Type Here to Get Search Results !

கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்

அறிமுகம்
  • சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், நலவாழ்வு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை எவ்வித பாலின பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே கிராமாலயாவின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.
நவீன (ஸ்மார்ட்) தனிநபர் கழிப்பறை
  • Safe and Sustainable –சுகாதாரமான மற்றும் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக்கூடியது.
  • Maintanable - எளிதில் பராமரிக்கக்கூடியது
  • Affordable - எல்லோரும் கட்டிப் பயன்படுத்தக்கூடியது.
  • Recyclable- கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாகப்பயன்படுகிறது
  • Technically Perfect- சரியான தொழில் நுட்ப வசதியுடன் கூடியது
நவீன கழிப்பறையின் முக்கிய அம்சங்களாவன
  • குளியலறையுடன் கூடிய கழிப்பறையை குடும்ப உறுப்பினர்கள் எல்லா சுகாதார செயல்பாடுகளுக்கும் குறிப்பாக தன் சுத்தம் பேணுவதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிது.
  • கழிப்பறையாகப் பயன்படுத்தலாம்.
  • சோப்புடன் கூடிய கை கழுவும் வசதிகள் இருக்கும்.
  • கழிப்பறைக்குள் சுகாதாரம் சம்மந்தப்பட்ட பற்பசை, பிரஷ், சோப், ஷாம்பு போன்ற எல்லா பொருட்களும் இருக்கும்..
  • சுத்தம் செய்வதற்குத் தேவையான தண்ணீர் தொட்டி வசதி உள்ளே அமைக்கப்பட்டிருக்கும்.
  • நல்ல காற்றோட்ட வசதி இருக்கும்.
  • சானிட்டரி நாப்கின்களை (மாதவிடாய் துணி) முறையாக அப்புறப்படுத்த தேவையான எரியூட்டி வசதி இருக்கும்.
  • கழிப்பறைக்குள் போதிய மின் விளக்கு, வெளிச்சம் இருக்கும்..
  • மழை மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க நல்ல மேற்கூறை அமைக்கப்பட்டிருக்கும்.
  • நன்கு பராமரிக்கவும் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த இருமலக்குழிகளுடன் கழிப்பறை வசதி இருக்கும்.
  • கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாகப் பயன்படுத்த இயலும்.
  • உபயோகிப்பாளரின் வசதிக்கேற்ப கழிப்பறை அமைக்கப்பட்டிருக்கும்.
கிராமாலயாவின் சுகாதாரத்திட்டங்கள்
  • தற்சமயம் கிராமாலயா திருச்சிராப்பள்ளி, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களிலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி குடிசைப்பகுதிகளிலும் பணிசெய்து வருகிறது. 
திட்டத்தில் இணையதளத்தின் பயன்பாடு
  • தன்னார்வலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 பஞ்சாயத்து தலைவர்களும், www.thebigcleanupindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுவார்கள். மேற்கூறிய இணையதளம் தமிழில் www.thooimaitamilnadu.org என்ற இணையதளம் வழியாக செய்திகள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களுடன் செயல்படும்.
  • இத்திட்டத்தினை செயல்படுத்த ஆர்வமாக உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தின் மூலம் தங்கள் விருப்பத்தினை கிராமாலயாவிற்கு தெரிவிக்கலாம்..
  • இத்திட்டத்தில் பங்கேற்கும் பஞ்சாயத்து தலைவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், வருடந்தோறும் நடைபெறும் உலக கழிப்பறை தினவிழாவில் (நவம்பர்’19) சுகாதார திட்டத்தில் முன்மாதிரியாக செயல்படும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படும்..



இந்திய அரசின் முக்கிய வள ஆதார மைய அங்கீகாரம்
  • திருச்சிராப்பள்ளியில் உள்ள கிராமாலயா தொண்டு நிறுவனம், புது டில்லியல் உள்ள மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தினால் முக்கிய வள ஆதார மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • தென் மாநிலங்களில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டில் அரசு அலுவலர்களுக்கு ஒரு பயிற்சி நிறுவனமாக இயங்குவதற்கு இந்திய அரசு அங்கீகாரம் செய்துள்ளது. கிராமாலயாவின் ஒரு அங்கமாக விளங்கும் நிவாஸ் என்று அழைக்கப்படும் தேசிய அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார பயிற்சி மையம்.
  • மேலும், யூனிசெஃப் (சென்னை), வாட்டர் எய்டு (யு.கே), வாட்டர்.ஆர்க் (யு.எஸ்.ஏ), ஆர்கியம் (பெங்களுர்) அகிய நிறுவனங்கள் மற்றும் மத்திய மாநில அரசின் தற்போதைய ஸ்வச்ச் பாரத் மிஷன் என அழைக்கப்படும் தூய்மை இந்தியாத் திட்டத்திலும் கிராமாலயா இணைந்து பணி செய்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel