Type Here to Get Search Results !

நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)

  • நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA) வேளாண் உற்பத்தியை குறிப்பாக, மழைபெறும் பகுதிகளில் பெருக்குவதற்காக உருவாக்கப்பட்டது. 
  • ஒருங்கிணைந்த பண்ணையம், தண்ணீரைத் திறம்படப் பயன்படுத்துதல், மண் ஆரோக்கிய மேலாண்மை, வளங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் இந்தத்திட்டம் கவனம் செலுத்தும்.
முக்கியமான நோக்கங்கள்
  • உற்பத்தித்திறம் மிகுந்ததாக, நீடித்து நிலவக்கூடியதாக, வருவாய் தரக்கூடியதாக, பருவ நிலைகளுக்கேற்ப மீளும் தன்மை உடையதாக வேளாண்மையை மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை முறைகளைக் கையாளுவதை ஊக்குவிப்பது.
  • பொருத்தமான மண்பாதுகாப்பு, ஈரப்பதப் பாதுகாப்பு முறைகளின் மூலம் இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாத்தல்,
  • மண் வளத்திட்டங்களின் அடிப்படையிலும், மண் பரிசோதனை அடிப்படையிலும் பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்களை அளித்து, தேவையான அளவுக்கு உரங்களை முறையாகப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த மண் ஆரோக்கிய நிர்வாகத்தைப் பின்பற்றுதல்.
  • நீர்வளங்களைத் திறம்பட நிர்வகித்து அவற்றின் அதிகபட்ச பயனைப் பெற்று, விளைநிலப்பரப்பை அதிகரித்து ஒவ்வொரு துளி நீருக்கும் அதிகமான விளைச்சல் என்ற இலக்கை எட்டுவது.
  • விவசாயிகள், விவசாயத்தில் தொடர்புடைய அனைவரது திறமைகளையும் பருவநிலை மாற்றத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், தனிப்பு நடவடிக்கைகள் ஆகிய தளங்களில் செயல்படும் பிற திட்டங்களான வேளாண் விரிவாக்கம், தொழில் நுட்பத்திற்கான தேசியத்திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், பருவநிலைகேற்ப மீளும் தன்மை கொண்ட வேளாண்மைக்கான தேசிய முன்முயற்சி (NICRA) போன்ற திட்டங்களை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி வளர்த்தல்.
  • NICRA மூலம் செம்மைப்படுத்தப்பட்டிருக்கும், மழைப்பகுதிகளில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பரவலாக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் முன்னோடி மாதிரி வாய்ப்புத் திட்டம் (MGNREGS), ஒருங்கிணைந்த நீர்வடி மேலாண்மைத்திட்டம் (IWMP). ராஷ்டிரீய க்ருஷி விகாஸ் யோஜ்னா (RKYV) போன்ற பிற திட்டங்களின் வள ஆதாரங்களை நெம்புகோல்களாகப் பயன்படுத்திக் கொண்டும் இந்தத்திட்டம் செயல்படும்.
  • பருவநிலை மாற்றத்துக்கான தேசியத்திட்டத்தின் ஆதரவில் செயல்படும் நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டத்தின் முக்கியமான நோக்கங்களை அடைவதற்காக துறைகளுக்குள்ளும், துறைகளுக்கு இடையேயும் ஒருங்கிணைப்பை உருவாக்குவது.
நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA) பின்வரும் நான்கு முக்கியமான திட்டக்கூறுகள் அல்லது செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது.
1. மழைநீர் வளப்பகுதிகளின் வளர்ச்சி (RAD)
  • வேளாண் வழி முறைகளோடு இணைந்த இயற்கைவள ஆதாரங்களின் பாதுகாப்பிற்கும், மேம்பாட்டிற்கும் அந்தந்தப் பகுதிகளுக்கு இசைவான அணுகுமுறைகளை RAD – மழைபெறும் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்கிறது. 
  • இயற்கைவள ஆதார அடிப்படை / ஆஸ்திகள் / நீர்வடிமேம்பாடு, மண் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உருவான வளங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் (MGNREGS) ஓருங்கிணைந்த நீர்வடி மேலாண்மைத்திட்டம் (IWMP), மழைபெறும் பகுதிகளில் வடிநீர் மேம்பாடுத்திட்டம் (NWDPRA), ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டங்களும் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆறுகளும் (River Valley Objects and Flood Prone Rivers) போன்ற திட்டங்களின் மூலம் உருவான வளங்கள் ஆகியவற்றை முறைப்படுத்தி செயல்திட்டங்களை உருவாக்கும் பகுதியாகும் இது.
2. நிலத்தின் மீது நீர் நிர்வாகம் (OFWM)
  • நிலத்தின் மீது நீர்நிர்வாகத்தை அதற்கான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் கொண்டு திறம்பட நிர்வகிப்பது பற்றி இந்தக் கூறு கவனம் செலுத்துகிறது. திறமான நீர் நிர்வாகம் மட்டுமின்றி RAD செயல்பாடுகளுடன் இணைந்த திறமைன அறுவடை, மழைநீர் நிர்வாகம் ஆகியவற்றையும் இந்தக்கூறு வலியுறுத்துகிறது. 



3. மண்வள நிர்வாகம் (SHM)
  • குறிப்பிட்ட இடங்களையும் குறிப்பிட்ட பயிர்வகைகளையும் மனதில் கொண்டு நீடித்த மண்வள நிர்வாகம் மேற்கொள்ளப்படும். வேளாண் கழிவுகளை நிர்வகித்தல், இயற்கை வேளாண்மை நடைமுறைகள் போன்றவை இடம் பெறச் செய்யப்படும்.
  • மண்ணின் (அமில / கார / உண்பு) பிரச்சனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்தத்திட்டக்கூறு மூலம் ஆதரவளிக்கப்படும். மாநில அரசுகள், இயற்கை வேளாண்மைக்கான தேசியமையம் (NCOF), மத்திய உர தரநிர்ணயம் மற்றும் பயிற்சி நிறுவனம் (CFQC&TI), மண் மற்றும் நிலப்பய்னபாட்டு அளவை அமைப்பு (SLUSI) ஆகியவற்றின் மூலம் இவை செயல்படுத்தப்படும்.
4. பருவநிலை மாற்றமும் நீடித்த வேளாண்மையும் : மேற்பார்வையிடல், மாதிரிகளை உருவாக்குதல், கூட்டமைப்பை ஏற்படுத்துதல் (CCSAMMN)
  • பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய இருவழி (நிலம் / விவசாயிடமிருந்து ஆய்வு /அறிவியல் அமைப்புகளிடமிருந்து விவசாயிக்கு) தகவல் தொடர்பை இது உருவாக்குகிறது. 
  • உள்ளூர் அளவில் உற்பத்தி நீடித்திருப்பதற்கு வகை செய்யும் அரசின் முன்னோடித் திட்டங்களான MNREGS, IWMP, AIBP, RKVY, NFSM, NHM, NMAET போன்றவற்றுடன் ஒருங்குவித்தும், ஒன்றிணைந்தும் செயல்படுவது, ஆகியவை வேளாண்மை, கால்நடை வளர்ச்சி போன்றவற்றில் வளர்ச்சியைப் பெருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel