Type Here to Get Search Results !

27th FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF




அத்திக்கடவு திட்டம் முதல்வர்  அடிக்கல்
  • அவிநாசி, கோவை, திருப்பூர், ஈரோடு என, மூன்று மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கனவான, அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, நடக்கிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு: அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
  • சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இதுதொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்த திறப்புவிழா நடைபெற்றது.
கேலோ இந்தியா செயலி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
  • விளையாட்டு, உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கேலோ இந்தியா என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலியை பிரதமர் மோடி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
  • மத்திய அரசின் கேலோ இந்தியா (விளையாடு இந்தியா) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விளையாட்டு ஆணையம், இந்தச் செயலியை வடிவமைத்துள்ளது. விளையாட்டையும், உடல்தகுதியையும் அடிப்படையாக வைத்து செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். 
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : கலப்பு பிரிவில் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப்பதக்கம்
  • டெல்லியில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி நடந்தது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.
ஜெயசூர்யாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது ஐ.சி.சி 
  • இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே ஊழல் மற்றும் சூதாட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது. 
  • அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
  • இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சனத் ஜெயசூரியாவுக்கு 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நைஜீரியா அதிபராக மீண்டும் தேர்வான முஹம்மது புஹாரி
  • ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள்தொகை கொண்ட நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும் அதிபர் பதவிக்கும் சேர்த்து கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்நாட்டின் வரலாறில் இல்லாத அளவுக்கு அதிபர் பதவிக்கு மட்டும் 73 பேர் போட்டியிட்டனர்.
  • இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் ஒன்றரை கோடி (56 சதவீதம்) வாக்குகளை பெற்று தற்போதையை அதிபர் முஹம்மது புஹாரி(76) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.


>
சீனா, இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை
  • இந்தியா, ரஷியா, சீனா ஆகிய தெற்காசியாவின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 16வது ஆலோசனை கூட்டம் சீனாவின்வூஜென் நகரில் நடைபெற்றது.
  • இதன்பிறகு மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்த கூட்டறிக்கையில், தீவிரவாதம் என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பது, அவற்றில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடும் நாடுகள் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.தீவிரவாதத்தை பயன்படுத்த கூடாது
  • இரு நாடுகள் எல்லை பிரச்சினையை தீர்க்க தீவிரவாதத்தை பயன்படுத்த கூடாது. சர்வதேச நாடுகளின் விதிமுறைகளின்படி, இதுபோல தீவிரவாதத்திற்கு உதவி செய்வோர் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் பாகிஸ்தானின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் இப்போது உள்ள சூழ்நிலையில், மறைமுகமாக பாகிஸ்தானை சுட்டிக்காட்டி தான் இந்த அறிக்கையின் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த இந்தியா
  • காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இது குறித்து இந்தியா கூறிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது.
  • இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா சம்மன் கொடுத்து அழைத்து, புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா வழங்கியது.
ரூ.2,700 கோடியில் ராணுவத் தளவாடங்கள் : பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் புதன்கிழமை கூடியது.
  • அந்தக் கூட்டத்தில், கடற்படைக்கு 3 பயிற்சிக் கப்பல்களை ரூ.2,700 கோடி செலவில் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் கப்பல்கள், பெண்கள் உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பகுதியில் அடிப்படை பயிற்சிகள் அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
  • இந்தக் கப்பல்களை மருத்துவக் கப்பல்களாகப் பயன்படுத்த முடியும். மேலும், பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், தேடுதல் பணிகளுக்கும் அந்தக் கப்பல்களைப் பயன்படுத்தலாம்.
ஐசிஏஐ குழுவில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பொருளாளராக நியமனம்
  • ஐசிஏஐ என்னும் இந்தியன் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இந்த அமைப்பில் மொத்தமுள்ள 10000 உறுப்பினர்களில் அகமதாபாத் பிரிவில் மட்டும் 2500 பேர் உள்ளனர். நாட்டில் உள்ள பிரிவுகளில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அகமதாபாத் பிரிவு இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • இந்த அகமதாபாத் பிரிவில் குழு உறுப்பினர் தேர்தலில் முதல் முறையாக அஞ்சலி சோக்சி என்னும் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் நின்றவர்களில் இரண்டாவது அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளார். இந்த பிரிவு ஆரம்பித்து 18 வருடங்களில் குழு உறுப்பினராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel