திட்டத்தின் நோக்கங்கள்
- ஏழ்மையான பெற்றோர்களுக்கு அவர்களது மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் நிதியளவில் உதவுவதற்கும், ஏழை பெண்களின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும்.
 
வழங்கப்படும் உதவிகள்
- திருமாங்கல்யம் செய்வதற்காக ரூ.25,000 மற்றும் 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயம் வழங்கப்படும்.
 - திருமாங்கல்யம் செய்வதற்காக ரூ.50,000 மற்றும் 8 கிராம் (1 சவரன் – 22 காரட்) தங்க நாணயம் வழங்கப்படும்.
 
தகுதியுடைய பயனாளிகள்
- இவ்வுதவி பெண்களின் தந்தை (அ) தாயின் பெயரில் வழங்கப்படும்.
 - பெற்றோர்கள் இறந்து விட்ட நிலையில் இவ்வுதவி மணப்பெண்ணிடம் வழங்கப்படும்.
 
வருமான வரம்பு
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.24,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 
வயது வரம்பு
- மணப்பெண் திருமணத்தின் போது 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
 - இதில் உச்ச வயது வரம்பு இல்லை.
 


