சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்

ஆங்கிலேயர் கால வன மேலாண்மைச் சட்டம்
 • இப்படிபட்ட சூழலில்தான் இயற்கையை மனித குலத்திடம் இருந்து பாதுகாக்க இந்தியாவிற்குள் நுழைந்த காலத்தில் மெக்கேலேயால் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இயற்றப்பட்டு சுற்றுச்சூழலை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு தண்டனை வழங்க வகை செய்தது. Fifth Indian Easements Act 1882ன் படி சுற்றுச்சூழல், காற்று, நீர் மாசுபடுவதை தடை செய்கின்றன. 
 • காடுகளை பாதுகாக்க இந்திய வனச்சட்டம் 1865ல் இயற்றப்பட்டு மீண்டும் 1894ம் ஆண்டு வணக்கொள்கை கொண்டுவரப்பட்டது. பின்பு 1927ல் கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட இந்திய வனச்சட்டம் காடுகளை ஒதுக்கப்பட்ட காடுகள், கிராமப்புர காடுகள், பாதுகாக்கப்பட்ட காடுகள், அரசு சாரா காடுகள் என நான்கு பிரிவுகளாக பிரித்து வனக் கொள்கைகளை கடைபிடிக்கவும், பாதுகாக்கவும், தேவையான விதிகளும் ஒழுங்கு முறைகளும் வகுக்கப்பட்டன. 
 • 1893ல் வட இந்திய கால்வாய் மற்றும் கழிவுநீர் சட்டம், 1923ல் இந்திய கொதி கலன் சட்டம், 1908ல் உரிமையியல் நடைமுறைச் சட்டம், தீங்கியல் சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் வனங்களையும் நீர், காற்று மாசுவை மீறுவோர் மீது தண்டிக்கவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வகை செய்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்கள்
 • வாழும் சூழல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மேலோங்கியதின் பயனாய் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் இந்தியா வலிமையான, சிறப்பான சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றியது. 
 • அதாவது தொழிற்சாலைச் சட்டம் 1948, இந்திய சுரங்கங்கள் சட்டம் 1952, மிருகவதை தடுப்புச் சட்டம் 1960, அணுசக்தி சட்டம் 1962 மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ல் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தியது. 
 • இச்சட்டங்கள் மூலம் சுற்றுச்சூழலை மீறுவோர்கள்மீது தண்டனை வழங்க வகை செய்யப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் மாசு என்பது இந்தியாவை மட்டும் பாதிக்கும் ஒரு காரணியாக இல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் சுற்றுச்சூழல் மாசு பரவி விபரீத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதால் அனைத்து உலக நாடுகளும் ஐநா சபையின் வழிகாட்டுதலின் பெயரில் சட்டங்கள் இயற்ற ஐ.நா கதவைத் தட்டின. 
 • இதன் விளைவாக ஐ.நா சபை பல வழிகாட்டு நெறிமுறைகளையும், நிதி உதவிகளையும் வழங்கி உலக நாடுகள் சுற்றுச்சூழலைப் பேணிகாக்க பல்வேறு வகையான சட்டங்கள் இயற்ற உதவி புரிந்தன.
ஸ்டாக்ஹோம் பிரகடனம்
 • ஸ்டாக்ஹோம் பிரகடனம் அடிப்படையாகக் கொண்டு உலகில் பல நாடுகள் தானாக முன் வந்து சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை வகுத்துக்கொண்டன. இந்திய நாடாளுமன்றமும் இதற்கு ஆதரவு தரும் பொருட்டு ஏற்கனவே இருந்த சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வந்ததுடன் பல புதிய சட்டங்களும் இயற்றின.
 • 1974ல் கொண்டுவரப்பட்ட தண்ணிர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு சட்டம்) காற்று (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு சட்டம்)
 • 1981, பொதுப்பொருப்பு காப்பீட்டுச் சட்டம்
 • 1991, வனப் பாதுகாப்புச் சட்டம்
 • 1980, சுற்றுச்சூழல் பாதிப்பு அளவிடல் சட்டம்
 • 1997, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்
 • 1986ல் கொண்டுவரப்பட்டன. இந்தியா வலிமையான சிறப்பாக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தை கொண்டுள்ளது.
 • உலகின் சுற்றுச்சூழல் சட்டங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் ஒன்றாகும். 1976ம் ஆண்டில் 42வது அரசியல் சட்டதிருத்தத்தின்படி இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 48(A) மற்றும் 51Ag) பிரிவுகளின்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விதி 48-A
 • விதி 48-A படி குடிமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும், வளம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்கவும் முயல வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
விதி 51-A (g)
 • இந்த விதி நாட்டின் இயற்கை சூழலான வனம், ஏரி, ஆறு மற்றும் வன விலங்குகள் ஆகியவற்றை பாதுகாக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும், உயிரினங்கள் மீது பரிவு காட்டுவது குடிமக்களின் கடமை என்று கூறுகிறது.உயிரியல் பல்வகை சட்டம் (Biological Diversity Act - 2002)
 • 1992ல் கையெழுத்தான ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு. அதாவது காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபு பொருட்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவைப் பாதுகாக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 
 • இந்தச் சட்டப்படி பிரிவு 3 அல்லது 4 அல்லது 6 ஆகியவற்றின் கீழ் கொண்டு வரப்பட்ட வகையங்களை மீறுகிறோர் அல்லது எவரையும் மீற தூண்டுகிறாரோ அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். 
 • தீவிரமாக சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் வாரியத்தை தண்ணீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் 1974ன் படி அமைத்தது. அந்த வகையில்தான் தமிழ்நாடு அரசு மாசு கட்டுபாட்டு வாரியத்தை 1974ம் ஆண்டு நீர் மத்திய அரசு சட்டம் 6ம் படி 27.02.1982 அன்று அமைக்கப்பட்டது. 
 • இது 1974ம் ஆண்டு நீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1997ம் ஆண்டு நீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு) மேல் வரி சட்டம், 1981ம் ஆண்டு காற்று (மாசு தடுத்தல் மற்றும் கட்டுபாடு) சட்டம் மற்றும் 1986ம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் அடங்கிய பின்வரும் விதிகளின்கீழ் செயல்படுகிறது. 
 • 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், திருத்தப்பட்ட 2008ம் ஆண்டின் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் விதிகள், 1994ம் ஆண்டு மற்றும் 2000ம் ஆண்டுகளில் திருத்தப்பட்ட 1989ம் ஆண்டு அபாயகரமான இரசாயனங்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள், 2000 மற்றும் 2003ம் ஆண்டில் திருத்தப்பட்ட 1998ஆம் ஆண்டு மருத்துவ நுண்ணுயிர் கழிவு விதிகள், 2011ம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் விதிகள், 2000ம் ஆண்டு ஒலி மாசு விதிகள், 2000ம் ஆண்டு நகர திடக்கழிவுகள் விதிகள், திருத்தப்பட்ட 2001ம் ஆண்டு மின்கலன்கள் விதிகள், 2011ம் ஆண்டு மின்னணுக் கழிவுகள் விதிகள் போன்ற சட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் மாசுவை தடுத்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வழிவகுக்கிறது. 
 • இப்படி இந்தியா சுற்றுச் சூழல் சட்டங்களை சரியாக செயல்படுத்தியதன் விளைவுதான், உலகிலேயே மிக குறைந்த அளவு கரியமில வாயுக்களை வெளியேற்றுகின்றன.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel