Type Here to Get Search Results !

உஜாலா திட்டம்

  • ஒரு சாதாரண பல்பு எரியும் போது எரிசக்தி மிகவும் விரையமாகிறது. அந்த பல்பு எரிவதற்காக அனுப்பப்படும் மின்சக்தியில் ஐந்து சதவீதம் மட்டுமே வெளிச்சமாக மாறுகிறது. 
  • ஆனால் ஒரு சாதாரண பல்புக்கு வேண்டிய மின்சக்தியில் பத்தில் ஒருபங்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு அதே அளவு பிரகாசமான ஒளியை எல்இடி (LED) என்கிற ஒளி உமிழும் டையோடுகளால் ஆன பம்புகள் தருகின்றன. 
  • எனினும் எல்இடி பல்புகளின் விலை அதிகமாக இருப்பதால் பலரும் அதைப் பயன்படுத்தவில்லை. அதனால் மின்சார சிக்கனமும் ஏற்படவில்லை. இதனைத் தாண்டி வருவதற்காக உஜாலா (UJALA) என்ற நிதி உதவித்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. எல்லாருக்கும் வாங்கத்தக்க விலையில் எல்இடி பல்புகளை வழங்கும் உன்னத ஜோதித்திட்டம் என்பதன் சுருக்கமே “உஜாலா” என்பதாகும்.



நோக்கம்
  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மின்சார சிக்கனமுள்ள விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் மின்சிக்கனமுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மின்கட்டணச் செலவைக்குறைத்து அதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குத் துணைபோவதும்தான்.
இலக்குகள்
  • 20 கோடி சாதாரண பல்புகளை மாற்றி, (LED) பல்புகள் வழங்குவது.
  • ஆண்டு ஒன்றுக்கு சுமார் 105 கோடி கிலோ வாட் மின்சாரத்தைச் சேமிப்பது
  • மின்சார நிலையங்களின் உற்பத்தியில் சுமார் 5000 மெஹாவாட் குறைப்பது
  • நுகர்வோரின் மின்கட்டணச் செலவில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடியைக் குறைப்பது.
  • பசுமை இல்ல வாயு (கார்பண்டை ஆக்ளைடு) வெளியேற்ற அளவை ஆண்டுக்கு 7.9 கோடியுடன் குறைப்பது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel