Type Here to Get Search Results !

ஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)

நோக்கம்
  • ஸ்வச்பாரத் இயக்கம் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு பாதி தூரம் கடந்துள்ள நிலையில், இந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் வேகம் ஏற்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. 
  • கடந்த 2014 அக்டோபர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல், நாட்டின் கிராமப்புறங்களில் துப்புரவு உள்ளடக்கம் 42% முதல் 63 சதவிகிதமாக அதிகரித்திருப்பதுடன், இந்திய கிராமப்புறங்களில் திறந்த வெளியில் இயற்கை உபாதையைக் கழிப்பவர்களின் எண்ணிக்கை 550 மில்லியனில் இருந்து 330 மில்லியனாக குறைந்திருப்பதுடன், 190,000 கிராமங்கள், 130 மாவட்டங்கள் மற்றும் மூன்று மாநிலங்கள் திறந்த வெளி கழிப்பிடங்கள் அற்றவையாக மாறியுள்ளன. 
  • 2019 அக்டோபர் 2ஆம் தேதி திறந்தவெளி கழிப்பிடங்கள் அற்ற இந்தியா என்ற நிலையை அடையும் வகையில் இந்தத் திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
செயல்பாடுகள்
  • துப்புரவுக்கு முன்னுரிமை அளிப்பது பல்வேறு காரணங்களால் முக்கியமாகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்றுப் போக்கு பாதிப்பால் அவதிப்படுவதற்கு போதிய கழிவறைகள் இல்லாததே காரணமாக அமைகிறது. 
  • துப்புரவு என்பது பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரு பெரும் பொருளாதாரமாகத் திகழ திறந்த வெளிக் கழிப்பிடங்களை அகற்றுவது முக்கியமானதாக உள்ளது.
  • தூய்மை இந்தியா இயக்கம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு திறன் மேம்பாடு, மனித ஆதாரங்கள், பழக்க வழக்க மாற்றத்திற்கான தொடர்பு, அறிவாற்றல் பகிர்வு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்டவை மூலம் மாநில அரசுகளுக்கு குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது. 



தொழில்நுட்ப வளர்ச்சி
  • ஸ்வச் பாரத் இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதுடன், கழிப்பறைத் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டியதும் முக்கியமாகும். செலவும் மறுபயன்பாடு மற்றும் நீடித்திருப்பது ஆகியவற்றில் கிராமப்புறப் பகுதிகளுக்கு இரட்டை குழி மாதிரி ஏற்ற தொழில்நுட்பமாக இருக்கும். 
  • தனியார் பங்களிப்பு அதிகரிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் டாடா டிரஸ்ட் நிறுவனம் மாவட்டம் ஒன்றுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் 600 பேரை நியமித்து அவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
  • பிரதமரின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பொதுத் துறையும் செயல்படுகிறது. ஒவ்வொரு மத்திய அமைச்சகமும் தூய்மைக்கான செயல் திட்டத்தை உருவாக்கி அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. 2017-18இல் அனைத்து அமைச்சகங்களும் இணைந்து தூய்மை தொடர்பான பணிகளுக்காக ரூ. 5000 கோடி செலவிட திட்டமிட்டுள்ளன.
  • பொற்கோயில், திருமலை திருப்பதி கோயில் போன்ற முக்கியமான இடங்களைத் தூய்மைப்படுத்த பணிகள் நடத்தப்பட்டு வருவது அனைத்து துறைகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு உதாரணமாகும்.
திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை
  • திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை என்பதும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகும். திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லை என்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமத் தூய்மைக்கான குறியீடு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கிராம மக்கள் தாங்களாகவே குறியீட்டை நிர்ணயித்துக்கொள்வார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel