Type Here to Get Search Results !

பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்

  • வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் பெண்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் திட்டமாகும் இது.
திட்டத்தின் தேவை
  • இந்தியாவில் ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைப்பதில்லை. எரிவாயு உருளைகளில் பெரும்பகுதி நகரங்களிலும், சிறு நகரங்களிலும் உள்ள வசதி படைத்தோருக்கும், மத்தியதர வர்க்கத்தினருக்கும் மட்டுமே பரவலாக வழங்கப்பட்டு வருகிறது. 
  • வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கும் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு தருவதன் மூலம் நாட்டிலுள்ள அனைவருக்கும் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இந்த முயற்சி பெண்களுக்கு அதிகாரம் வழங்கி உடல் நலத்தையும் பாதுகாக்கும். சமையல் நேரத்தை மிச்சப்படுத்தி சமையலுக்காக செலவிடப்படும் மட்டு மீறிய உழைப்பையும் குறைக்கிறது. சமையல் எரிவாயு வழங்கும் செயல் முறையில் ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
பயனாளிகள்
  • வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள குடும்பங்களைக் கண்டறியும் முயற்சி மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும். 
  • சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு SECC-2011 (வாரகம்) படி குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு இடர்ப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் அல்லது குடும்பம் வறுமைக் கோட்டிற்கு (BPL) கீழ் இருப்பதாகக் கருதப்படும் நகர்புற ஏழைகளை அடையாளம் காண்பதற்கு தனிவகையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களில் இருந்து மட்டுமே பயனாளிகள் தெரிவுசெய்யப்படுவார்கள் என்றாலும் சமூகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ்மக்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்படும். BPL குடும்பங்களுக்கு புதிய இணைப்புகள் வழங்கும்போது ஜனவரி 1, 2016 நாளின்படி குறைவான எரிவாயு இணைப்புகளைக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
திட்டத்தின் கால அளவு
  • இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தப்படும், 2016-2017, 2017-2018, 2018-2019 நிதியாண்டுகளில் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும்.



குடிமக்களுக்கு கிடைக்கும் ஆதாயங்கள்
  • இந்தத் திட்டத்தின் கீழ் 5 கோடி BPL குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு ஒவ்வொரு இணைப்பிற்கும் ரூ.1600 நிதி உதவி வழங்கப்படும். 
  • நிரிவாகச் செலவிற்காக இத்தொகையில் எரிவாயு உருளை, ரெகுலேட்டர், விவரப்புத்தகம், பாதுகாப்பான எரிவாயுக் குழாய் ஆகியவற்றை வழங்குவதும் அடங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel