Type Here to Get Search Results !

கிராமின் பந்தரன் யோஜனா

கிராமப்புறக் கிடங்குகளுக்கான தேவைகள்
  • கிராமப் புறங்களில் உள்ள சிறு-குறு விவசாயிகள் தமது வினைபொருள்களுக்கு ஏற்ற விலை கிடைக்கும் வரை சேமித்து வைக்க கூடிய பொருதார பலம் அற்றவர்கள். 
  •  எனவே கிராமப்புறங்களில் அவர்களது விளைப்பொருள்களைச் சேமித்து வைக்கக் கிடங்குகள் இருந்தால் அங்கே சேமித்துவைத்து, நல்ல விலை வரும்போது அவர்கள் தம்பொருள்களை விற்றுக்கொள்ளலாம். இந்த நோக்கத்தில்தான் மத்திய அரசு 2001 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து கிராமின் பந்தரன் யோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
திட்டத்தின் நோக்கம்
  • விவசாய விளைபொருள்கள், பதப்படுத்தப்பட்ட விளைபொருள்கள், விவசாய இடுபொருள்கள், போன்றவற்றை விஞ்ஞான முறையில் சேதம் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருந்து அவற்றை அடமானமாகக் கொடுத்துக் கடன் பெற உதவுவதும் நல்ல விலை வரும்போது விற்று கொள்ள உதவுவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.



மானிய உதவியின் அளவு
  • வட கிழக்கு மாநிலங்கிளிலும், மலைப்பிரதேசங்களிலும் அமைக்கப்டும் கிடங்குகளுக்கும் விவசாயம் செய்யும் பெண்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் அவர்களால் ஆன சுயஉதவிக்குழுவினர் ஆகியோர் அமைக்கும் கிடங்குகளுக்கும் மொத்தச் செலவில் மூன்றில் ஒரு பங்கு (33.33 சதவீதம்) மானியம் வழங்கப்படும். 
  • எனினும் இந்த இனத்தில் மானியத்தின் மொத்த அளவு ரூ.62.5 லட்சம் என்ற உச்ச வரம்பைத் தாண்டாது. தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் உதவியுடன் கூட்டுறவு அமைப்புகள் கட்டும் கிடங்குகளுக்கு மானியத்திற்கு உச்சவரம்பு கிடையாது. மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கு மானியமாகத் தரப்பட்டுவிடும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel