Thursday, 28 February 2019

ஆசிரியர் தகுதி தேர்வுகள் 2019 NOTIFICATION வெளியானது / TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) NOTIFICATION TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) – 2019 NOTIFICATION

TNPSCSHOUTERS


 • ஆசிரியர் தகுதி தேர்வுகள்  2019 NOTIFICATION  வெளியானது
 • ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்துக்கான போட்டி தேர்வுகளை தனியாகவும் நடத்த வேண்டும் எனத் தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
 • இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான போட்டித் தேர்வினை தனியாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
 • ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுதுவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தி, பணி நியமனம் குறித்த உரிய நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை பின்பற்றலாம் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

27th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERSஅத்திக்கடவு திட்டம் முதல்வர்  அடிக்கல்
 • அவிநாசி, கோவை, திருப்பூர், ஈரோடு என, மூன்று மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கனவான, அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, நடக்கிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு: அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
 • சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இதுதொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்த திறப்புவிழா நடைபெற்றது.
கேலோ இந்தியா செயலி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
 • விளையாட்டு, உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கேலோ இந்தியா என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலியை பிரதமர் மோடி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
 • மத்திய அரசின் கேலோ இந்தியா (விளையாடு இந்தியா) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விளையாட்டு ஆணையம், இந்தச் செயலியை வடிவமைத்துள்ளது. விளையாட்டையும், உடல்தகுதியையும் அடிப்படையாக வைத்து செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். 
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : கலப்பு பிரிவில் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப்பதக்கம்
 • டெல்லியில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி நடந்தது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.
ஜெயசூர்யாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது ஐ.சி.சி 
 • இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே ஊழல் மற்றும் சூதாட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது. 
 • அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
 • இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சனத் ஜெயசூரியாவுக்கு 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நைஜீரியா அதிபராக மீண்டும் தேர்வான முஹம்மது புஹாரி
 • ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள்தொகை கொண்ட நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும் அதிபர் பதவிக்கும் சேர்த்து கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்நாட்டின் வரலாறில் இல்லாத அளவுக்கு அதிபர் பதவிக்கு மட்டும் 73 பேர் போட்டியிட்டனர்.
 • இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் ஒன்றரை கோடி (56 சதவீதம்) வாக்குகளை பெற்று தற்போதையை அதிபர் முஹம்மது புஹாரி(76) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.


>
சீனா, இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை
 • இந்தியா, ரஷியா, சீனா ஆகிய தெற்காசியாவின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 16வது ஆலோசனை கூட்டம் சீனாவின்வூஜென் நகரில் நடைபெற்றது.
 • இதன்பிறகு மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்த கூட்டறிக்கையில், தீவிரவாதம் என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பது, அவற்றில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடும் நாடுகள் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.தீவிரவாதத்தை பயன்படுத்த கூடாது
 • இரு நாடுகள் எல்லை பிரச்சினையை தீர்க்க தீவிரவாதத்தை பயன்படுத்த கூடாது. சர்வதேச நாடுகளின் விதிமுறைகளின்படி, இதுபோல தீவிரவாதத்திற்கு உதவி செய்வோர் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் பாகிஸ்தானின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் இப்போது உள்ள சூழ்நிலையில், மறைமுகமாக பாகிஸ்தானை சுட்டிக்காட்டி தான் இந்த அறிக்கையின் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த இந்தியா
 • காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இது குறித்து இந்தியா கூறிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது.
 • இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா சம்மன் கொடுத்து அழைத்து, புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா வழங்கியது.
ரூ.2,700 கோடியில் ராணுவத் தளவாடங்கள் : பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
 • பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் புதன்கிழமை கூடியது.
 • அந்தக் கூட்டத்தில், கடற்படைக்கு 3 பயிற்சிக் கப்பல்களை ரூ.2,700 கோடி செலவில் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் கப்பல்கள், பெண்கள் உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பகுதியில் அடிப்படை பயிற்சிகள் அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
 • இந்தக் கப்பல்களை மருத்துவக் கப்பல்களாகப் பயன்படுத்த முடியும். மேலும், பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், தேடுதல் பணிகளுக்கும் அந்தக் கப்பல்களைப் பயன்படுத்தலாம்.
ஐசிஏஐ குழுவில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பொருளாளராக நியமனம்
 • ஐசிஏஐ என்னும் இந்தியன் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இந்த அமைப்பில் மொத்தமுள்ள 10000 உறுப்பினர்களில் அகமதாபாத் பிரிவில் மட்டும் 2500 பேர் உள்ளனர். நாட்டில் உள்ள பிரிவுகளில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அகமதாபாத் பிரிவு இரண்டாம் இடத்தில் உள்ளது.
 • இந்த அகமதாபாத் பிரிவில் குழு உறுப்பினர் தேர்தலில் முதல் முறையாக அஞ்சலி சோக்சி என்னும் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் நின்றவர்களில் இரண்டாவது அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளார். இந்த பிரிவு ஆரம்பித்து 18 வருடங்களில் குழு உறுப்பினராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

Wednesday, 27 February 2019

26th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS
உள்நாட்டில் தயாரான ஏவுகணை சோதனை வெற்றி
 • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இரு, அதிநவீன ஏவுகணைகள், ஒடிசா மாநிலம், பாலசோர் கடற்கரை அருகே, நேற்று(பிப்.,26) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. 
 • பாலசோர் அருகே, சந்திப்பூரில், ஒருங்கிணைந்த சோதனை மையம் உள்ளது. இங்கு, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய, இரு அதிநவீன ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. 
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்துக்கு அமைதிக்கான காந்தி விருது: ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
 • விவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா அமைப்பு, சுலப் இன்டர்நேஷனல், எகல் அபியான் அறக்கட்டளை, யோஹெய் சஸாகாவா அமைப்பு ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி அமைதி விருதை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
 • கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா ஆகிய அமைப்புகள் 2015-ஆம் ஆண்டில் காந்தி அமைதி விருதுக்கு இணைந்து தேர்வு செய்யப்பட்டது. 
 • சுலப் அமைப்பு 2016ஆம் ஆண்டுக்கான அமைதி விருதுக்கும், எகல் அமைப்பு 2017ஆம் ஆண்டுக்கான அமைதி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டன. 2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு யோஹெய் சஸாகாவா அமைப்பு தேர்வு செய்யப்பட்டது. பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். இல்லம் : கேரள ஆளுநர் சதாசிவம் திறந்துவைத்தார்
 • மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடவனூரில் உள்ளது. சிறு வயதில் இங்கு எம்.ஜி.ஆர். தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாகச் செயல்பட்டு வருகிறது.
 • அவரது நண்பர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் சிலர் இணைந்து சிதிலமடைந்த வீட்டை ரூ.50 லட்சம் செலவில் புனரமைப்பு செய்தனர். இப் பணிகள் சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்தன.
 • இந்நிலையில், புனரமைப்பு செய்யப்பட்ட வீட்டின் திறப்பு விழா வடவனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கேரள ஆளுநர் சதாசிவம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட வீடு மற்றும் முகப்பில் உள்ள எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையையும் திறந்துவைத்தார்.
அமேசான் இயக்குனர் குழுவில் இந்திரா நுாயி
 • 'பெப்சிகோ' நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயி, அமெரிக்காவின், 'அமேசான்' நிறுவன இயக்குனர் குழுவில் இணைந்துள்ளார்.
 • சென்னையைச் சேர்ந்த, இந்திரா நுாயி, 1994ல், பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, நிதி, திட்டம், கொள்கை மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளின் தலைவராக பணியாற்றினார்.பெப்சிகோ நிறுவன இயக்குனர் குழு உறுப்பினராக, 2001ல், தேர்வு செய்யப்பட்டு, தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி பொறுப்புகளில், திறம்பட செயலாற்றினார்.
 • கடந்த, 2006 அக்டோபர் முதல், 2018 அக்டோபர் வரை, தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்றார்.
 • இவர், வர்த்தகத்தில் நவீன உத்திகளையும், புதிய பொருட்களையும் அறிமுகப்படுத்தி, பெப்சிகோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரிந்தார். இந்திரா நுாயி, தற்போது, அமேசான் நிறுவனத்தின் இயக்குனர் குழு மற்றும் தணிக்கை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • ஸ்டார் பக்ஸ் நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி, ரோசலின்ட் புரூவர், சமீபத்தில், அமேசான் இயக்குனர் குழுவில் இணைந்தார்.இதன் மூலம், அமேசான், ஒரே மாதத்தில், வெள்ளையரல்லாத இரு பெண்களை இயக்குனர் குழுவில் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2ம் முறையாக சர்ஜிக்கல் தாக்குதல்
 • புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா விமானப்படை நடத்திய துல்லியதாக்குலால் பாகிஸ்தானே தற்போது நிலைகுலைந்து போயியுள்ளது. பாகிஸ்தான் மீது 2வது முறையாக இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
 • இந்தியா விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத முகாம்களில் இருந்த சுமார் 300 பேர் சாம்பல் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சுமார் ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதிகாலையில் தாக்குதல்:
 • எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. பாலகோட், சக்கோத்தி, முஷாபாராபாத் ஆகிய 3 பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவீசி தகர்க்கப்பட்டன.
 • இந்த தாக்குதலுக்கு மிராஜ் 2000 போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12 விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதில் சுமார் 1000 கிலோ வெடிபொருட்களும் பயன்படுத்தப்பட்டது.

TNPSC GROUP 1 (CSSE - I) NOTIFICATION - 132 VACANCIES, SYLLABUS, NOTES, OLD & MODEL QUESTION PAPER, ANSWER KEY, QUESTION PAPER ANALYSIS, RESULT, CUTOFF MARKS & COUNSELLING 2019

TNPSCSHOUTERS
 • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியிடங்களை நிரப்ப குரூப் 4, குரூப் 2, குரூப் 1 என பல்வேறு படிநிலைகளில் தேர்வுகளை நடத்தி காலிப்பாணியிடங்களை நிரப்பி வருகிறது.
 • இந்த சூழ்நிலையில் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட முக்கிய பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டு குரூப் 1 (Tamil Nadu Combined Civil Services- Group 1) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்டவைகளில் மொத்தமாக 139 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 139
 • விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜனவரி 3, 2019
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜனவரி 31, 2019
 • ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜனவரி 31, 2019
 • வங்கிகள் மூலமாக விண்ணப்பம் செலுத்த கடைசி தேதி: பிப்ரவரி 2, 2019
 • விண்ணப்பிக்க தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.
 • வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21. அதிகபட்ச வயது 37. பொது பிரிவினருக்கு 32
 • முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: மார்ச் 3, 2019
 • இந்த தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு.முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வை கட்டுரை வடிவில் எழுத வேண்டும். பின்னர் அதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
 • இதர விபரங்களுக்குwww.tnpsc.gov.in என்ற இணையதளத்தை காணவும்.
 • முன்னதாக,2014-16-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு 85 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது.
 • அதில் வெற்றி பெற்ற 176 விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த டிசம்பர்31ம்தேதி வெளியானது. முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 21ம்தேதி முதல் 25ம்தேதி வரை நடைபெற இருக்கிறது.
SYLLABUS
 1. GROUP 1 PRELIMINARY SYLLABUS - DOWNLOAD HERE
 2. GROUP 1 MAIN SYLLABUS - DOWNLOAD HERE
GROUP - 1 NOTES
ONLINE MODE
TNPSC GROUP 1 PRELIMINARY EXAM PDF
S.NO
DETAILS
PAGES
NO OF PDF’S
PRICE
BUY
1.
GROUP 1 NOTES IN TAMIL PDF
1004
29
Rs.1000
2.
GROUP 1 NOTES  IN ENGLISH PDF
755
22
Rs.1000


OFFLINE MODE


அனைவருக்கும் வணக்கம் எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.
OFF LINE MODE PAID THROUGH BANK 
NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com
அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597  9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும்  பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! 

OLD(PREVIOUS YEAR) & MODEL 

QUESTION PAPERS

PRELIMINARY EXAM OF GROUP - 1


S.NO
NAME OF THE TEST
MEDIUM
LINK
TNPSC POTHU TAMIL FOR ALL EXAMS
1.
GENERAL TAMIL / POTHU TAMIL
Tamil
TNPSC GENERAL STUDIES FOR ALL EXAMS
1.
GENERAL SCIENCE

(PHYSICS, CHEMISTRY, 
BOTANY & ZOOLOGY )
Tamil
2.
CURRENT AFFAIRS / GENERAL KNOWLEDGE
Tamil
3.
GEOGRAPHY
Tamil
4.
HISTORY AND CULTURE OF 
INDIA, TAMIL NADU
Tamil
5.
INDIAN POLITY
Tamil
6.
INDIAN ECONOMY
Tamil
7.
INDIAN NATIONAL MOVEMENT
Tamil
8.
APTITUDE & MENTAL ABILITY TEST
Tamil
TNPSC PREVIOUS YEAR (OLD) QUESTION PAPER FOR
GROUP – 1 PRELIMINARY EXAMINATIONS
1.
OLD QUESTION PAPER - 1
Tamil
2.
OLD QUESTION PAPER – 2
Tamil
3.
OLD QUESTION PAPER – 3
Tamil
4.
OLD QUESTION PAPER – 4
Tamil
5.
OLD QUESTION PAPER – 5
Tamil
6.
OLD QUESTION PAPER – 6
Tamil
OTHER TESTS
1.
TET MODEL QUESTION PAPER
Tamil
2.
SAIDAI DURAI SAMY TNPSC MODEL QUESTION PAPER
Tamil
3,
TNPSC FULL TEST FOR GENERAL STUDIES
ENGLISH
ANSWER KEY

Combined Civil Services Examination - 1
(Group - 1 Services)
Preliminary Examination
(Date of Examination: 03.03.2019 FN)
Sl No.
Subject Name
       1
GENERAL TAMIL
       2
GENERAL ENGLISH
       3
GENERAL STUDIES

QUESTION PAPER ANALYSIS

TNPSC Group 1 2019 Exam Level Analysis

 • TAMIL – 
 • GENERAL ENGLISH – 
 • GMA(MATHS) – 
 • CURRENT AFFAIRS – 
 • GENERAL STUDIES – 
TNPSC GROUP 2/2A EXAM ANALYSIS
S.No
Topic
2018
GR 2
2018
GR 2A
2016
2014
1
History / Indian National Movement
15
11
16
16
2
Economics
14
9
9
6
3
Polity
11
9
8
3
4
Geography
6
3
6
8
5
Physics
5
4
4
4
6
Chemistry
3
6
3
3
7
Botany
3
2
2
3
8
Zoology
3
4
6
6
9
General Knowledge
3
3
3
6
10
Aptitude
25
25
25
25
11
Current Affairs
12
24
18
10
12
Tamil/English
100
100
100
100
TOTAL NO OF QUESTIONS  = 200
TOTAL NO OF MARKS = 300
RESULT

 • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 1 ஏ' முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 • இதற்கான பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை சென்னையில் நடக்கும்.


CUTOFF MARKS

 • Cutoff Marks for Group 1 preliminary exam will be published on 03.03.2019 FN
COUNSELLING

 • Counselling date for Group 1 preliminary exam will be published soon