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel