Type Here to Get Search Results !

தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017

  • இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவைஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • 25,000 மருத்துவர்களை உறுப்பினராகக் கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய தனியார் மருத்துவர்களின் அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை உள்ளடக்கிய தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைத்தார். 
  • எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இறுதித்தேர்வு தேசிய அளவில் நெக்ஸ்ட் (NEXT – National Exit Test) என்ற பெயரில் நடத்தப்படும்.
  • ஆயுஷ் மருத்துவர்கள் நவீன மருத்துவ பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு ரத்து செய்யப்படும்.
  • தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் 50% இடங்களுக்கான கல்விக்கட்டணம் ஒழுங்குபடுத்தப்படும்.
  • தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை தலா 6 பேர் இடம்பெறுவர்.
  • விதிமுறைக்கு முரணாக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
  • தகுதியற்றவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது தெரியவந்தால் ஒராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் தண்டையாக அளிக்கப்படும்.
  • மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவறையற்ற வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


            Post a Comment

            0 Comments
            * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

            Top Post Ad

            Below Post Ad

            Hollywood Movies

            close

            Join TNPSC SHOUTERS Telegram Channel

            Join TNPSC SHOUTERS

            Join Telegram Channel