35ஏ சட்டம் / ARTICLE 35A TAMIL PDF

 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவை நீக்க கோரிய வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
 • இதனால் காஷ்மீரில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு இதனால் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது .
என்ன சட்டம்
 • 35ஏ சட்டப்பிரிவு என்பது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்குகிறது. இந்தியாவில் மற்ற எந்த மாநிலங்களுக்கும் இல்லாத சிறப்பு அதிகாரம் இந்த மாநிலத்திற்கு இருக்கிறது. 
 • இந்த சிறப்பு அதிகாரம் காரணமாக மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டாலும் கூட இதன் மீது மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது.
என்ன அதிகாரம்
 • ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும். வேறு மாநில மக்கள் எத்தனை வருடமாக அங்கு இருந்தாலும் நிலம் வாங்க முடியாது.
 • ஜம்மு அரசு வேளைகளில் வேறு மாநில மக்கள் சேர முடியாது.
 • ஜம்முவில் கல்லூரிகளில் வேறு மாநில மக்கள் ஸ்காலர்ஷிப் பெற முடியாது..
 • இந்த சட்டம் காரணமாக வேறு மாநில மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலும் இதை மத்திய அரசு நீக்க முடியாது.
எப்படி வந்தது
 • இந்த சட்டம் 1954ல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் மூலம் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும். இந்திய சுதந்திரத்தை அடுத்த குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் கொண்டு வந்த சிறப்பு பிரகடணம் மூலம் கொண்டு வரப்பட்டது. 
 • முன்னாள் பிரதமர் நேரு மூலம் இந்த சட்டத்தை பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த சட்டம்
 • அப்போது காஷ்மீரில் மிக கடுமையான கலவரங்கள் நடந்து வந்தது. இந்த கலவரங்களை தடுக்கும் பொருட்டே இந்த சட்டம் அப்போது கொண்டு வரப்பட்டது. ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பும் பொருட்டு அப்போது இந்த சட்டம் அமல்படுத்தட்டது.
என்ன தவறு
 • ஆனால் இந்த சட்டம் அடிப்படையிலேயே தவறு ஆகும். சட்டவிதி 368ன் படி பாராளுமன்றம் மட்டுமே வாக்கெடுப்பு மூலம் சட்டங்களை இயற்ற முடியும்.
 • ஆனால் குடியரசுத்தலைவர் அப்படி எதுவும் செய்யாமல் சிறப்பு பிரகடனம் மூலம் இந்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். சட்ட விதி 370ஐ அவர் இதில் பயன்படுத்தி உள்ளார். 
 • ஆனால் 370 மூலம் சட்ட திருத்தங்களை கொண்டு வரலாம் புதிய நிரந்தர சட்டங்களை கொண்டு வர முடியுமா என்று பெரும் கேள்வி எழுந்து இருக்கிறது.
இப்போது என்ன
 • இந்த சட்டத்திற்கு காஷ்மீர் பிரிவினைவாதிகளின் ஆதரவு அதிகம் இருக்கிறது. இந்த சட்டம் நீக்கப்பட்டால், காஷ்மீரில் இந்து மக்கள் அனுமதியின்றி குடியேறுவார்கள். 
 • இது ஒரு கலாச்சார போர்தொடுப்பாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது இந்திய இறையாண்மைக்கு எதிரான சட்டம் என்று பெரும்பாலான வலதுசாரி அமைப்பினர் நினைக்கிறார்கள்.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel